-
அல்குர்ஆனை அணுகும் முறை
அல்குர்ஆனை அணுகும் முறை எனும் இந்நூல் நான்கு முக்கியப் பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒன்று: குர்ஆனின் தனிப்பெரும் சிறப்புகளும் அதன் இலக்குகளும்.
இரண்டு: மனப்பாடம், ஓதுதல், செவியுறுதல் ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை.
மூன்று: புரிதல், விளக்கவுரை ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை. விளக்கவுரையில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய வழிமுறைகள், ஆபத்தான சறுக்கல்கள் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்த வழிகாட்டல்கள், அறிவியல் விளக்கவுரையை ஆமோதிப்பவர்கள், மறுப்பவர்கள் ஆகியோருக்கு இடையே இருக்க வேண்டிய நிலைப்பாடு.
நான்கு: பின்பற்றுதல், செயல்படுத்துதல், தீர்ப்பளித்தல், அழைத்தல் ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை.
Author: DR. YUSUF AL QARDHAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமியக் குடும்பம்
குடும்ப அமைப்புகள் மீது சிந்தனை ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் போர் தொடுக்கப்படுகிறது.
ஊடகம், தொலைக்காட்சி, வலைத்தளம், பத்திரிகை போன்றவை வாயிலாக தொடுக்கப்படும் இத்தகைய போர்களால் குடும்ப அமைப்பு கேள்விக்குறியாகிறது. சிலபோது முஸ்லிம்களும் இதற்குப் பலியாகின்றார்கள்.
ஓர் இஸ்லாமியக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து டாக்டர் யூஸுஃப் அல்கர்ளாவி எழுதியுள்ள இந்த நூல் இக்காலச் சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Author: DR. YUSUF AL QARDHAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்
அழைப்பாளர்களின் மொழியில் இஸ்லாம் என்ற இலங்கை நூலின் தமிழ் பதிப்பு
இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்
டாக்டர் யூஸுஃப் அல்கர்ழாவி
இன்றைய அழைப்பாளர்களின் அழைப்பு மொழியின் தரத்தை அல்லாமா யூஸுப் அல்கர்ழாவி அவர்கள் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்கள். இன்னும் அழைப்பு மொழியின் தரத்தை நெறிப்படுத்துவதற்கு அற்புதமான வழிமுறையையும் காண்பித்திருக்கிறார்கள். இவற்றை அழைப்பாளர்கள் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களின் அழைப்பு மொழியில் தாக்கம் ஏற்படும் என்று நம்பலாம்.
டாக்டர் யூஸுப் அல்கர்ழாவி அவர்களின் அரபு நூலை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் தமிழ் வடிவமாக ‘அழைப்பாளர்களின் மொழியில் இஸ்லாம்’ என்று தந்திருக்கிறார்கள். அதனை இந்தியத் துணைக் கண்டத்திலும் தமிழ் மக்களுக்கு இடையிலும் பரவலாக்க வேண்டும், அதன் மூலம் அழைப்பாளர்களின் மொழியில் மட்டுமல்ல, அனைத்து முஸ்லிம்கள் மத்தியிலும் விழிப்பு உணர்ச்சியும் எழுச்சியும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நூலை ‘இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்’ எனும் தலைப்பில் வெளியிடுகின்றோம்.Author: DR. YUSUF AL QARDHAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
ஹலால் ஹராம் – அனுமதிக்கப்பட்டவை விலக்கப்பட்டவை
டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களுடைய தலை சிறந்த படைப்புகளில் ஒன்றுதான் ஹலால் ஹராம் எனும் இந்நூல். எது ஹலால் எது ஹராம் என்பது குறித்து இந்த நூற்றாண்டில் வெளிவந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்றாகும் இது.
தனிமனிதன், குடும்பம், சமூகம் போன்ற நிலைகளில் நாம் சந்திக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகளில் எவையெல்லாம் அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) எவையெல்லாம் தடை செய்யப்பட்டவை (ஹராம்) என்பது குறித்து அல்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் மற்றொரு நூல் வெளிவந்துள்ளதா என்று தெரியவில்லை.
1994 ஆம் ஆண்டு வெளிவந்த அல்ஹலால் வல் ஹராம் என்ற அரபு நூலின் பதினைந்தாவது பதிப்பையே தமிழ் மொழிபெயர்ப்புக்கு நாம் உபயோகப்படுத்தியுள்ளோம்.
ஆங்கிலம், உர்து, டர்கிஷ் போன்ற மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘பெஸ்ட் செல்லர்’ என்று அழைக்கப்படும் எப்போதும் அதிகமாக விற்பனையாகும் அரபி நூல்களில் இதுவும் ஒன்று.
Author: DR. YUSUF AL QARDHAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST