Showing 101–120 of 662 results

  • அழகிய அண்டை வீடு (மனித உறவுகள் – 1)

    அண்டைவீட்டார் என்றால் யார்? அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன? அவர்களோடு நாம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது? என பல்வேறு கேள்வி களுக்கு விடைகளையும் பன்மை சமூகமாக வாழும் நாம் நம் தேசத்தில் ஜாதி மதம் மொழிகளை எல்லாம் தாண்டி தன் அண்டை வீட்டார்களோடு ஒற்றுமையோடும் மனிதநேயத்துடன் எப்படி வாழ்வது என்பதையும் இந்நூல் பேசுகிறது.

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    40
  • அழகிய அண்டை வீடு_EPUB

    For physical book:
    2040
  • அழிக்கும் ஆணவம் (உளத்தூய்மை- 2)

    குடும்பத்தின் அமைதி குலைந்திருக்கிறதா? அங்கு ஆணவம் புகுந்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடியும். குடும்பம் மட்டுமல்ல சமூகத்திலும் குழப்பங்களும் சிக்கல்களும் உருவாகியிருக்கிறது என்றால் ஆணவம் தனது வேலையைச் செய்யத் தொடங்கி விட்டது என்றே அர்த்தம்.

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    30
  • அழைப்பாளனுக்கு விடுமுறை இல்லை…!

    பட்டம், பதவி, பணம், அரசு, அதிகாரம் என அற்பமான ஆதாயங்களை மையப்படுத்தியே கட்சிகளும் கழகங்களும் மன்றங்களும் அமைப்புகளும் இயங்கிக் கொண்டிருந்த சூழலில், சாதி, மதம், குடும்பம், கோத்திரம் போன்றவற்றின் குறுகிய நலன்களுக்காகவே அரசியல், சமூகச் செயல்பாடுகள் சூடுபிடித்திருந்த விறுவிறுப்பான நாள்களில், அவை அனைத்தையும் முற்றாக ஒதுக்கித் தள்ளிவிட்டு இறைவனின் உவப்பையும் மறுமையில் மகத்தான வெற்றியையும் பெறுவதை மட்டுமே ஒற்றை உந்துசக்தியாகக் கொண்டு இயங்க வாருங்கள் என்கிற வித்தியாசமான, புரட்சிகரமான, அதிரடியான அழைப்புடன் களமிறங்கிய போராளிகளைப் படம் பிடித்துக் காட்டுகின்ற நூல்தான் “அழைப்பாளனுக்கு விடுமுறை இல்லை…!”

    Author: Moulana Naeem Siddiqui
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    40
  • அழைப்பியல் சிந்தனைகள்

    இந்நூல் புரட்சிகரமான நூல்! வாசகர்களின் உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற திறன் படைத்த நூல்!.
    அழைப்புப்பணியின் முக்கியத்துவத்தையும் அழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளையும் எடுத்துரைக்கின்ற நூல்!…
    எல்லாமே அன்றாட வாழ்வோடு தொடர்புடையவை! அண்ணல் நபிகளாரின் அழகிய முன்மாதிரியை நூல் முழுக்க இழைத்துக் கொடுத்திருக்கின்றார் ஆசிரியர்.
    Author: H. ABDUR RAQEEB
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST
    120
  • அழைப்புப் பணி ஏன்? எதற்கு?

    அழைப்புப் பணி என்றால் ஏதோ மதப்பிரச்சாரம் செய்வது  எனப் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். இது தவறு. மதப்பிரச்சாரம் என்பது வேறு; அழைப்புப் பணி  என்பது வேறு என்பதைத்  தெளிவுபடுத்தும் நூல் இது!

    Author: MOULANA M.A. JAMEEL AHMED & ABDULLAH ADIYAR
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    90
  • அறப்போர்

    அறப்போர்

    Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    65
  • அறிவோம் ஹிஜாப்

    ஹிஜாப் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாட்டை தாண்டி ஒரு தேசப் பிரச்சினையாக உருவாவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஹிஜாப் பற்றிய விளக்கங்களையும் தெளிவுகளையும் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தவறான கருத்துக்களை அழித்து ஹிஜாப் பற்றிய உண்மை நிலையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதத்தில் “அறிவோம் ஹிஜாப்” என்ற இச்சிறு நூலை டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    20
  • அறிவோம் ஹிஜாப் (மின்னூல் – E-Book)

    E-Book

    ஹிஜாப் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாட்டை தாண்டி ஒரு தேசப் பிரச்சினையாக உருவாவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஹிஜாப் பற்றிய விளக்கங்களையும் தெளிவுகளையும் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தவறான கருத்துக்களை அழித்து ஹிஜாப் பற்றிய உண்மை நிலையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதத்தில் “அறிவோம் ஹிஜாப்” என்ற இச்சிறு நூலை டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

    1520
  • அன்பு நண்பனுக்கு…!

    நட்புறவு கமழும் நடை, இதயத்தை வருடும் சிநேகமான விசாரிப்புகள், போகின்ற போக்கில் இயல்பாக வந்து உள்ளத்தைத் தைக்கின்ற கூர்மையான கேள்விகள், மனத்துக்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்ற எடுத்துக்காட்டுகள், ‘ஓ!’ போட வைக்கின்ற வரலாற்று நிகழ்வுகள், சிலிர்த்தெழச் செய்கின்ற அறிவுரைகள் என்று அமர்க்களப்படுத்தியிருக்கின்றார் ஆசிரியர். ஒரே மூச்சில், ஒரே அமர்வில் வாசித்து முடித்துவிடும்படி வாசகரைக் கட்டிப் போட்டுவிடுகின்ற நூல்தான் இந்நூல்.

    Author: Moulana Asad Geelani
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    50
  • அன்பு நபியின் அமுத வாக்குகள்

    அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்: அண்ணல் நபிகளா-ரின் அமுத வாக்குகளில் பளிச்சென மின்னுகின்ற ஒழுக்கவியல் போத-னைகள் மட்டும் தனியாகத் தொகுத்துத் தரப்பட்டிருப்பது-தான் இந்த நூலின் தனிச் சிறப்பு.

    Author: MOULANA MUHAMMAD FAROOQ KHAN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    240
  • அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்

    தம் பசிக்காக, தம் காயங்களுக்காகக் கண்ணீர் சிந்தாமல், தம் அன்புத் தோழர் களின் வலிகளைக் கண்டு பொங்கியெழுந்த பொழுதுகளை, அற்ப உலகின் தேவைகளுக் காகக் கலங்காமல் மறுமையில் மாபெரும் இறைவனின் திருமுன் நிற்கும் நேரத்தை நினைத்துக் குலுங்கியழுத கண்ணீர் கணங்களை கண் முன் கொண்டு வருகிறது இந்நூல்.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    160
  • அன்புள்ள அக்காவுக்கு

    மனப்போராட்டங்களை, வாழ்வியலை, சுற்றுப்புறத்தை, அதிகாரத்தை, அந்தஸ்தை, அறஇயலை, உலகியலை கடிதங்கள்  – பதில் கடிதங்களாக உலவ வைத்து அதன் விளைவாக ஓர் ஆக்கப்பூர்வ மாற்றத்தை நம் நெஞ்சிலும் – நடைமுறையிலும் நிலவச் செய்யும் கடித நூல்!

    Author: MAAYIL KHAIRABADHI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    20
  • அன்புள்ள அன்னைக்கு

    தன்னைப் பெற்றெடுத்த அன்னைக்கு சத்தியத்தை அறிமுகப்படுத்தி ஒரு மகன் எழுதிய காவியம். இஸ்லாமியக் கொள்கை விளக்கம், பெற்றோர்களைப் பற்றிய இஸ்லாமியப் பார்வை இரண்டையும் ஒரே சமயத்தில் இந்நூல் விளக்குகிறது.

    Author: NASEEM QAZI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    10
  • அன்னை கதீஜா (ரலி)

    அன்னை கதீஜா (ரலி)
    முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி

    ஒருநாள் நபிகளார் (ஸல்) அவர்கள், அன்னை கதீஜா அவர்களின் சிறப்பைப் பற்றி குறிப்பிடும்போது, அவர் தம் விரலால் வானத்தையும் பூமியையும் சுட்டிக்காட்டி விட்டு கூறினார்கள்: “இறைத்தூதர் ஈஸா அவர்களின் தாய் மர்யம், வானங்களின் மிகச் சிறந்த பெண்மணி ஆவார். கதீஜா, பூமியில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் மிகச் சிறந்த பெண்மணி ஆவார்.

    கதீஜாவின் வாழ்க்கை இறைநம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் குறிப்பாக, பெண்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் ஊற்றுக்கண் ஆகும். இஸ்லாத்தின் மேன்மைக்காக ஒருவரால் எப்படி நேரத்தை, ஆற்றலை, செல்வத்தை, வாழ்வை அர்ப்பணிக்க முடியும் என்பதற்கு கதீஜா முன்மாதிரி எடுத்துக்காட்டு ஆவார். பொருள் செறிந்த, கொள்கைக்காக வாழ ஆர்வம் கொண்டுள்ள இறைநம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் கதீஜாவின் வாழ்வு எப்போதும் ஒரு நினைவூட்டலாக இருந்துகொண்டே இருக்கும்.

    அன்னை கதீஜா (ரலி) அவர்களின் வாழ்வை குழந்தைகளின் மனதில் பதியும் வண்ணம் படங்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் ஆங்கிலப் பதிப்பு ஷார்ஜா வழங்கும் “சிறுவர்கள் புத்தக விருது” பெற்ற நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

    Author: Saniyasnain Khan
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    250
  • ஆசிரியர் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 14)

    ஓர் புகழ்பெற்ற அறிஞர் ஒரு வயதான பெண்ணைத் தம்முடைய ஆசிரியராகத் தேர்ந்தெடுத்தார் என்பதைக் கேள்வியுள்ள ஊர் மக்கள் வியந்தனர். அப்போது ஊர் மக்களிடம் அந்த வயதான பெண்மணிக்கும் தனக்கும் இடையே நடைபெற்ற நிகழ்வைப் பற்றி விளக்கினார். அப்படி அந்த மூதாட்டி கற்பித்த பாடம்தான் என்ன என்பதுதான் இந்நூலில்.

    Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    7077
  • இதயங்களை வெல்வோம்

    நபிகளார் கொண்டு வந்த செய்தியை அவரது தோழர்களும், அதற்குப் பின்னர் வந்தவர்களும் தொடர்ந்து பல சிரமங்களைத் தாங்கியும், தடைகளைத் தாண்டியும் செய்து வந்தனர். இதன் காரணமாக இஸ்லாம் உலகெங்கும் பரவி உலக மக்களில் நான்கில் ஒரு பகுதியினரைத் தன் பால் கவர்ந்துகொண்டது.

    நாள்கள் செல்லச் செல்ல அழைப்புப் பணி மீது முஸ்லிம்-களுக்கு இருந்த ஆர்வம் குறைந்து அழைப்புப் பணியின் அவசியத்தை மறந்தனர். சிலர், முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தால் போதும்; முதலில் அவர்களைத் திருத்துவதற்கே முன்னுரிமை தரவேண்டும் என்று சொல்லி அழைப்புப் பணியைப் புறந்தள்ளினர். இதன் விளைவாக இஸ்லாத்தின் வளர்ச்சி தடைபட்டது. இஸ்லாத்தைப் பற்றி தவறான செய்திகள் பரவி முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் மீதான வெறுப்பும் பகையும் வளர்ந்து மேலும் அவர்களுக்கு ஹிதாயத் & நேர்வழி கிடைக்காமலேயே போய்விட்டது.

    இந்த நிலையில் அழைப்புப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் முஸ்லிம்களில் சில தனிமனிதர்களிடமும், சில அமைப்பு களிடமும் உருவாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள அழைப்பாளர் களுக்கு அழைப்புப் பணியின் தேவையை மட்டுமல்ல, அதன் முறைகளையும் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்தேவையை உணர்ந்தே இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆர்வமில்லாதவர்களுக்கும் ஆர்வமூட்டும் வகையிலும், அழைப்புப் பணி தேவையில்லை என்று வாதிடுவோர்க்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    120
  • இதயங்களை வெல்வோம்_EPUB

    இதயங்களை வெல்வோம் (Book)

    60120