Showing 501–520 of 568 results

  • யூசும் நபியும் சகோதரர்களும் (குர்ஆனிய கதைகள் – 8)

    நபி யாகூப் (அலை) அவர்களின் 12 மகன்களில் யூசும் நபியும் ஒருவர் – அவரின் மீது தந்தைக்கு இருந்த பேரன்பு மற்ற சகோதரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. பின்னர் நபி யூசுபை அவரின் சகோதரர்கள் சூழ்ச்சி செய்து கிணற்றில் வீச அவ்வழி வந்த பயணக் கூட்டம் அவரை எடுத்துச் சென்று சந்தையில் விற்க அவரை எகிப்து மன்னர் தத்தெடுத்து வளர்க்க பிற்காலத்தில் அவரும் இளவரசராக மாற இறுதியில் யூசுபின் மற்ற சகோதரர்களும் யாகூப் (அலை) அவர்களும் ஒன்று சேர்ந்ததைக் குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.

     

    Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    7077
  • யூனுஸ் நபி (அலை) (குர்ஆனிய கதைகள் – 7)

    யூனுஸ் நபி (அலை) அவர்களின் அழைப்புப் பணி – அவரின் சமுதாயத்தின் சிலை வழிபாடு – யூனுஸ் நபி (அலை) மனம் உடைந்து ஊரைவிட்டு புறப்படுதல் – இறைவன் யூனுஸ் நபி (அலை) அவர்களை மீன் வயிற்றில் சிக்கவைத்து படிப்பினையூட்டுதல் – யூனுஸ் நபியின் பிரார்த்தனை  குறித்தும் திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.

     

    Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    7077
  • ரமளானே வருக

    Author: KHURRAM MURAD
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    80
  • ரமளானே வருக…! (மின்னூல் – E-Book)

    E-Book

    ரமளான் மாதத்தின் சிறப்புகள் என்ன?
    ரமளானிலிருந்து முழுமையாகப் பயனடைவது எப்படி?
    நாம் செய்ய வேண்டியதென்ன?
    இறையருள் பொங்கும் இனிய மாதத்தில், அருட்கடலில் மூழ்கி முத்தெடுக்க பத்து அம்சத் திட்டத்தைப் பட்டியலிடுகிறார் குர்ரம் முராத்.

    உருக்கமான நடையில் இதயத்தைத் தொடுகிற விதத்தில் விவரிக்கின்றார், குர்ரம் முராத்.

    ரமளானே வருக

    3060
  • ரஜப் தய்யிப் எர்டோகன்

    நவீன உலகின் ஆற்றல்மிகு ஆட்சியாளர்களில் ஒருவர்தான் துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் எர்டோகன். முஸ்லிம் உலகில் அவரைப் போல் மனவலிமையும் ராஜதந்திரமும் செயலாற்றல் உணர்வும் நிறைந்த மற்றொரு ஆட்சியாளரைக் காண்பது அரிது. தமது பண்பாட்டைக் கைவிடாமலேயே பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சொந்தக் காலில் நிற்கும் வகையில் நவீன துருக்கியைச் செதுக்கியவர் என்பதுதான் எர்டோகனின் பெரும் சாதனை ஆகும். மதச்சார்பற்றத் தன்மை என்னும் பெயரில் அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, துருக்கி மண்ணில் அதனுடைய பண்பாட்டையும் பாரம்பர்யத்தையும் அத்தாதுர்க் குழிதோண்டிப் புதைத்த இடத்திலிருந்து மிகவும் சாதுர்ய மாகவும் அறிவுபூர்வமாகவும் செயல்பட்ட எர்டோகன், துருக்கியின் உஸ்மானிய, இஸ்லாமியப் பாரம்பர்யப் பெருமையை மீட்டெடுத்தார். ஆகவே துருக்கியின், எர்டோகனின் வரலாறும் செய்திகளும் அரசியல் மாணவர்களைப் பொறுத்தவரை பெரும் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் என்பதில் ஐயமில்லை.

    170
  • வட்டி ஒரு கொடுமை

    வட்டி பொருளாதார  வளர்ச்சிக்கு எவ்வகையிலும் பொருந்தாது என்பதனை நிரூபிக்கும் இந்நூல் அறிவுத் தொடர்பானது! ஆற்றல் மிக்க விளக்கங்கள் தருவது!

    Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    35
  • வட்டியை ஒழிப்போம்

    வட்டி என்பது நீதிக்கும் மானுட உணர்வுக்கும் எதிரானது என்பதையும், வாழ்வின் நிம்மதியை அழிக்கக் கூடியது என்பதையும் குறைவான சொற்களில் நிறைவாக விளக்குகிறார் நூலாசிரியர். பொருளாதார நீதி நிலைகுலைந்து போனதற்குக் காரணமே வட்டி அடிப்படையிலான தற்கால வங்கிகள்தாம் என்று மேற்கத்திய பொருளியல் மேதைகள் கூறுவதையும் நூலாசிரியர் தக்க ஆதரங்களுடன் எடுத்துரைக்கிறார். வட்டியை ஒழிப்பதற்கான மாற்று ஏற்பாடாக லாப, நஷ்டத்தில் பங்கு வகிக்கும் வட்டியில்லா வங்கிமுறை பற்றிச் சுருக்கமாக இந்நூல் விளங்குகிறது நூலாசிரியர் டாக்டர் உமர் சாப்ரா பன்னாட்டளவில் புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் ஆவார். சர்வதேச அளவில் நடைபெற்ற இஸ்லாமியப் பொருளியல் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தவர்.

    Author: DR. M. UMER CHAPRA
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    40
  • வரதட்சணை எனும் அவமானம்

    குடும்பத்தின் அமைதியையும் சமுதாயத்தின் நல்லொழுக்கத்தையும் சீர்குலைத்துக் கோரத் தாண்டவமாடும்வரதட்சிணை எனும் கொடுமையை எப்படி ஒழிப்பது? அதன் ஆணிவேரையே அசைத்துப் பிடுங்கி எறிய வழிகாட்டும் நூல் இது…!

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    40
  • வரதட்சிணை எனும் அவமானம் (மின்னூல் – E-Book)

    E-Book

    குடும்பத்தின் அமைதியையும் சமுதாயத்தின் நல்லொழுக்கத்தையும் சீர்குலைத்துக் கோரத் தாண்டவமாடும்வரதட்சிணை எனும் கொடுமையை எப்படி ஒழிப்பது? அதன் ஆணிவேரையே அசைத்துப் பிடுங்கி எறிய வழிகாட்டும் நூல் இது…!

    2540
  • வரலாறு படைத்த பெண்கள் – மௌலவி நூஹ் மஹ்ழரி

    இஸ்லாத்துடன் முஸ்லிம் பெண்களுக்கான தொடர்பு என்பது வெறும் புர்கா அணிவது மட்டுமே என்று அனேகமானவர்கள் கருதுகின்றனர். ஆயினும் உண்மையோ அதற்கு நேர்மாறாக உள்ளது. இஸ்லாம் என்பது உயர்ந்த விழுமியங்களாலும் சிறந்த சிந்தனைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு மார்க்கம். அது சமூகத்தளத்தில் பெண்களுக்கென தனிப் பங்களிப்பை வழங்கியுள்ளது.
    வேறெந்த மதமும் வழங்காத சகல உரிமைகளையும் இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது. இஸ்லாத்தைக் குறித்து தரக்குறைவாக விமர்சிப்பதற்கும், அபாண்டங்களை அள்ளி வீசுவதற்கும் பெண்கள் குறித்த இந்த அறியாமையையே தங்களுக்கான ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
    இது பெண்களுக்கான நூல் மட்டுமல்ல, மாறாக ஆண்களுக்குமான நூலும் கூட. இஸ்லாமிய மார்க்கம் நமது தாயை, நமது சகோதரியை, நமது மகளை எவ்வளவு தூரம் கண்ணியப்படுத்தியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொண்டால்தானே அதனை பிறருக்கும் எடுத்துச் சொல்லமுடியும்.
    அந்த அடிப்படையில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் மற்றும் உயரிய தகுதி குறித்து வரலாறு படைத்த பெண்கள் எனும் இச்சிறிய நூல் பேசுகிறது.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    100
  • வரலாறும் வகுப்புவாதமும்

    ‘ஒரு சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்க வேண்டுமெனில், அந்தச் சமூகம் குறித்த வரலாற்றை இல்லாமல் செய்துவிடவேண்டும்’ என்பதில் வகுப்புவாதிகள் குறியாய் இருக்கின்றார்கள். அவர்களின் குயுக்தியை வெளிச்சமிட்டுக் காட்டி உண்மையை உலகறியச் செய்கிறது இந்த நூல். பாடப்புத்தகத்தில் தொடங்கி எங்கெல்லாம், எப்படியெல்லாம் அவர்கள் வரலாற்றை மாற்றியமைத்தார்கள் என்பதை இந்த நூல் விசாரணை செய்கிறது.
    சுல்தான்கள், முகலாய மன்னர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அலசி, வரலாற்றின் வெளிச்சத்திலேயே உண்மைகளைப் போட்டுடைப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு.
    பாபர்மசூதியின் வரலாறு, பிரிவினைக்குப் பின்னால் உள்ள மெய்யான வரலாற்றுத் தகவல்கள், அம்பேத்கரின் நிலைப்பாடு, இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆகியவற்றை பேராசிரியர் அருணன், பேராசிரியர் தஸ்தகீர், டாக்டர் K. V. S. ஹபீப் முஹம்மத் ஆகியோர் மிக நேர்த்தியாகப் பதிவுசெய்துள்ளனர்.
    மருத நாயகம் கான் சாஹிபின் வீரவரலாறும், திப்பு சுல்தானின் கம்பீரமும் நம் கண்முன்னே அற்புதமாகச் செதுக்கப்பட்டு வாசகரின் உள்ளத்தில் பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் விதைக்கும்.
    இந்துத்துவம் ஆட்சியில் அமர்ந்துள்ள இன்றைய சூழலில் வரலாறு குறித்து எழும் அத்தனை வினாக்களையும் எதிர்கொண்டு ஆதாரங்களின் ஒளியில் புள்ளிவிவரங்களுடன்
    பதில்தரும் இந்த நூல் நம் காலத்தின் மகத்தான ஆவணம்.

    Author: PROF.ARUNAN / PROF. DASTAGEER / DR. K.V.S HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    80
  • வரலாற்றில் ஒரு திருப்பம்

    ஒவ்வொரு இயக்கத்தையும் நடத்துவதற்கு ஒரு வழிமுறை அவசியமாகிறது. இஸ்லாமிய இயக்கத்தை வழிநடத்து வதும், இதனை நிலைநாட்டுவதும் எவ்வாறு எனும் கேள்விக்கு ஓர் அருமையான பதிலாக இந்நூல் அமைந் துள்ளது.

    Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    40
  • வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்

    தெற்கே தரங்கம்பாடி – நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப்.
    ஐம்பது ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஔரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன.
    தன் சொந்த அண்ணன், தம்பியை அப்பட்டமாகப் படுகொலை செய்தவர்; தன்னை எதிர்த்த மகனையும், மகளையும் விரட்டிக் கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஔரங்கஜேப் பற்றி சொல்லிவரப்படும் தகவல்கள் உண்மைதானா? ஔரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா? பெண்களை அவமதித்தவரா? காதலிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் தந்தவரா? இல்லை.. இல்லை… இல்லவே இல்லை என்று ஆதாரங் களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் *செ.திவான்*.
    Author: S DIVAN செ திவான்
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST
    400
  • வரலாற்று ஒளியில் இஸ்லாம்

    மாச்சரியமின்றியும், சிந்தனைக் கட்டுப்பாடின்றியும், திறந்த மனதோடு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை இரத்தினச் சுருக்கமாக விளக்கும் நூல்!

    ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

    Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    12
  • வழிபாட்டின் வழிகள்

    தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் என வழிபாடுகள் அத் தனையும் பொலிவு பெற உதவும் குறிப்புகளை வழங்குவது இந்நூல்.

    Author: MOULANA MUHAMMAD YUSUF ISLAHI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    30
  • வாசிக்கும் குழந்தைகளே நாளைய வரலாறு

    இந்நூல் சிறந்த தலைமுறையை உருவாக்க விரும்பும் பெற்றோர்களுக்கான கையேடு.

    Author: Prof. Dr. Abdul Karim Bakkar
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    180
  • வாருங்கள் ரமளானை அறிவோம்

    ‘நோன்பு என்றால் என்ன? ஆண்டுக்கொரு முறை ரமளான் மாதத்தில் காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட பருகாமல் உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்றெல்லாம் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் நம்மிடம் கேள்வி எழுப்புவது உண்டு. அவர்களுக்குச் சரியான முறையில் விளக்கம் தரும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    25
  • வாழ்க்கை – தொட்டுவிடும் தூரம்தான்!

    காசேதான் கடவுளடா என்று வாழ்ந்தால்.. வசதியான வாழ்வு மட்டுமே லட்சியம் என்று மனம் போன போக்கில் வாழ்ந்தால்… நிம்மதி எங்கிருந்து கிடைக்கும்? ஒருநாளும் கிடைக்காது. இறை வழிகாட்டுதல் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்ந்தால்; சாதாரண மனிதன் காட்டும் பாதைகள் எவ்வாறு பயன் தரும்..? பயம்தான் வரும்!

    மனிதனின் பயத்தை போக்கி அவனை அழிவில்லா, அளவில்ல ஆனந்த வாழ்வின் பக்கம் வழிகட்டுகிறது இந்நூல்.

     

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    150