Author
DR. K.V.S. HABEEB MOHAMMED – டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
-
Let us Know Hijab
Hijab is now hotly debated all over India. Different people have diverse views about it.
What is the reason? Is it because of sheer ignorance? Or is it because of malice and ulterior motives of degrading Islam and Muslims?
The list of doubts and questions is endless.
This prompted the IFT to release a booklet on this issue. And this booklet in your hands is the outcome of that prompt endeavour.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அகிம்சை இஸ்லாமியக் கண்ணோட்டம்
“அகிம்சை, அகிம்சை” என்று சொல்வதால் மட்டும் வன்முறை ஒழிந்துவிடாது. அன்பு பற்றி உரத்துப் பேசுவதாலும் அநீதிகள் அகன்று விடா. கொஞ்சம் விழிகளை அகலத் திறந்து பார்க்க வேண்டும். தம்மைச் சுற்றி என்னென்ன கொடுமைகள் நிகழ்கின்றன எனப் பார்த்து அவற்றைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணலாரின் ஆளுமைகள் – அழகிய குணநலன்கள் | தலைமைத்துவப் பண்புகள் | மனிதநேய மாண்புகள்
தலைமைத்துவப் பண்புகள், ஆளுமைப் பண்புகள், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கு இது ஓர் அரிய வழிகாட்டி நூல்.மனித உறவுகள் எப்படி இருக்கவேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? நேரத்தை எப்படி திட்டமிட வேண்டும்? என்பதற்கு நபிகளாரின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.நபிகளாரின் வாழ்க்கை வரலாறு பல நுாறு ஆண்டுகளாக உலகின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் நபிகளாரின் பல வரலாற்று நூல்கள் உண்டு. ஆனால், நபிகளாரின் ஆளுமைப் பற்றிய நூல்கள் மிகக் குறைவே. அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அண்ணலாரின் பலதார திருமணங்கள் – ஓர் அலசல்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தார். எந்த வயதில் அப்பெண்களை மணந்தார்? எதற்காக மணந்தார்? அவற்றிற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? அந்தப் பெண்கள் கண்ணியரா? வயது முதிர்ந்தவர்களா? விதவைகளா? என்பதை அறிய வேண்டும். அவர்கள் எந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த கேள்விகளுக்கு இந்த நூல் விடை தரும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அநாதைகள் விதவைகள் ? ஆதரவற்றவர்களை அரவணைப்போம்! (மனித உறவுகள் – 3)
இன்றைய நவநாகரீமான உலகில் இவர்களின் உரிமைகளும் நீதியும் மறுக்கப்பட்டு தெருவோரங்களில் சுற்றித் திரிபவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த சூழலில் நமது கடமை என்ன? நமது செயற்பாடுகள் எப்படியிருக்க வேண்டுமென்பதை மனதில் உரைக்கும் வண்ணம் நூலாசிரியர் டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘அநாதைகள் – விதவைகள், ஆதரவற்றவர்களை அரவணைப்போம்’ என்ற இந்த நூலை எழுதியுள்ளார்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அமைதி அடைந்த ஆன்மா… (உளத்தூய்மை வழிகாட்டி)
நண்பனைப் போல் நடித்து ஏமாற்றுவது, குடும்பச் சூழ்நிலை, வளாகச் சூழ்நிலை, தீய நண்பர்களின் பழக்கம், சமூகச் சூழ்நிலைகள் என்பவை மூலம் ஷைத்தான் தனது காரியத்தில் வெற்றிபெற முயற்சிக்கின்றான். அதிலிருந்து நாம் விடுபடுவது எப்படி என்பதையும் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அவள் (பெண்ணியப் பார்வையில்)
பெண்ணியம், உண்மையில் பெண்களுக்கு முழுமையான விடுதலையைத் தரவில்லை என்பதை இன்றைக்குப் பெண்ணியவாதிகளே உணர்ந்து கொண்டார்கள். தாம் உருவாக்கிய கோட்பாட்டைத் தாமே விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது வேறொரு திசையில் பெண்ணியத்துக்கு விளக்கம் தேடும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் இஸ்லாம் கூறும் பெண்ணியம் தகத்தகாயப் பேரொளியுடன் வருகிறது. அமெரிக்காவில் முதல் பெண்ணியக் குரல் எழுந்தது 1848 இல்தான்! ஆனால் ஏழாம் நூற்றாண்டிலேயே பெண்ணியக் குரல் மண்ணில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அந்த முழக்கத்தை எழுப்பியவர் பெண்ணோ ஆணோ அல்ல. மாறாக, அந்த மகத்தான முழக்கத்தை முன்வைத்தவன் இறைவன்! ஆம் பெண்ணியல் நோக்கில், பெண்ணியல்பு நோக்கில் அவளுக்குத் தேவையான அத்தனை உரிமைகளையும் இறைவன் வழங்கினான். அந்த உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. போராடாமலே பெண் இனத்துக்குக் கிடைத்த பெரும் புதையல் அது!
நாடறிந்த நல்லிணக்கச் சிந்தனையாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் காலம் கருதி இந்த நூலை இயற்றித் தந்துள்ளார்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழகிய அண்டை வீடு (மனித உறவுகள் – 1)
அண்டைவீட்டார் என்றால் யார்? அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன? அவர்களோடு நாம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது? என பல்வேறு கேள்வி களுக்கு விடைகளையும் பன்மை சமூகமாக வாழும் நாம் நம் தேசத்தில் ஜாதி மதம் மொழிகளை எல்லாம் தாண்டி தன் அண்டை வீட்டார்களோடு ஒற்றுமையோடும் மனிதநேயத்துடன் எப்படி வாழ்வது என்பதையும் இந்நூல் பேசுகிறது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அழிக்கும் ஆணவம் (உளத்தூய்மை- 2)
குடும்பத்தின் அமைதி குலைந்திருக்கிறதா? அங்கு ஆணவம் புகுந்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடியும். குடும்பம் மட்டுமல்ல சமூகத்திலும் குழப்பங்களும் சிக்கல்களும் உருவாகியிருக்கிறது என்றால் ஆணவம் தனது வேலையைச் செய்யத் தொடங்கி விட்டது என்றே அர்த்தம்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அறிவோம் ஹிஜாப்
ஹிஜாப் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாட்டை தாண்டி ஒரு தேசப் பிரச்சினையாக உருவாவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஹிஜாப் பற்றிய விளக்கங்களையும் தெளிவுகளையும் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தவறான கருத்துக்களை அழித்து ஹிஜாப் பற்றிய உண்மை நிலையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதத்தில் “அறிவோம் ஹிஜாப்” என்ற இச்சிறு நூலை டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இதயங்களை வெல்வோம்
நபிகளார் கொண்டு வந்த செய்தியை அவரது தோழர்களும், அதற்குப் பின்னர் வந்தவர்களும் தொடர்ந்து பல சிரமங்களைத் தாங்கியும், தடைகளைத் தாண்டியும் செய்து வந்தனர். இதன் காரணமாக இஸ்லாம் உலகெங்கும் பரவி உலக மக்களில் நான்கில் ஒரு பகுதியினரைத் தன் பால் கவர்ந்துகொண்டது.
நாள்கள் செல்லச் செல்ல அழைப்புப் பணி மீது முஸ்லிம்-களுக்கு இருந்த ஆர்வம் குறைந்து அழைப்புப் பணியின் அவசியத்தை மறந்தனர். சிலர், முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தால் போதும்; முதலில் அவர்களைத் திருத்துவதற்கே முன்னுரிமை தரவேண்டும் என்று சொல்லி அழைப்புப் பணியைப் புறந்தள்ளினர். இதன் விளைவாக இஸ்லாத்தின் வளர்ச்சி தடைபட்டது. இஸ்லாத்தைப் பற்றி தவறான செய்திகள் பரவி முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் மீதான வெறுப்பும் பகையும் வளர்ந்து மேலும் அவர்களுக்கு ஹிதாயத் & நேர்வழி கிடைக்காமலேயே போய்விட்டது.
இந்த நிலையில் அழைப்புப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் முஸ்லிம்களில் சில தனிமனிதர்களிடமும், சில அமைப்பு களிடமும் உருவாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள அழைப்பாளர் களுக்கு அழைப்புப் பணியின் தேவையை மட்டுமல்ல, அதன் முறைகளையும் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்தேவையை உணர்ந்தே இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆர்வமில்லாதவர்களுக்கும் ஆர்வமூட்டும் வகையிலும், அழைப்புப் பணி தேவையில்லை என்று வாதிடுவோர்க்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இந்திய முஸ்லிம்கள் இனி செய்ய வேண்டியது என்ன?
இன்று முஸ்லிம் உலகம் நெருக்கடியான, சோதனையான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றது. உலக அளவில் அமெரிக்க, சியோனிச, ஏகாதிபத்தியவாதிகள், நமது நாட்டளவில் வலதுசாரிகள், வகுப்புவாதிகள், முஸ்லிம் வெறுப்பாளர்கள் ஆகியோரின் பன்முகத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் ஆளாகின்றனர்.இத்தகைய சூழலில் உணர்ச்சிவசப்படாமலும், அச்சப்படாமலும், நம்பிக்கை இழக்காமலும், தோல்வி மனப்பான்மையில் துவளாமலும், இறைவனின் மீதும் இறை மார்க்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு விவேகத்தின் அடிப்படையில் ஷரீஅத்திற்கு உட்பட்ட முடிவுகளை எடுத்து முஸ்லிம் சமுதாயம் செயல்பட்டால் நிலைமைகள் மாறும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
இஸ்லாமிய எதிர்ப்பலைகளை எதிர்கொள்வது எப்படி?
ஊடகங்களின் தேவை குறித்தும், இஜ்திஹாதின் (நவீன பிரச்னைகளுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான ஆய்வு) கதவைத் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சமுதாய ஒற்றுமை குறித்தும் டாக்டர் அவர்கள் முன்வைத்துள்ள கருத்துகள் மார்க்க அறிஞர்களின், முஸ்லிம் அமைப்புகள்-கட்சிகள்-இயக்கங்களின் சிந்தனைக்கும் விவாதத்துக்கும் உரியவை.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமும் அரசியலும்
சமுதாய வாழ்க்கையில் அமைதி நிலவ வேண்டும் என்றால் அங்கு அரசியல் இருக்க வேண்டும்.
அரசியல் ஒரு சாக்கடை என்று நினைத்து அதை விட்டு விலகுவது மிகப் பெரிய தவறாகும்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் ஒரு பார்வை
துக்ளக் இதழில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கானவர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற முக்கியமான தொடர் இப்போது நூல் வடிவில்!
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் சில நிமிடங்களில்
வாழ்க்கையில் இலட்சியம் என்பது படைத்தவனை வணங்கி வாழ்வதும் படைப்பினங்களுக்கு வழங்கி வாழ்வதும் ஆகும். இவை இரண்டும் இறைக்கட்டளைகளே!
இறைக்கட்டளைகளுக்காக வாழ்வதே, வாழ்வின் இலட்சியமாகும்.
இந்த உயர்ந்த இலட்சியத்தைக் கொண்ட இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன. பெரும்பாலான செய்திகள் எதிர்மறையாகவே உள்ளன. எனவே உண்மையை அறியும் ஆர்வம் பலருக்கு எழுந்துள்ளது. பரபரப்பான இக்காலகட்டத்தில் குறைந்த நேரத்தில் செய்திகளை அறிய மக்கள் விரும்புகின்றனர். எனவே சுருக்கமாக ஆனால் அதே சமயத்தில் தெளிவாகவும், புரியும்படியும், ஆதாரப்பூர்வமாகவும் இருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
இந்த விருப்பத்தின் அடிப்படையில் இஸ்லாத்தை எளிய முறையில், சுருக்கமாக, சிந்திக்கின்ற விதத்தில் நாடறிந்த நல்ல சிந்தனையாளர், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் தொகுத்தளித்துள்ளார்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் தாக்கப்படும் போது
இஸ்லாத்தின் மீது வசைமாரி பொழியப்படும் போது முஸ்லிம்களின் உயிர் – உடைமைகள் அழிக்கப்படும் போது நம்முடைய எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும் என்பதைக் கூறும் நூல்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் வெற்றிபெற
* இஸ்லாம் வெற்றிபெற வேண்டும்.
* இஸ்லாம் வெற்றி பெற்றால் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர்.
* எது உண்மையான வெற்றி?
* வெற்றியை அடையும் வழிமுறைகள் என்ன என்பதை அலசும் நூல்.Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
எங்கே அமைதி
“இஸ்லாம் எனும் பெயருக்கு அமைதி என்று பொருள். எனவே, அமைதியைப்பற்றி இஸ்லாம் விரிவாகப் பேசுகிறது. தனிமனிதனில் தொடங்கி சமூகம், பொருளா தாரம், அரசியல் என மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமைதியை நிலைநாட்டுவது பற்றி இஸ்லாம் விளக்குகிறது. இவை வெறும் தத்துவங்கள் அல்ல, மாறாக ஏற்கெனவே செயல்படுத்திக் காட்டப் பட்ட கொள்கைகள்; இன்றும் செயல்படுத்தப்பட்டு வரும் கொள்கைகள்” என முன்னுரையில் டாக்டர் கே.வி.எஸ். மொழிவதை மெய்ப்பிக்கும் நூல்
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST