Showing 621–640 of 662 results

  • ஜமாஅத்தே இஸ்லாமி சில சந்தேகங்களுக்கு பதில்கள் (மின்னூல் – E-Book)

    E-Book

    ஜமாஅத்தே இஸ்லாமி 1941இல் சுதந்திர இந்தியாவிற்கு முன்பாக அமைக்கப்பட்டது.இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே அறியாமையின் வெளிப்பாடாக எதிர்க்கும் குழுவினரும் உருவானார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்றவாறு இவ்வியக்கத்தை விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். மக்களுக்கிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதன் மூலம் ஒரு தவறான சித்திரத்தை உருவாக்க முயன்றார்கள். அதே சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. அன்று என்ன பதில்கள், மறுப்புகள், விளக்கங்கள் அளிக்கப்பட்டதோ அவைகளே இன்றும் பதில்களாக கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.

    2035
  • ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – ஒரு பார்வை

    இந்தச் சிற்றேடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குறித்த விவரங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.
    ஜமாஅத்தின் நோக்கம் – குறிக்கோள், செயல் திட்டங்கள், பணிகள் ஆகியவற்றைக் கூறி இச்சிறு நூல் நம்மை வியப்படையச் செய்கிறது.
    Author: K. JALALUDEEN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST
    6
  • ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – நோக்கமும் வழிமுறையும்

    ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – நோக்கமும் வழிமுறையும்’ எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிறிய நூல், இஸ்லாமிய மார்க்கத்தின் முன்னேற்றத்துக்காக இந்தியத் துணைக் கண்டத்தில் முறையாக இயங்கி வருகின்ற ‘ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்’-ன் இலக்குகள் செயல்பாடுகள், வழிமுறைகள் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கும் இதில் முயற்சி செய்யப்பட்டுள்ளது.
     
    அதனைத் தொடர்ந்து இகாமத்துத் தீனின் வழியில் ஜமாஅத்தே இஸ்லாமியுடன் ஒத்துழைப்பு வழங்குமாறு முஸ்லிம்களிடம் வேண்டுகோள் வைப்பதுடன் ஜமாஅத்தே இஸ்லாமியின் செயல்முறை பண்புகளையும் உண்மையிலேயே புரிந்துகொள்ள முயற்சிக்கக் கூடியவர்களுக்கு இந்த சிறு நூல் பயனளிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவாறு இந்நூலை பெரும்பான்மை சமுதாயத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.

     

    Author: Moulana Abullais Islahi Nadvi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    75
  • ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – ஒரு பார்வை (மின்னூல் – E-Book)

    E-Book

    இந்தச் சிற்றேடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குறித்த விவரங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.
    ஜமாஅத்தின் நோக்கம் – குறிக்கோள், செயல் திட்டங்கள், பணிகள் ஆகியவற்றைக் கூறி இச்சிறு நூல் நம்மை வியப்படையச் செய்கிறது.
    1535
  • ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – ஒரு பார்வை_EPUB

    இந்தச் சிற்றேடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குறித்த விவரங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.
    ஜமாஅத்தின் நோக்கம் – குறிக்கோள், செயல் திட்டங்கள், பணிகள் ஆகியவற்றைக் கூறி இச்சிறு நூல் நம்மை வியப்படையச் செய்கிறது.
    Author: K. JALALUDEEN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST
    For physical book:
    1535
  • ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதாரங்களில் ஒளியில்! (மின்னூல் – E-Book)

    E-Book

    ஜமாஅத் ஒரு கொள்கை வாய்ந்த குறிப்பிட்ட எந்த ஒரு வகுப்பையும் சாராத அமைப்பாகும். மதம், சமுதாயம், வர்ணம், இனம், மொழி போன்ற அனைத்து பாகுபாடுகளை விட்டும் மேலோங்கி நாட்டு மக்கள் அனைவரையும் அது சத்தியத்தின்பால் அழைக்கிறது. மனிதர்களுக்காக இறைவன் வழிகாட்டுதலின்பால் தொடக்கத்திலிருந்து அடிப்படையாகவும் அருளிய அழைப்பு விடுக்கிறது. இதுவே ஜமாஅத்துடைய அழைப்பின் மையக் கருத்தாகவும் இருக்கிறது. அதனுடைய நடவடிக்கைகள், ஈடுபாடுகள் அனைத்தும் அந்த அடிப்படைக் கருத்தை மையமாகக் கொண்டே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.

    https://iftchennai.in/product-category/books/tamil-books/%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

    3570
  • ஜம்ஜமின் வரலாறு (குர்ஆனிய கதைகள் – 10)

    நபி இப்ராஹீம் (அலை) – அவரது மனைவி ஹாஜிரா (அலை) மற்றும் குழந்தை இஸ்மாயீல் (அலை) இருவரையும் பாலைவனத்தில் தன்னந்தனியாக விட்டுச் சென்றார். இது இறைவனின் கட்டளை என்றார். பிறகு இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. ஹாஜிரா (அலை) அவர்கள் ஏழு முறை மலைக் குன்றுகளில் ஏறி இறங்கினார். தண்ணீர் கிடைக்கவே இல்லை. இறுதியில் இறைவனின் அருட்கொடையாக இஸ்மாயீல் (அலை) அவர்களின் கால்கள் தட்டிய இடத்தில் நீரூற்றை உருவாகியது. அதுவே இன்றுவரை மக்களுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.

     

    Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    7077
  • ஜுமுஆ தொழுகை

    * ஜுமுஆ தொழுகை * ஜுமுஆ தொழுகையின் மொழி * அண்ணலாரின் குத்பா * இஸ்லாத்தில் அரபு மொழிக்குரிய உண்மையான அந்தஸ்து * அரபியல்லாத மொழியில் குத்பா நிகழ்த்துவது கட்டாயமா?

    குத்பாவின் மொழி தொடர்பாக எழுதப்பட்டுள்ள நூல்களில் அறிவுப்பூர்வமான ஒன்றாகத் இந்நூல் திகழ்கின்றது.

     

    Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    90
  • ஷாஹீன்பாக் – குறுநாவல்

    “வெளிப்படையான மதப் பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கூடிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக
    நாடெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிய ஒரு போராட்ட வரலாற்றின் கதையை எதிர்காலத்திலிருந்து பின்னோக்கிப் பார்த்து விவரிக்கிற இந்நாவலை இஸ்லாமிய இலக்கியப் பரப்பில்
    வெளிவந்த ஒரு முக்கிய பங்களிப்பாகப் பார்க்கிறேன்.
    எதிர்வரும் தலைமுறை ஷாஹீன் போராட்டம் குறித்தும்
    அதன் வலிகள், தியாகங்கள் குறித்தும் அறிந்து கொள்ளும்படியான
    ஓர் ஆவணமாக வெளிப்பட்டிருக்கிறது.”
    – இயக்குநர் மீரா கதிரவன்
    Author: V.S. MOHAMMED AMEEN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST
    80
  • ஷேக் அப்துல் காதிர் ஜீலானி

    மாமேதை ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாழ்வையும் பணிகளையும் ஆதாரப்பூர்வமாக விளக்கும் நூல்!

    Author: MOULANA ABUL HASAN ALI NADVI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    70
  • ஹலால் ஹராம் – அனுமதிக்கப்பட்டவை விலக்கப்பட்டவை

    டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களுடைய தலை சிறந்த படைப்புகளில் ஒன்றுதான் ஹலால் ஹராம் எனும் இந்நூல். எது ஹலால் எது ஹராம் என்பது குறித்து இந்த நூற்றாண்டில் வெளிவந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்றாகும் இது.

    தனிமனிதன், குடும்பம், சமூகம் போன்ற நிலைகளில் நாம் சந்திக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகளில் எவையெல்லாம் அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) எவையெல்லாம் தடை செய்யப்பட்டவை (ஹராம்) என்பது குறித்து அல்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் மற்றொரு நூல் வெளிவந்துள்ளதா என்று தெரியவில்லை.

    1994 ஆம் ஆண்டு வெளிவந்த அல்ஹலால் வல் ஹராம் என்ற அரபு நூலின் பதினைந்தாவது பதிப்பையே தமிழ் மொழிபெயர்ப்புக்கு நாம் உபயோகப்படுத்தியுள்ளோம்.

    ஆங்கிலம், உர்து, டர்கிஷ் போன்ற மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘பெஸ்ட் செல்லர்’ என்று அழைக்கப்படும் எப்போதும் அதிகமாக விற்பனையாகும் அரபி நூல்களில் இதுவும் ஒன்று.

    Author: DR. YUSUF AL QARDHAWI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    520
  • ஹஜ் ஒரு விளக்கம்

    ஹஜ் ஒரு விளக்கம்

    Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    70
  • ஹஜ் – உம்ரா வழிகாட்டி கையேடு

    ஹஜ், உம்ராவை  நிறைவேற்றும் வழிமுறைகளை விரிவாக விளக்கும் நூற்கள் பல உள்ளது. ஆனால், ஹஜ்ஜின் போது ஓத வேண்டியவற்றை நினைவில் வைப்பது ஹாஜிகள் பலருக்கு  கடினமாக  உள்ளது. உதாரணமாக, ஸயீயின் தொடக்கத்தில் என்ன துஆ, திக்ர் ஓத வேண்டும்? கூட்ட நெரிசலில், பையில் உள்ள நூலை எடுத்து ஓதுவதும் சிரமமே.

    வாழ்வில் ஒரு முறை செய்யும் கடமை என்பதால், சரியாக நிறைவேற்றவில்லையோ என்ற கவலை ஹாஜிகள் பலருக்கு உள்ளது.

    இதனை நீக்கும் விதமாக, ஹஜ் உம்ராவின் சுருக்க கையேட்டினை தயாரித்து உள்ளோம். இதில் முக்கியமான வழிபாட்டு முறைகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. இஹ்ராம் ஆடையில், கழுத்தில் தொங்கவிட்டவாறே இந்நூலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    Review:

    https://youtube.com/shorts/U3R3S47TC9s?feature=share

    Author: Dr. J. Mohideen
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    150
  • ஹஜ் – உம்ரா வழிமுறைகள்

    ஹஜ் – உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு ஓர் அருமையான வழிகாட்டி நூல்! ஹஜ்ஜின் கிரியைகள், வழிமுறைகள், பிரார்த்தனைகள் அனைத்தையும் விளக்கும் உன்னத நூல்.

    Author: DR. V. ABDUR RAHIM
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    85
  • ஹஜ்ரத் உமரும் அடிமை அஸ்லமும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 13)

    கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில், ஓர் ஏழை பெண் வீட்டில் தம் குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததையும் அவள் சமைக்க உணவு இல்லாமல் வெறும் தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருந்ததையும் கண்டார். குழந்தைகள் பசியால் உறங்கிவிட்டனர். உமருக்கும் அந்தத் தாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலும் அதற்குப் பின் உமர் (ரலி) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து தாமே சாக்குப் பையில் மாவையும் பேரீச்சம்பழங்களையும் தம் முதுகில் சுமந்து சென்றதையும் அவரின் அடிமை அஸ்லம் துடிதுடித்துப் போனதையும் அதற்கு பின் நடந்த சுவையான சம்பவங்களையும் பற்றி பேசும் நூல்.

     

    Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    7077
  • ஹஜ்ஜின் நாயகர்

    * ஏன் மக்காவில் போய்தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டுமா?
    * அங்கே உள்ள கறுப்புக் கல்லை ஏன் முத்தமிடுகிறீர்கள்? அவை மூடநம்பிக்கை இல்லையா?
    * இறைவன் கருணை உள்ளவன் என்று சொல்கிறீர்கள். இறைவனை திருப்திப்படுத்த அநியாயமாக ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடலாமா?
    * இதர மத நண்பர்களை ஏன் மக்காவில் உள்ள கஅபாவில் அனுமதிப்பதில்லை?
    * ஏன் மேற்குத் திசையை நோக்கி முஸ்லிம்கள் வழிபடுகிறீர்கள்?

    இவ்வாறாக தங்கள் மனத்துக்குள் கேள்விகளை அடுக்கடுக்காக வைத்திருக்கும் சகோதர சமயத்தவர்களுக்கு விடை கூறும் வகையில் இந்த நூல் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது.

    Author: V.S. Mohammed Ameen

    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    80
  • ஹஸன் (ரலி)

    ஹஸன் (ரலி) உயரிய நிலைப்பாடும், உலக இடிபாடுகளின் மீது எழுந்து நிற்கும் அவரது உயர்வான கருத்தும் வரலாறுகள் மூலம் காலம் காலமாக நமக்காகப் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது.

    “இருள் சூழ்ந்த இரவுகளால் அது புறக்கணிக்கப்படவில்லை. காலத்தின் தடைகளால், நூற்றாண்டுகளின் சுவர்களால் அது நம்மிடமிருந்து பிரிக்கப்படவும் இல்லை.”
    இதோ அவருடைய வரலாறு நம் கண்முன்னே…
    வாசிப்போம்… நேசிப்போம்…

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    400
  • ஹிஜாப் – உள்ளும் புறமும்

    கண்ணுக்கு இமை போல் பெண்ணுக்கு ஹிஜாப்.

    பெண்கள் எந்தத் தொல்லைக்கும் ஆளாகக்கூடாது எனும் உயர்நோக்கத்துடன் இஸ்லாமியத் திருநெறி பெண்களுக்குப் பர்தாவைக் கடமையாக்கியுள்ளது. அதையொட்டிய  அருமையான வழிகாட்டுதல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

    ஹிஜாப் என்பது என்ன, உடையில் மட்டும்தான் ஹிஜாபா, அதன் சட்ட திட்டங்கள் என்ன, நபித்தோழியர்கள் ஹிஜாபுக்குத் தந்த முக்கியத்துவம் என்ன,  முகத்திரை அவசியமா,  நபிகளாரின் காலத்தில் பெண்கள் முகத்தை மறைத்தார்களா முதலிய பலவகையான வினாக்களுக்கு இந்தச் சிறுநூல் மிகத் தெளிவாக விடை அளிக்கிறது.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    60