-
Al Fathiha and Amma Juz (Urdu)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
Al-Fathiha & Juz’ Amma – English
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
The Message of Islam
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அத்தியாயம் 3 : ஆலு இம்ரான் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்
இந்த நான்கு அடிப்படைச் சொற்களையும்குர்ஆன் எந்தப் பொருளில் கையாளுகிறது?குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள்இவற்றை எப்படிப் புரிந்து கொண்டார்கள்?இந்தச் சொற்களின் இன்றைய நிலை என்ன?இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளரான மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் தமக்கே உரிய பாணியில் விரிவாக அலசுகிறார்…!ஓரிறைக் கொள்கைக்கு வலு சேர்த்து இணைவைப்பைத் தகர்த்தெறியும் இடிமுழக்க நூல்…!Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அறப்போர்
அறப்போர்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இதுதான் இஸ்லாம் பாகம் 1
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இதுதான் இஸ்லாம் பாகம் 1, 2
இஸ்லாத்தைக் குறித்து தெளிவான, முழுமையான கருத்துகளை எடுத்துக் கூறுகிறது.
இளைஞர்களுக்காக எழுதப்பட்டது. இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை பலரின் உள்ளங்களிலிருந்து களைந்தது; களைந்து வருகிறது.
ஒவ்வொருவரும் – படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய, பிறருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய, சிந்தனைக்குரிய -சிந்தைக்கினிய நூல் இது!
பிரெஞ்சு, ஆங்கிலம், அரபி உள்ளிட்ட நாற்பத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இமாம் ஹுஸைன் உயிரைக் கொடுத்தது எதற்காக?
இமாம் ஹுஸைன் அவர்களின் மீது பேரன்பும் மாசற்ற பற்றும் கொண்டிருக்கின்ற பெரும்பாலோருக்கு அவர் எந்த நோக்கத்திற்காக தன்னுடைய இன்னுயிரைத் துறப்பதற்கும் தயாரானார்? தன்னுடைய அன்பு மகனார்களையும் இழந்து விடுவதற்கு ஏன் துணிந்தார் என்பது பற்றிய உண்மைநிலை தெரிந்திருப்பதில்லை.
Author: Moulana Syed Abul A’la Moududi (Rah)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இயக்கம் வெற்றி பெற
இயக்கப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு ஊழியரும் இயக்கத்தின் வெற்றிக்காகத் தம்மை தயார் படுத்துவது குறித்து விளக்கும் நூல்! இயக்க ஊழியர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இருளும் ஒளியும்
அஞ்ஞான சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்வதால் உருவாகும் நடைமுறைகளுக்கும் இறைநெறியான சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதால் உருவாகும் நடைமுறைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை தர்க்கரீதியாக விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இவர்தான் முஸ்லிம்
முஸ்லிம் என்றால் யார் என்பது குறித்து நம்முடைய மனதுக்குள் ஒரு வரைவிலக்கணத்தைப் பதித்து வைத்திருக்கின்றோம். அது இரட்டைப் பரிமாணங்கள் கொண்டது. மௌலானா அவர்கள் மூன்றாவது பரிமாணத்தை முன்வைக்கிறார். மனதை ஒரு முகப்படுத்தும் அந்த மூன்றாவது பரிமாணத்தைப் படிக்க தெளிவு பிறக்கும்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இளைஞனே விழித்தெழு
இளைய சமுதாயத்தின் இதயத்தினை தட்டியெழுப்பி உறங்கிக் கிடக்கும் அவர்களது உணர்வுகளை விழித்தெழச் செய்யும் வண்ணம் மௌலானா மௌதூதி ஆற்றிய சொற்பொழிவுதான் இந்நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறுதி நபித்துவம்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை
இறைநம்பிக்கை எனும் நல்ல வித்து ஊன்றப்படுவதற்கான பூமியை (உள்ளத்தை) பண்படுத்தும் பணியைப் பக்குவமாய்ச் செய்கிறது, இந்நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாத்தில் இறைவழிபாடு
இறைவன் ஒருவனுக்கே மனிதன் வழிபட வேண்டும் எனும் கருத்தோட்டத்தை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும்வகையில் எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாத்தில் மனித உரிமைகள்
மனித உரிமைகளின் அடிப்படைக் கருத்தோட்டம் என்ன, அதனை நிலைநாட்டும் வழிமுறைகள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு எளிமையான தர்க்கரீதியான பதில் அளிக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாத்தின் அரசியல் கொள்கை
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய அழைப்பும் செயல் முறையும்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய திருமணச் சட்டங்கள் (Islamic Marriage Law)
கணவன் – மனைவி உரிமைகள் கடமைகள் (இஸ்லாமிய குடும்பச் சட்டங்கள்) குறித்து மௌலானா அவர்களின் புகழ்பெற்ற Huqooquz Zoujain நூலின் மொழியாக்கம் தான் இந்நூல்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய மறுமலர்ச்சி
இஸ்லாமிய மறுலர்ச்சி என்றால் என்ன?இஸ்லாமிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பவர்களின் – அதாவது முஜத்தித்களின் வரைவிலக்கணம் என்ன?ஒருவரை ‘முழுமையான மறுமலர்ச்சியாளர்’ என்று எப்படி மதிப்பிடுவது?இஸ்லாமிய வரலாற்றில் இதுவரை தோன்றிய முஜத்தித்கள் யார் யார்? அவர்களுடைய சாதனைகள் என்ன?இமாம் மஹ்தி அவர்களின் தகுதிநிலையும் முன்னறிவிப்புகளும் வருகையும் எத்தன்மை வாய்ந்தவை?– இன்னும் இது போன்ற பல வினாக்களுக்கும் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் இந்த நூலின் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய வாழ்க்கை முறை
வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு எவ்விதம் வழிகாட்டுகிறதுஎன்பதனை பல்வேறு தலைப்புகளில் விளக்கும் அற்புத நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய வாழ்வு – குத்பாப் பேருரைகள்
மௌலானா மௌதூதி அவர்களின் குத்பாப் பேருரை நூல் சாதாரணப் புத்தகம் அல்ல!கல்வியறிவற்ற பாமர மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களின் அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட விஷயங்-களைக் கொண்டே – அடிப்படையான உண்மைகளை எடுத்துரைக்கிறது.மௌலானா மௌதூதி அவர்களின் இதர நூல்களைவிட இந்தப் பேருரை மக்களிடம் இறையருளால் அதிக தாக்கங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. இது நிறைய இதயங்களைத் தட்டியெழுப்பி, பலருடைய வாழ்க்கைக்குப் புதிய வடிவம் கொடுத்தது. தம் விருப்பப்படி வாழாமல் வல்ல இறைவனுக்கே அடிபணிந்து வாழும் மனோநிலையை மக்களிடம் ஏற்படுத்தியது.
அன்று தாருல் இஸ்லாத்தின் சின்னசிஞ்சிறு மஸ்ஜிதில் மௌலானா அவர்களுக்கு எதிரில் சாதாரண கிராம மக்கள்தாம் இருந்தார்கள். அம்மக்கள் அரசியலோ, வரலாறோ, தத்துவமோ அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்திருந்த விஷயங்கள்1. இறைநம்பிக்கை,2. இஸ்லாத்தின் அடிப்படைகளான 5 கடமைகள் மட்டும்தான். எனவேதான், இவ்விரு விஷயங்களை வைத்துக்கொண்டு எளிய மொழியில் அந்தக் கிராம மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இந்த உரைகளை அமைத்தார் மௌலானா.பல ஆண்டுகள் உருண்டோடி விட்டபோதிலும் அவ்வுரை ஏற்படுத்திய புத்துணர்ச்சியை இன்னும் நம்மால் உணர முடிகிறது.Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் வகுக்கும் வாழ்க்கை வழி
இறைவனுக்கு வழிபடுவதும் அவனது கட்டளைகளுக்குப் பணிவதும்தான் மனிதனின் கடமை என்ற இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாட்டையும் இன்னபிற விஷயங்களையும் திருமறைச் சான்றுகளுடன் தமக்கே உரிய பாணியில் விளக்குகிறார் ஆசிரியர்.
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் வழங்கும் தூது
இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், அவற்றிற்கிணங்க உருவாகும் வாழ்க்கை நெறியையும் தெளிவாக, சுருக்கமாக விளக்கும் நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஒழுக்க மாளிகை
படைப்பாளனின் அதிகாரத்தை ஏற்று அவனது ஆணை களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் மட்டுமே ஒழுக்கரீதியான சமுதாயத்தை அமைக்க முடியும் என்பதை விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஒழுக்கம் பேண ஒரே வழி
திருக்குர்ஆன் எனும் இறைவேதத்தை எப்படி அணுக வேண்டும் என்பதைக் கூறும் இந்நூல் குர்ஆனை விளங்குவதற்கு ஒரு முன்னோடி நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
குர்ஆனை அணுகும் முறை

சத்தியப் பாதையில் லட்சியப் பயணம்
இஸ்லாம் எனும் சத்திய நெறியின் ஆழத்தையும் அகலத்தையும் நுணுகி ஆராய்ந்து, அதன் நுட்பத்தையும் – திட்பத்தையும் விஞ்ஞான ரீதியாக விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சமுதாய வாழ்வின் உயிர் ஜகாத்
இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை எங்ஙனம் அமைதியும் செழிப்பும் தழைத்தோங்கும் சமுதாயத்தை அமைக்கிறது என்பதை பாமரர்களும் எளிதாய்ப் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆனின் மேற்கோள்களுடன் அருமையாக விளக்குகிறார் ஆசிரியர்.
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சாந்திக்கு வழி
ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத ஆழிய கருத்துகளுடன், சாந்திமயமான வாழ்வை நோக்கி அழைக்கும் உன்னத படைப்பு!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சென்னைப் பேருரை
சென்னை பேருரை சுதந்திர இந்தியாவில் – இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர், தலித், பவுத்தர் என இணைந்துவாழும் ஒரு பன்மைச் சமூகத்தில், முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும்? எதற்கு முன்னுரிமை தர வேண்டும்? எந்தெந்த பணிகளைச் செய்ய வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதே ‘சென்னைப் பேருரை’ எனும் இந்நூல். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இஸ்லாமிய அறிஞர் உலகெங்கும் போற்றப்படும் மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் […]
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 17 (பனூஇஸ்ராயீல்)
இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய ஆளுமை மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). 20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகக் களம் கண்ட புரட்சிகர சிந்தனையாளரான அவர், இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்கிடச் செய்யும் உயரிய லட்சியத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர். பல இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆதர்ச நாயகராக விளங்கிய மௌதூதியைக் கற்பதற்கான ஆர்வமும் தேடலும் உலகம் முழுக்க இன்றும் உயிர்ப்புடன் இருந்துவருகிறது.
மௌலானா மௌதூதி (ரஹ்) 1903ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் ஔரங்காபாதில் சூஃபிப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். அரபு, பாரசீகம், சட்டம், ஹதீஸ் ஆகியன அவருக்கு சிறுபிராயம் முதலே கற்பிக்கப்பட்டன. வீட்டிலேயே இவற்றைப் பயின்று வந்த அவர் தனது பதினோராம் வயதில் வீட்டுக்கு அருகிலிருந்த ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டார். அங்குதான் நவீனக் கல்வி அவருக்கு வாய்த்தது. இயற்கை அறிவியல், ஆங்கிலம், கணிதம் போன்றவற்றை அங்குதான் பயின்றார். பிறகு 1916ல் ஹைதராபாதில் பேரறிஞர் ஹமீதுத்தீன் ஃபராஹி தலைமையாசிரியராக இருந்த தாருல் உலூம் அரபிக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அவரது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவருக்குக் கல்வி தடைப்பட்டது. தந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு போபாலுக்குக் குடிபெயரும் நிலை ஏற்பட்டது. அங்கே சர்ச்சைக்குரிய உர்து இலக்கியவாதியாக அறியப்பட்ட நியாஸ் ஃபதெஹ்பூரிக்கு அறிமுகமானார் மௌதூதி. அவர்தான் மௌதூதியை எழுத்துப் பணியை மேற்கொள்ளுமாறு ஊக்கம் தந்தார். இளம் வயது தொட்டே தான் வாழ்ந்த காலத்தின் முக்கியச் சிந்தனையாளர்களாகக் கருதப்பட்ட பலருடனும் மௌலானா மௌதூதிக்குத் தொடர்பிருந்தது. பல்வேறு சிந்தனைப் போக்குகளை அவர் கடந்து வந்திருப்பதற்கு இது ஒரு காரணமாக விளங்குகிறது.
இளம் மௌதூதியின் அன்றாட வாழ்வே ஒரு போராட்டமாகிப் போனது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் உழன்றதால் முறையாகக் கல்வி கற்கும் சூழலை மௌதூதி இழந்தார். ஆரம்பத்திலிருந்தே உர்து மொழிவளமும், ஆய்வுநோக்கும் கொண்டவராக மௌதூதி திகழ்ந்ததால் பத்திரிகைத் துறை அவரை உள்ளீர்த்துக் கொண்டது. தனது 17ஆம் வயதில் ஜபல்பூர் காங்கிரஸ் கட்சியின் உர்து வாரப் பத்திரிகையான ‘தாஜ்’-ல் பணியாற்றத் தொடங்கினார். அங்கு வேலைப் பார்த்ததன் மூலம் அவரின் பொருளாதார நிலை சற்று முன்னகர்ந்தது. தடைப்பட்ட தன்னுடைய கல்வியை சுயமாகத் தொடர நினைத்தார்.
ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளைப் பயில்வது, சர் சையித் அஹ்மத் கான் போன்றோரின் படைப்புகளை வாசிப்பது போன்றவற்றில் நேரம் செலவிட்டார். இது தவிர, இந்தக் காலகட்டத்தில் மௌலானா மேற்கொண்ட முயற்சிகள் பற்றி இந்திய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னோடியான அப்துல் ஹக் அன்சாரி கூறும்போது, அவர் “மேலைத் தத்துவச் சிந்தனைகளின் பக்கம் திரும்பி, முழுமையாக ஐந்து ஆண்டுகள் அர்ப்பணித்து, மேற்கத்திய தத்துவம் தொடர்பான முக்கிய ஆக்கங்கள், அரசியல் அறிவியல், வரலாறு, சமூகவியல் முதலானவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டார்” எனக் குறிப்பிடுகிறார். உலகின் மிகப் பெரும் சக்தியாக ஐரோப்பா எழுச்சிபெற்றதில் அங்கே உருவான அறிவுஜீவிகளான ஹெகல், ஆடம்ஸ்மித், ரூசோ, மால்தூஸ், வால்டேர், டார்வின், கோதே போன்றோரின் அறிவுசார் பங்களிப்பை மௌதூதி சுட்டிக்காட்டினார்.
ஜம்மியத் உலமா யே ஹிந்துடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு அவரது வாழ்வில் மற்றொரு திருப்பத்தை உண்டாக்கியது. அந்த அமைப்பின் ஏடான ‘முஸ்லிம்’ல் (பின்னர் அது ‘ஜம்மியத்’ என பெயர் மாற்றம் பெற்றது) பொறுப்பாசிரியரானார். சற்றேறக்குறைய மூன்றாண்டுகள் அதில் பணியாற்றிய அவருக்கு முக்கியமான அனுபவங்களெல்லாம் அங்கே கிடைத்தன. அந்த சமயத்தில் காந்தியால் வழிநடத்தப்பட்ட கிலாஃபத் இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்குபெற்றார். இந்திய தேசிய காங்கிரஸுடன் முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்காக வேலை செய்தார். அப்போது, காங்கிரஸின் தேசியவாதம் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதற்கு இட்டுச்செல்வதை அவதானித்தார். மதக் கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கிய அந்த நேரத்தில் காங்கிரஸின் முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கண்டு அதிருப்தியடைந்தார். இஸ்லாம் வன்முறை சமயமாகத் தூற்றப்பட்டுக் கொண்டிருந்த இந்தக் காலப்பிரிவில்தான் அதற்குப் பதிலளிக்கும் நோக்கில் மௌதூதியின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்’ நூல் வெளியானது. தேசியவாதம் இந்திய அரசியலில் தாக்கம் செலுத்தியது மட்டுமின்றி உஸ்மானிய பேரரசைக் கவிழ்ப்பதற்கு முதன்மைக் காரணியாக விளங்கியதையும் மௌதூதி கண்ணுற்றார். ஜம்மியத் உலமா – காங்கிரஸ் ஆதரவுநிலையைத் துறந்து முற்றிலுமாக அவர் விலகுவதற்கு மேற்சொன்ன விஷயங்களெல்லாம் வழிவகுத்தன.
பிறகு, டெல்லியிலிருந்து ஹைதராபாதுக்கு இடம்பெயர்ந்த அவர், இஸ்லாத்தை ஆய்ந்தறிவதில் தீவிரமாக ஈடுபட்டார். நிஜாமின் ஆட்சியில் ஏற்பட்ட சரிவும், மௌதூதியின் ஆழ்ந்த வாசிப்பும் ஓர் உண்மையை அவருக்குத் தூலமாகப் புலப்படுத்தியது. இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றாததே முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குக் காரணம் எனும் உண்மைதான் அது. குர்ஆனின் பக்கம் முஸ்லிம்களை மீளச்செய்ய வேண்டும் எனும் அவரின் வேட்கை 1932ல் ‘தர்ஜூமானுல் குர்ஆன்’ எனும் உர்து பத்திரிகையை ஆரம்பிக்க வழிகோலியது. இந்த இதழ் இஸ்லாமிய புனர்நிர்மாணத்துக்கு அவரது பெரும் பங்களிப்பாகக் கொள்ளப்படுகிறது.
1937ல் நடைபெற்ற பொதுத் தேர்தலும் அதையொட்டி காங்கிரஸ் அமைத்த மாகாண அமைச்சரவையும் மௌலானா மௌதூதியின் வாழ்வில் மிகப் பெரும் திருப்புமுனையாகின. “இந்து அரசாங்கம்” என இதைக் குற்றம் சாட்டிய மௌதூதி, முஸ்லிம்களை அரசியல் மட்டத்திலும், கலாச்சார ரீதியிலும் இது ஓரங்கட்டுவதோடு, கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களாக அவர்களை மாற்றவே முனைகிறது எனக் கண்டித்தார். முஸ்லிம் லீகும் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பை மேற்கொண்டது. எனினும் மௌதூதியின் கண்ணோட்டம் அதிலிருந்து வேறுபட்டு தனித்து நின்றது. காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியவை மதச்சார்பற்ற தேசத்துக்காக உழைப்பதால் இவற்றுக்கு மத்தியில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என அவர் சாடினார். முஸ்லிம் லீக்கை “ஜமாஅத்தே ஜாஹிலிய்யா” என்றதோடு, ஷரிஆ அடிப்படையில் அது அரசை அமைக்க முயலாததால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் “முஸ்லிம்களின் இறைமறுப்பு அரசாக”த் திகழும் என்றார். ஜின்னா மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளிலும், சட்டங்களிலும் மட்டுமே அறிவு பெற்றிருப்பதால் இஸ்லாமிய ஆட்சி மலர்வதற்கு அவர் எதிரானவர் என்பது மௌலானாவின் கருத்தாக இருந்தது. மதச்சார்பின்மை, தேசியவாதம் போன்றவற்றை எதிர்த்துவந்த மௌதூதி இப்படியாக அபிப்ராயம் கொண்டிருந்தது வியப்புக்குரியதன்று.
இந்தக் கருத்தோட்டத்தின் நீட்சியாகவே, 1941ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் நாள் ஜமாஅத்தே இஸ்லாமி எனும் பேரியக்கத்தை 75 பேர்களுடன் சேர்ந்து மௌதூதி நிறுவினார். ‘ஹுக்குமத்தே இலாஹி’ (அல்லாஹ்வின் அரசாங்கம் அல்லது இஸ்லாமிய அரசு) என்பது அதன் குறிக்கோளாக இருந்தது. இறை ஆட்சியை நிர்மாணிப்பது முஸ்லிம்களின் கடமை என்றும், அடிப்படை நம்பிக்கையான ஏகத்துவத்தின் அங்கம் அது என்றும் கூறினார். ‘அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்’ என்கிற அவரது நூலில் இலாஹ் (இறைவன்), ரப் (அதிபதி), இபாதத் (வழிபாடு), தீன் (வாழ்கைநெறி) ஆகிய குர்ஆனிய சொற்பிரயோகத்தின் வழி இவற்றை நிறுவினார். இறைவனுக்கு அன்றி அதிகாரம் மனிதனின் கரங்களில் ஒப்படைக்கப்படுவதை ஜாஹிலிய்யா என்று எதிர்த்தார்.
இஸ்லாத்தை முழு வாழ்க்கைத் திட்டமாக முன்வைத்தார். மனித உடலின் எந்தவொரு பாகமும் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஒன்றோடு மற்றொன்று பின்னிப்பிணைந்து இருப்பதை இஸ்லாத்திற்கு உருவகப்படுத்திக் காட்டினார். இதன் மூலம் முழு வாழ்க்கைத் திட்டத்தின் உயிர்நாடியாக அரசு இருப்பதை விளக்கினார். ஜாஹிலிய்யாவுக்கும் இது பொருந்தும் எனச் சுட்டிக்காட்டி, இஸ்லாமும் ஜாஹிலிய்யாவும் ஒருபோதும் ஒன்றாகப் பயணிக்க முடியாதென அழுத்தமாகப் பதிவு செய்தார். மானுடத்தின் வரலாற்றை ‘ஹக்’-க்கும் (சத்தியம்/நீதி) ‘பாத்தில்’-க்கும் (அசத்தியம்) இடையிலான – இஸ்லாத்துக்கும் ஜாஹிலிய்யாவுக்குமான – தொடர் போராட்டமாக அணுகினார். இவையெல்லாம் இஸ்லாத்தைக் குறுக்கிப் புரிந்துகொள்ளும் பிற இஸ்லாமிய அறிஞர்களில் இருந்து மௌலானா மௌதூதியை வேறுபடுத்திக் காட்டும் அம்சங்களாகின.
தேசப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி ஏற்படவேண்டும் என்று ஆவல்கொண்டார் மௌதூதி. ஆனால் அவரது குரலுக்கு அந்நாட்டின் அதிகார வர்க்கம் செவிசாய்க்காததோடு, இஸ்லாமிய ஆட்சிக்கான எதிர்பார்ப்பை சுமந்திருந்த மக்களின் நம்பிக்கையையும் பாழ்படுத்தியது. மௌதூதி வாழ்ந்த காலமெல்லாம் தொடர்ந்து அரசியல் செயல்பாட்டில் ஈடுபட்டே வந்தார். சில சறுக்கல்களும் அதில் இருக்கவே செய்தன.
காதியானிகளுக்கு எதிராக அவர் எழுதியதற்காக 1953 மே மாதம் 11 அன்று மௌலானா மௌதூதிக்குத் தூக்கு தண்டனை வழங்கியது பாகிஸ்தான் நீதிமன்றம். அதற்கு எதிராக உலகம் முழுக்க முஸ்லிம்களின் கண்டக் குரல்களும் போராட்டங்களும் வெடித்தன. அரசுக்கு மௌதூதி கருணை மனு அளிக்கும்படி கோரப்பட்டது. ஆனால் அவர் அதைக் கடுமையாக மறுத்துவிட்டார். பின்னர் அவருக்குக் கொடுத்த தண்டனை தளர்த்தப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது; அதுவும் பிற்பாடு விலக்கப்பட்டு மௌதூதி விடுதலை செய்யப்பட்டார்.
ஜமாஅத்தே இஸ்லாமி பேரியக்கத்தை மௌதூதி மிகச் சிறப்பாக தலைமை தாங்கினார். தீனை மனித வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் நிலைநாட்டும் நோக்கில் பல்வேறு புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதிக்குவித்தார். அரபு, வங்காளி, ஹிந்தி, ஆங்கிலம் முதலான பல மொழிகளுக்கு அவரின் உர்து ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. முப்பது ஆண்டுகள் செலவழித்து அவர் எழுதிய ‘தஃப்ஹீமுல் குர்ஆன்’ தஃப்சீர் அவரது ஆகப்பெரும் பங்களிப்பாகத் திகழ்கிறது.
முதுமைக் காலத்தில் கடும் உடல் சுகவீனத்தால் அவதியுற்றார் மௌதூதி. 1972ல் ஜமாஅத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலக அனுமதிக்குமாறு ஜமாஅத் தலைமையை அவர் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோள் ஷுறா உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மௌலானாவின் உடல்நிலை ரொம்பவும் மோசமாகியதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் மருத்துவராக இருந்த அவரது மகன் சிகிச்சைக்காக அங்கே மௌதூதியை அழைத்துச் சென்றார். அங்கே சிகிச்சை பலனின்றி 1979 செப்டம்பர் 22ஆம் நாள் பேரறிஞர் மௌதூதி (ரஹ்) இம்மண்ணை விட்டு அகன்றார். உலகின் பல இடங்களில் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அவரது உடல் லாஹூரிலுள்ள அவருடைய இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 22 (அல் ஹஜ்)
திருக்குர்ஆனின் 22ஆவது அத்தியாயமான அல்-ஹஜ்ஜுக்கு விளக்கவுரை அளித்துள்ள மௌலானா மௌதூதி அவர்கள், அல்லாஹ் மூன்று குழுவினரை நோக்கி கருத்துரைகளை நிகழ்த்துவதாக தெரிவிக்கிறார்கள். அவர்கள்,
1) மக்கத்து இணைவைப்போர்,
2) இறைநம்பிக்கைக்கும் இறைமறுப்புக்குமிடையில் தடுமாறும் முஸ்லிம்கள்,
3) வாய்மைமிக்க இறைநம்பிக்கையாளர்கள்
என்று வகைப்படுத்தியுள்ளார்கள். மறுமைநாளின் பூகம்பம் மாபெரும் திகிலை ஏற்படுத்துவதாக இருக்கும், அந்தக் கோபத்தின் பிடியிலிருந்து மனிதர்களே உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று தொடங்கும் இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்திற்கே மௌலானா அவர்கள் நீண்டதொரு விளக்கத்துடன் விரிவுரையை அளித்துள்ளார்கள்.
இது போன்றே பல வசனங்களுக்கு ஐயங்களுக்கிடமின்றி மிக தெளிவாகவும் குர்ஆன் எடுத்துரைக்கும் செய்தியை சரியான பார்வையுடனும் விளக்கும் விதம் மெளலானா அவர்களின் சிந்தனையாற்றலை பிரதிபலிக்கிறது.About The Author

தஃப்ஹீமுல் குர்ஆன்_(32 Books Package)
திருக்குர்ஆன் முன் வைக்கின்ற அழைப்பை விளக்கிச் சொல்வதற்காக காலம்தோறும் விரிவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன; இவை காலத்தை வென்று நிற்கின்றன. இந்த தொடரில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் “மௌலானா சையத் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)” அவர்கள் எழுதிய குர்ஆனின் தலைசிறந்த விளக்க உரையாக “தஃப்ஹீமுல் குர்ஆன்” திகழ்கின்றது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹4440 -
திருக்குர்ஆன் கையடக்கம்
நடுத்தர வர்க்கத்தினர் கூட வாங்கிப் படிக்கும் அளவில், பயணத்தின் போதும் எடுத்துச் செல்லும் வடிவில் கையடக்கப் பிரதியாக…திருவசனங்கள் ஒவ்வொன்றும் எடுத்தாளும் வகையில் தனித்தனி எண்களுடன்…Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் தமிழாக்கம் விளக்கவுரை
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUSமனித மனம் எப்படி அமைதல் வேண்டும்? மனித நடப்பு எப்படி இருத்தல் வேண்டும்? ஆனந்தம், அன்பு, சிரிப்பு, சினம், சாந்தி, சண்டை ஆகிய அனைத்துக்குமான ஒழுங் கும் தீர்வுகளும்! அறிவின் பசி தீர்த்து – தெளிவின் திசை காட்டும் இறைவேதம்! எளிய தமிழில்! இனிய நடையில்!!
விளக்கவுரை
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
-
திருக்குர்ஆன் விளக்கவுரை – யூனுஸ், ஹுத்
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
-
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தவ்பா
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 1-2 (அல்ஃபாத்திஹா – அல்பகறா)
குர்ஆனின் தொடக்கத்திலேயே அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை இடம்பெறச் செய்திருப்பதன் நோக்கம் இதுதான்: நீங்கள் உண்மையிலேயே இந்த வேதத்தின் மூலம் பயன்பெற விரும்புகிறீர்கள் எனில், முதலில் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று எடுத்துச் சொல்வதுதான் அந்த நோக்கம்.
இந்த (அல் பகறா) அத்தியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு, அருளப்பட்ட சூழ்நிலையையும் வரலாற்றுப் பின்னணியையும் தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 13-14 (அர்ரஃத் – இப்ராஹீம்)
அத்தியாயம் 13: ‘அர்ரஃது’
நபி (ஸல்) அவர்கள் முன்வைக்கின்ற போதனைகள் முற்றிலும் சத்தியமாகும். அவை மட்டுமே உண்மையாகும். அவற்றை ஏற்காமல் இருப்பது மக்கள் புரிகின்ற குற்றமாகும். இந்த அத்தியாயத்தில் இடம்-பெற்றுள்ள எல்லா உரைகளும், இந்த மையக் கருத்தைச் சுற்றியே சுழல்கின்றது.அத்தியாயம் 14: இப்ராஹீம்
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தூதுத்துவத்தை ஏற்க மறுத்துக் கொண்டிருந்த, மேலும் நபியவர்களின் அழைப்பை தோல்வியுறச் செய்வ-தற்காக எல்லா விதமான கடுமையான சூழ்ச்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கு, இதனால் நேர்படவிருக்கின்ற விளைவுகளைக் குறித்து இந்த அத்தியாயத்தில், விளக்கிக் கூறப்பட்டுள்ளன; எச்சரிக்கையும் செய்யப்படுகின்றன.Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 47-48 (முஹம்மத் – அல் ஃபத்ஹ்)
அத்தியாயம் ‘முஹம்மத்’, இறைநம்பிக்கையாளர்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துவதையும் இது தொடர்பான ஆரம்பக் கட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதையும் மையக் கருத்தாகக் கொண்டிருக்கிறது.
அல் ஃபத்ஹ் – அத்தியாயம் 48இன் முதல் வசனமே ‘(நபியே!) நாம் உமக்கு வெளிப்படையான வெற்றியை அளித்துவிட்டிருக்கின்றோம்’ என்ற வெற்றிக்கான நற்செய்தியுடன் தொடங்குகிறது. ஹுதைபிய்யா ஒப்பந்தமே வெற்றி என்கிற அறிவிப்பு மக்களிடம் வியப்பை உண்டாக்குகிறது. இந்த நிகழ்வின் பின்னணியில் இருக்கும் வரலாற்று நிகழ்ச்சியை மௌலானா மௌதூதி அவர்கள் முன்னுரையில் மிகத்தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 66-68 (அத்தஹ்ரீம் – அல்முல்க் – அல்கலம்)
அத்தியாயம் அத்தஹ்ரீமில் நபிகளாரின் மனைவியரோடு தொடர்புடைய சில நிகழ்வுகளின் செய்திகளும், ஹலால், ஹராம் இரண்டும் அல்லாஹ்வின் கைகளில் உள்ளது என்றும், சமூகத்தில் நபியவர்களின் தகுதியைப் பற்றியும், நபிகளாரின் வாழ்வு ஆவணப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பதையும், இஸ்லாம் என்றுமே ஒருதலைப்பட்சமாகச் செயல்படாது என்பதையும் விளக்குகின்ற அத்தியாயமாகத் திகழ்கிறது.
அத்தியாயம் அல்முல்க்கில் மிகவும் சுருக்கமாக இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், அவை தெரிவிக்கும் போதனைகள் மக்கள் மனங்களில் தெளிவாக இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக. மறுபுறம், அறியாமையில் வீழ்ந்து, வழிகேட்டில் மதியிழந்து காணப்படும் மக்களை மிகவும் ஆழமான முறையில், பாதிக்கும் வகையில், தாக்கம் ஏற்படுத்தும் முறையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் அறியாமை நீங்க வேண்டும், அவர்களை சிந்திக்கத் தூண்ட வேண்டும், அவர்களின் மனசாட்சியை விழிப்படையச் செய்ய வேண்டும் என்ற ரீதியில் இந்த அத்தியாயம் விளங்குகிறது.
அல்கலம் அத்தியாயத்தில் இஸ்லாத்தின் பகைவர்கள் எழுப்புகின்ற விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் கூறப்படுகின்றது. நபிகளாரை நிலைகுலையாமையுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டுமென்று அறிவுரை கூறுகிறது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 69-73 (அல்ஹாக்கா – அல்மஆரிஜ் – நூஹ் – அல்ஜின்னு – அல்முஸ்ஸம்மில்)
இந்த ஐந்து அத்தியாயங்களுக்கான விளக்கங்களை மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் மக்கள் புரிந்து
தெளிவுபெறும் விதத்தில் எழுதியுள்ளார்கள். இதன் மூலம் திருக்குர்ஆன் வசனங்களுக்கு சரியான புரிதலையும் தெளிவான வழிகாட்டுதல்களையும் உலக மக்களுக்குவழங்க வேண்டுமென்ற உயரிய நோக்கில் சமர்ப்பிக்கின்றோம். உலக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், சிந்தனைத் தெளிவையும் மறுமை வெற்றியையும் பெற வேண்டும்.Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 16 (அந்நஹ்ல்)
இவ்வத்தியாயத்தின் துவக்கம் முதல் இறுதிவரை அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நிரூபிப்பதற்கு ஏராளமான அறிவாதாரங்களை அந்நஹ்லின் வசனங்கள் எடுத்துரைக்கின்றன. நபித்துவம், திருக்குர்ஆனின் வாய்மை, மெய்யான மறுமை, மீண்டும் உயிர்ப்பித்தல், நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை மறுப்போர்க்கு எச்சரிக்கை எனப் பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிடும் வசனங்களுக்கு விளக்கங்கள் சி-றப்பாக அமைந்துள்ளன.
-
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 21 (அல் அன்பியா)
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 23 (அல் முஃமினூன்)
1. நபிகளாருக்கு எதிராகக் கிளப்பியிருக்கின்ற ஆட்சேபங்களும் ஐயங்களும் புதியவை அல்ல.
2. ஏகத்துவம், மறுமை ஆகியவை குறித்து தான் அனைத்து நபிமார்களும் எடுத்துரைத்தனர்.
3. இறைத்தூதர்களின் இந்த அழைப்பை ஏற்க மறுத்து, அவர்களை எதிர்ப்பதில் நிலைத்துநின்ற சமூகங்கள் இறுதியில் அழிந்தொழிந்து போயின.
4. இறைவனிடமிருந்து ஒரே மார்க்கம்தான் எல்லாக் காலங்களிலும் அருளப்பட்டு வந்துள்ளது.
-
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 24 (அந்நூர்)
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 24 (அந்நூர்)
* பாலியல் குற்றம் – தண்டனை
* அவதூறு – தண்டனை
* ஆண்கள் / பெண்கள் பார்வையைக் கட்டுப்படுத்துதல் – கற்பைக் காத்தல் – திருமணம்
* பிறர் இல்லத்திற்குள் நுழைய அனுமதி
* சமுதாய தீமைகளுக்கு தீர்வு
* கூட்டமைப்பின் ஒழுங்கும் கட்டுக்கோப்பும்
இன்னும் இதுபோன்றவற்றிற்கு விரிவான விளக்கங்கள் இந்நூலில்…
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 25 (அல்ஃபுர்கான்)
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 26 (அஷ்ஷுஅரா)
அன்பு நபிகளாரின் நினைவூட்டலையும், அழைப்புச் செய்தியையும் மக்கத்து குறைஷிகள் அடுத்தடுத்து விதவிதமான முறையில் மருத்தும், புறக்கணித்தும், எதிர்த்தும் வந்தார். தம்முடைய எதிர்ப்பை நியாயப்படுத்துகின்றன விதத்தில் வகைவகையான காரணங்களையும் சாக்குப் போக்குகளையும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் இந்த நடத்தைதான் அன்பு நபிகளாரின் இதயத்தைப் பிழிந்து கொண்டிருந்தது. நபிகளார் (ஸல்) அவர்கள் இந்த வேளையில் தம்மைத் தாமே உருகிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய நிலைகளில்தான் இந்த அத்தியாயம் அருளப்பட்டது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 27 (அந்நம்ல்)
இந்த அத்தியாயத்தில் ஃபிர்அவ்ன், ஸமூத் சமூகத் தலைவர்கள், லூத் சமூகத்துக் கலகக்காரர்கள் இவர்களின் இறைமறுப்பு, மன இச்சைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்த நிலை, அதன்பிறகு ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எந்நேரமும் அல்லாஹ்வுக்கு முன் சிரம்பணிந்த நிலை, ஸபாஃ நாட்டு அரசியின் செல்வச் செழிப்பு, அதனால் ஏற்பட்ட ஆணவம், கர்வம், சத்தியம் தெளிவாகப் புலப்பட்டதும் செருக்கில்லாமல் அதனை ஏற்றுக்கொண்ட நிலை தொடர்பான வசனங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுக்கான விளக்கங்கள் வாசகர்கள் முழுமையாக புரிந்து கொள்ளும்படி அமைந்துள்ளன.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 28 (அல்கஸஸ்)
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 29 (அல் அன்கபூத்)
அல் அன்கபூத் அத்தியாயம் இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக விளங்குகிறது.
முதற் பிரிவு : பொறுமை, தியாகம், பெற்றோருக்குக் கீழ்ப்படிதல், அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல், உண்மை நம்பிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிப்போ-ருக்குக் கீழ்ப்படியாமல் அவர்களுடன் போராடுதல், நபிமார்களின் சரிதை ஆகியவை அத்தியாயத்தின் தொடக்க முதல் 41 வசனம் முடிய கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது பிரிவு : நிராகரிப்போருடனும் வேதம் வழங்கப்பட்டோருடனும் விவாதித்தல், நபித்துவத்தின் உண்மையை நிரூபித்தல் ஆகியவை வசனம் 42 முதல் அத்தியாயம் முடிவு வரை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 30 (அர்ரூம்)
அன்றைய மக்காவிலும் உலக அரங்கிலும் நிலவிய சமூக, அரசியல் சூழல்கள், ஆட்சி – காட்சி மாற்றங்கள் என அனைத்தையும் அழகாக, நிறைவாக, சிறப்பாக கண் முன்னால் கொண்டு வந்து வைத்துவிடுகின்றார், மௌலானா. குறிப்பாக உலக அரங்கில் அப்போதைய இரண்டு வல்லரசுகளுக்கு இடையில் நடந்த மோதலை அப்படியே அப்போதைய மக்காவில் சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையில் நடந்து வந்த போராட்டத்தோடு கச்சிதமாகப் பொருந்திப் போகின்ற விதத்தில் ஒப்பீடு செய்து விவரித்திருப்பது அருமை.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 31 (லுக்மான்)
இவ்வுலக வாழ்வில் ஏகத்துவக்கொள்கைதான் உண்மை-யானது, அறிவுப்பூர்வமானது என்பதை உணர்ந்து, முன்னோர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் தரப்பிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்கள் சமர்ப்பித்துச் சென்ற அறிவுரையைத் திறந்த மனத்துடன் சிந்தித்துப் பார்த்துச் செயல்பட திருக்குர்ஆனின் 31ஆவது அத்தியாயம் ‘லுக்மானும்’ அதன் விளக்கவுரையும் பயன்படும் என்று நம்புகிறோம்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 32 (அஸ்ஸஜ்தா)
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 32 (அஸ்ஸஜ்தா)
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 36 (யாஸீன்)
“யாஸீன் திருக்குர்ஆனின் இதயம்” ஆகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த அத்தியாயம் திருக்குர்ஆனின் செய்தியையும் அழைப்பையும் இதயங்கள் சிலிர்க்கும் வகையிலும், தேக்க நிலையை உடைத்தெறியும் விதத்திலும் உணர்வுபூர்வமாக எடுத்துரைப்பதால் உயிர்த்துடிப்புமிக்க இதயமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 5 (அல்மாயிதா)
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 6 (அல்அன்ஆம்)
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அல் அஃராஃப்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அல்ஹிஜ்ர்
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – அன்னிஸா
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – கஹ்ஃப்
அத்தியாயம் : அல் ஃபாத்திஹா, அல் கஹ்ஃப்உலகெங்கும் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் இஸ்லாõமிய எழுச்சியை எற்படுத்துவதில் பெருவெற்றி பெற்ற நூல்தான் தஃப்ஹீமுல் குர்ஆன்…!Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – தாஹா
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – மர்யம்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் விளக்கவுரை – யூசுப்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருமறைத் தெளிவுரை (78-114)
திருக்குர்ஆனின் இறுதி 30-ஆம் பாகத்தின் 78 முதல் 114 வரையிலான சிறுசிறு அத்தியாயங்களுக்கு விளக்கமானபொருள் தரப்பட்டுள்ளது. அத்தியாயங்களின் பின்னணி, காலம் ஆகியனவும் விளக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தீண்டாமை
தீண்டாமை எனும் கொடிய நோயைக்களைவதற்கான வழிகளை திருமறைவசனங்களைக் கொண்டு எளிய நடையில்விளக்கும் நூல்!Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தீனை நிலைநாட்டுங்கள்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
பகுத்தறிவு தீர்ப்பளிக்கிறது
அகிலத்தைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கின் றானா? அவனுக்குப் பதில் சொல்ல மனிதன் கடமைப்பட்டு இருக்கின்றானா போன்ற கேள்விகளுக்கான பதில்களை உருவகக் கட்டுரை அமைப்பில் விளக்கும் நூல்!
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
புரட்சி தூது
வாழ்வின் எல்லாத் துறைகளிலும் அண்ணலார் (ஸல்) கொண்டு வந்த ஈடிணையற்ற தனிப்பெரும் புரட்சியின் தன்மையை இரு வேறு கோணங்களில் தருகிறார்கள் இந்நூலின் ஆசிரியர்கள்.
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பொருளாதார பிடியில் மனிதன்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மரணத்திற்குப் பின்
மரணத்திற்குப் பின் வாழ்வு உண்டு என்பதையும் அதற்கான ஆதாரங்களையும் ஆணித்தரமாகக் கூறும் நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மறைகாட்டும் இறைத்தூதர்
இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய தகுதி, பணி, கடமை ஆகியவை பற்றியும் அவர்களுடைய சாதனைகள் பற்றியும் திருக்குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி பேசும் நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மனித இனத்தின் ஆக்கமும், அழிவும்
மனித இனத்தின் ஆக்கமும் அழிவும்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மாலை அமர்வுகளிலே
பூமியின் சுழற்சி பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது? இன்றைய கல்வி அமைப்பு எப்படி இருக்கிறது? ஓர் இமாமைத்தான் பின்பற்ற வேண்டுமா? போன்ற கேள்விகளுக்கும் இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கும் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் விடை யளிக்கிறார்கள்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முஸ்லிமின் அடிப்படைக் கடமை
சிந்தையைக் கிளறும் இந்நூலில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்னைகள், பொறுப்புகள், கடமைகள் ஆகிய அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இன்று முஸ்லிம்கள் பல்வேறுபட்ட ஆபத்துகள், துன்பங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டிருப்பதற்கான ஒரே காரணம், அவர்கள் தங்களின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியம் காண்பித்ததுதான் என்றும், தங்களின் இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழிநிலை ஒருபோதும் மாறாது என்றும் மனதில் பதியும்படி நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மெளலானா மெளதூதி பதில்கள் (பாகம் – 1)
கேள்வி பதில் என்பதைவிட பல்வேறு துறைகளின் ஆழமான இஸ்லாமிய சிந்தனைகளை தூண்டக்கூடிய அறிவுக் கருவூலமாக இந்நூல் அமைந்திருக்கிறது. கேள்விகளுக்கு பதில் கொடுப்பதோடு தன் பொறுப்பு நிறைவேறிவிட்டது என்று விட்டுவிடாமல் கேள்வி கேட்டவரின் நிலையை நன்கு புரிந்துகொண்டு அவருடைய தீராத சிக்கல்களை தீர்ப்பதற்கான முயற்சிகளையும் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் செய்துள்ளார்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மெளலானா மெளதூதி பதில்கள் (பாகம் – 2)
இறைவேதம், இறைத்தூதர்கள், நபி முஹம்மத் (ஸல்), காதியானிகள், நபிமொழிகள், நபித்தோழர்கள், இறைநம்பிக்கை தொடர்பான 40 கேள்விகளுக்குரிய பதிலை இந்நூலில் மௌலானா அவர்கள் அழகாக கொடுத்துள்ளார்கள்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST