بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ ﴿1:1﴾
اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَۙ ﴿1:2﴾
الرَّحۡمٰنِ الرَّحِيۡمِۙ ﴿1:3﴾
مٰلِكِ يَوۡمِ الدِّيۡنِؕ ﴿1:4﴾
اِيَّاكَ نَعۡبُدُ وَاِيَّاكَ نَسۡتَعِيۡنُؕ ﴿1:5﴾
اِهۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَۙ ﴿1:6﴾
صِرَاطَ الَّذِيۡنَ اَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ ۙ غَيۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَيۡهِمۡ وَلَا الضَّآلِّيۡنَ
﴿1:7﴾
1:1 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:2 எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
1:3 அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான்.
1:4 இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
1:5 உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
1:6 எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக!
1:7 (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.
|