Showing 601–620 of 660 results

  • வேதவரிகளும் தூதர்மொழிகளும் (பாகம் – 3)

    Dr. K.V.S. ஹபீப் முஹம்மத்

    திருக்குர்ஆன் ஒரு பொறியியல் வல்லுநரின் வரைபடத்திற்கு (Blue Print) ஒப்பானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் வரைபடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பானது. அடிப்படைகளைக் குர்ஆன் வழங்குகிறது. விரிவான விதிமுறைகளை நபி வழங்குவார். இந்தக் கோட்பாடுகள் நபிகள் நாயகம் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டு விட்டன. அறியாமையிலும் ஆதிக்க உணர்வுகளிலும் மனித உரிமை மீறல்களிலும் சமூக அரசியல் பொருளாதாரச் சுரண்டல்களிலும் மூழ்கியிருந்த சமூகத்தை 23 ஆண்டுகளுக்குள் இஸ்லாம் மாற்றி அமைத்தது. பின்னர் உலகெங்கும் பரவி அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தி வருகிறது.
    இறைவாக்கு ‘குர்ஆன்’ என்றும், நபிகளாரின் வாழ்வும் வாக்கும் ‘ஹதீஸ்’ என்றும் அழைக்கப்படும். சில ஆயிரம் பக்கங்களில் விரிந்து கிடக்கும் இஸ்லாமியக் கருத்துகள் எல்லாரும் அறிந்திடும் வண்ணம் சுருக்கமாக இந்த நூலில் தரப் பட்டுள்ளன. முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதார்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தனித் தனித் தலைப்புகளின்கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவு ஆற்றுவோருக்கும் கட்டுரைகள் எழுதுவோருக்கும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதை எளிதில் அறியும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் முதல் பகுதி 25 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு மக்களின் பேராதரவைப் பெற்றது. பல பதிப்புகளைக் கண்டது.

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    130
  • ஜ.இ.ஹி. அமைப்புச் சட்டம்

    அமைப்புச் சட்டம்

    இஸ்லாமியச் சமுதாயம் ஒன்றுபட்டு இறைவன் வழங்கிய வாழ்க்கை நெறியைப் பின்பற்ற வேண்டும்; அதன்பால் உலக மக்களை அழைக்க வேண்டும்; அதனை மேலோங்கச் செய்வதற்காகத் தன்னிடமுள்ள வாய்ப்பு வசதிகள், திறமைகள் அனைத்தையும் ஈடுபடுத்தி முழு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமாகும். இதுவே இஸ்லாமிய சமுதாயம் உருவாக்கப்பட்டதன் நோக்கமுமாகும்.

    மனிதர்களிடம் பரந்து கிடக்கும் பலதரப்பட்ட ஆற்றல்களும், திறமைகளும் ஒன்று குவிக்கப்பட்டு கூட்டு முயற்சியின் அடிப்படையில் – கட்டுக்கோப்பான முறையில் பலமுனைத் திட்டங்களுடன் அவர்கள் ஒரே தலைமையின் கீழ் செயலாற்றுகின்ற போது ‘‘ஜமாஅத் அமைப்பின்” பலன்கள் அவர்கள் முன் குவிவதைக் காணலாம்.

    Author: T. AZEEZ LUTHFULLAH
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    65
  • ஜ.இ.ஹி. அமைப்புச் சட்டம் (மின்னூல் – E-Book)

    E-Book

    மனிதர்களிடம் பரந்து கிடக்கும் பலதரப்பட்ட ஆற்றல்களும், திறமைகளும் ஒன்று குவிக்கப்பட்டு கூட்டு முயற்சியின் அடிப்படையில் – கட்டுக்கோப்பான முறையில் பலமுனைத் திட்டங்களுடன் அவர்கள் ஒரே தலைமையின் கீழ் செயலாற்றுகின்ற போது ‘‘ஜமாஅத் அமைப்பின்” பலன்கள் அவர்கள் முன் குவிவதைக் காணலாம்.

    2045
  • ஜ.இ.ஹி. அமைப்புச் சட்டம்_EPUB

    அமைப்புச் சட்டம்

    இஸ்லாமியச் சமுதாயம் ஒன்றுபட்டு இறைவன் வழங்கிய வாழ்க்கை நெறியைப் பின்பற்ற வேண்டும்; அதன்பால் உலக மக்களை அழைக்க வேண்டும்; அதனை மேலோங்கச் செய்வதற்காகத் தன்னிடமுள்ள வாய்ப்பு வசதிகள், திறமைகள் அனைத்தையும் ஈடுபடுத்தி முழு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமாகும். இதுவே இஸ்லாமிய சமுதாயம் உருவாக்கப்பட்டதன் நோக்கமுமாகும்.

    மனிதர்களிடம் பரந்து கிடக்கும் பலதரப்பட்ட ஆற்றல்களும், திறமைகளும் ஒன்று குவிக்கப்பட்டு கூட்டு முயற்சியின் அடிப்படையில் – கட்டுக்கோப்பான முறையில் பலமுனைத் திட்டங்களுடன் அவர்கள் ஒரே தலைமையின் கீழ் செயலாற்றுகின்ற போது ‘‘ஜமாஅத் அமைப்பின்” பலன்கள் அவர்கள் முன் குவிவதைக் காணலாம்.

    Author: T. AZEEZ LUTHFULLAH
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    For physical book:
    3065
  • ஜகாதுல் ஃபித்ர்

    சமூகத்தில் ஜகாத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசும் நூல்களில் அதி முக்கியத்துவமும் மிகப் பிரபலமும் வாய்ந்த ஒரு நூல்தான் டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களுடைய ‘ஃபிக்ஹுஸ் ஸகாத்’ எனும் நூல். அந்த நூலின் குறிப்பிட்ட ஒரு பகுதிதான் “ஜகாதுல் ஃபித்ர்” எனும் இந்நூல்.

    ஜகாதுல் ஃபித்ர் என்றால் என்ன, அந்தப் பெயர் ஏன் வந்தது, அதன் இலக்கும் குறிக்கோளும் என்ன, ஜகாதுல் ஃபித்ரைப் பணமாகக் கொடுக்காலாமா, எப்போது கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்பன போன்ற ஐயங்களுக்கான விளக்கங்கள் மிகத் தெளிவாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

    Author: DR. YUSUF AL QARDHAWI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    60
  • ஜகாத் கூட்டு விநியோகம்

    ஜகாத் கூட்டு விநியோகம் தொடர்பாக காலங்காலமாக மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டிருக்கின்ற எண்ணங்களையும் பிம்பத்தையும் மனச்சித்திரத்தையும் தவிடுபொடியாக உடைத்தெறிகின்ற புரட்சிகரமான நூல் இது…! சமுதாயத்திலிருந்து வறுமையையும் ஏழ்மையையும் முற்றாகத் துடைத்தெறிவதற்காகக் கடமையாக்கப்பட்ட ஏற்பாடுதான் ஜகாத் என்பதை அழுத்தமாக மனதில் பதியும்படியாக எடுத்துரைக்கின்றார் நூலாசிரியார்.

    Author: H. ABDUR RAQEEB
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    45
  • ஜமாஅத் கடந்து வந்த பாதை – 1 (மின்னூல் – E-Book)

    E-Book

    ஜமாஅத்தே இஸ்லாமி எப்பொழுது தொடங்கப்பட்டது?
    இயக்கத்தின் துவக்கக் கட்டத்தில் எத்தகையப் பிரச்னைகள் ஏற்பட்டன?
    அவை எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன?
    துவக்கக் கால கூட்டங்களில் கலந்து கொண்ட புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் யார்? யார்?
    இந்தியத் துணைக் கண்டத்தின் மாபெரும் இஸ்லாமிய இயக்கமான ஜமாஅத்தே இஸ்லாமியின் வரலாறு கூறும் முதல் தொகுதி…!
    2040
  • ஜமாஅத் கடந்து வந்த பாதை – 2 (மின்னூல் – E-Book)

    E-Book

    ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை, அனைத்து மக்களும் ஒரே தாய் தந்தையின் வழித்தோன்றல்கள் எனும் உண்மைகளை மனிதன் மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும்.
    இந்தக் கொள்கைகளை ஏற்றுச் செயல்படுத்தும்படி மக்கள் அனைவரையும் அழைக்கவே ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் ஏற்படுத்தப்பட்டது.
    அதன் வரலாற்றின் இரண்டாம் தொகுதியே இந்நூல்
    4595
  • ஜமாஅத் கடந்து வந்த பாதை – 3 (மின்னூல் – E-Book)

    E-Book

    முஸ்லிம் என்றால் யார் என்றதும் நம்முடைய மன-துக்-குள் இரட்டைப் பரிமாணங்களைக் கொண்ட, வெளிப்படையான புறத் தோற்ற அடையாளங்களோடு மட்டுமே தொடர்புடைய வரைவிலக்கணம்தான் நிழலாடும். அதற்கு முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தை வரைவிலக்கணத்தின் மூன்றாவது பரிமாணத்தை (Third dimension) மாநாட்டின்போது தாம் ஆற்றிய ஜும்ஆ உரையில் முன்வைக்கின்றார், மௌலானா அபுல் அஃலா மௌதூதி!

    அந்த மூன்றாவது பரிமாணம் ஏற்படுத்துகின்ற அதிர்வும் தெளிவும் இனிமையானவை! மனத்தை லேசாக்கிவிடுபவை! சுவனத்திற்குச் செல்கின்ற பாதையில் மண்டிக் கிடக்கின்ற பனிமூட்டத்தை விரட்டியடிப்பவை! மனத்தை ஒருமுகப்படுத்துபவை!

    80160
  • ஜமாஅத் கடந்து வந்த பாதை – 4 (மின்னூல் – E-Book)

    E-Book

    விடுதலை வேட்கையும் மக்கள் போராட்டங்களும் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டிருக்க, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கான நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த கொந்தளிப்பான நாள்களில் அலஹாபாதில் நடந்த ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டின் நிகழ்ச்சித் தொகுப்பை விவரிக்கின்ற நூல்தான் இந்த நூல்.

    85170
  • ஜமாஅத் கடந்து வந்த பாதை – 5 (மின்னூல் – E-Book)

    E-Book

    இயக்கத் தலைவர்களின் எழுச்சியுரைகள், இயக்க ஊழியர்களின் பரிந்துரைகள், அன்றையக் காலத்துச் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்ற தகவல்கள், செயல் அறிக்கைகள் மீதான கருத்துரைகள் என இந்த மாநாடுகள் பற்றிய விவரங்களை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது இந்த நூல்.

    135275
  • ஜமாஅத் கடந்து வந்த பாதை – ஐந்தாம் தொகுதி

    நம் நாடு விடுதலை பெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு நாட்டின் வெவ்வேறு இடங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி நடத்திய மாநாடுகளின் நிகழ்ச்சிப் பதிவுகளை விவரிக்கின்ற நூல்தான் இந்நூல்.
    விடுதலை வேட்கையும் மக்கள் போராட்டங்களும் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டிருக்க, அவற்றோடு அரசியல் ஆதாயங்களுக்காக இந்துக்கள் என்றும், முஸ்லிம்கள் என்றும் மக்களை பிளவுபடுத்தி அரங்கேற்றப்பட்டு வந்த வெறுப்பரசியலின் தீய நாக்குகள் ஒட்டுமொத்த தேசத்தையும் பொசுக்கிக் கொண்டிருந்த, தினம் தினம் கலவரம், நித்தம் நித்தம் கொலை, கொள்ளை, சூறையாடல் என மதவாத வெறுப்பும் நெருப்பும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்த கொந்தளிப்பான நாள்களில் இராஜஸ்தான், மதராஸ், பீகார் என வெவ்வேறு பகுதிகளில் நடந்த மாநாடுகள்தாம் அவை.
    இயக்கத் தலைவர்களின் எழுச்சியுரைகள், இயக்க ஊழியர்களின் பரிந்துரைகள், அன்றையக் காலத்துச் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்ற தகவல்கள், செயல் அறிக்கைகள் மீதான கருத்-துரைகள் என இந்த மாநாடுகள் பற்றிய விவரங்களை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது இந்த நூல்.
    320
  • ஜமாஅத் கடந்து வந்த பாதை – நான்காம் தொகுதி

    எழுபத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் மாதத்தில் நடந்த ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டின் நிகழ்ச்சித் தொகுப்பை விவரிக்கின்ற நூல்தான் இந்த நூல்.
    விடுதலை வேட்கையும் மக்கள் போராட்டங்களும் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டிருக்க, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கான நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த கொந்தளிப்பான நாள்களில் அலஹாபாதில் நடந்த மாநாடு.
    இயக்கத்தின் அழைப்பும் செய்தியும் தொடக்கத்திலிருந்தே பெண்களையும் பெரும் அளவில் ஈர்த்தும் இயக்கியும் வந்துள்ளன என்பதற்கு இயக்கச் சகோதரி ஒருவரின் ஒரு மாத செயல் அறிக்கையே சான்று. எட்டு பக்கங்களில் நீள்கின்ற இந்த அறிக்கை தருகின்ற செய்திகள் ஏராளம், ஏராளம். மதச் சார்பற்றக் கல்வி கற்றவர்கள் இயக்கத்தை எப்படிப் பார்த்தார்கள், அவர்கள் மத்தியில் இருந்த ஐயங்களை இயக்கத் தலைவர்கள் எவ்வாறு தீர்த்தார்கள் என்பது பற்றிய விவரங்களை அப்படிப்பட்ட சகோதரர் ஒருவர் எழுதிய கடிதமும் அதற்கு ஜமாஅத் தலைவர் அளித்த பதில் கடிதமும் சுவையாக விவரிக்கின்றன.
    ஜமாஅத்துடன் தம்மைப் பிணைத்துக்கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவரையும் இயக்கப் பணியில் ஈடுபடுத்திக்-கொள்கின்ற நோக்கத்துடன் ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற தனிப்பட்ட திறமைகள், ஆற்றல்கள், ஆர்வங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு துறைகளில் களம் இறக்குவதற்காக இலக்கியம், இதழியல், மொழிபெயர்ப்பியல், சட்டம், வரலாறு, தத்துவம், பொருளியல், அரசியல் என இருபத்தைந்து துறைகளுக்காகத் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன என்கிற செய்தி சிந்திக்க வைக்கின்றது.
    மொத்தத்தில் இந்த நூல் அனைவரிடமும் இருக்க வேண்டிய வரலாற்று ஆவணமாக, வழிகாட்டுதல்களையும் அறவுரைகளையும் அள்ளித் தருகின்ற கருத்துப் பெட்டகமாக, ஊக்கமும் உற்சாகமும் அளிக்கின்ற சரித்திரக் குறிப்புகளைக் கொண்ட பதிவேடாக மிளிர்கின்றது.

    Author: T. AZEEZ LUTHFULLAH
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    170
  • ஜமாஅத் கடந்து வந்த பாதை 1

    ஜமாஅத்தே இஸ்லாமி எப்பொழுது தொடங்கப்பட்டது?
    இயக்கத்தின் துவக்கக் கட்டத்தில் எத்தகையப் பிரச்னைகள் ஏற்பட்டன?
    அவை எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன?
    துவக்கக் கால கூட்டங்களில் கலந்து கொண்ட புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் யார்? யார்?
    இந்தியத் துணைக் கண்டத்தின் மாபெரும் இஸ்லாமிய இயக்கமான ஜமாஅத்தே இஸ்லாமியின் வரலாறு கூறும் முதல் தொகுதி…!

    Author: G. ABDUR RAHIM
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    140
  • ஜமாஅத் கடந்து வந்த பாதை 2

    ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை, அனைத்து மக்களும் ஒரே தாய் தந்தையின் வழித்தோன்றல்கள் எனும் உண்மைகளை மனிதன் மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும்.
    இந்தக் கொள்கைகளை ஏற்றுச் செயல்படுத்தும்படி மக்கள் அனைவரையும் அழைக்கவே ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் ஏற்படுத்தப்பட்டது.
    அதன் வரலாற்றின் இரண்டாம் தொகுதியே இந்நூல்
    Author: G. ABDUR RAHIM
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST
    95
  • ஜமாஅத்தே இஸ்லாமி சில சந்தேகங்களுக்கு பதில்கள்

    ஜமாஅத்தே இஸ்லாமி 1941இல் சுதந்திர இந்தியாவிற்கு முன்பாக அமைக்கப்பட்டது.இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே அறியாமையின் வெளிப்பாடாக எதிர்க்கும் குழுவினரும் உருவானார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்றவாறு இவ்வியக்கத்தை விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். மக்களுக்கிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதன் மூலம் ஒரு தவறான சித்திரத்தை உருவாக்க முயன்றார்கள். அதே சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. அன்று என்ன பதில்கள், மறுப்புகள், விளக்கங்கள் அளிக்கப்பட்டதோ அவைகளே இன்றும் பதில்களாக கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.

    Author: MOULAVI MOHAMMED ISMAIL IMDHADHI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    35
  • ஜமாஅத்தே இஸ்லாமி சில சந்தேகங்களுக்கு பதில்கள் (மின்னூல் – E-Book)

    E-Book

    ஜமாஅத்தே இஸ்லாமி 1941இல் சுதந்திர இந்தியாவிற்கு முன்பாக அமைக்கப்பட்டது.இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே அறியாமையின் வெளிப்பாடாக எதிர்க்கும் குழுவினரும் உருவானார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்றவாறு இவ்வியக்கத்தை விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். மக்களுக்கிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதன் மூலம் ஒரு தவறான சித்திரத்தை உருவாக்க முயன்றார்கள். அதே சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. அன்று என்ன பதில்கள், மறுப்புகள், விளக்கங்கள் அளிக்கப்பட்டதோ அவைகளே இன்றும் பதில்களாக கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.

    2035
  • ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – ஒரு பார்வை

    இந்தச் சிற்றேடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குறித்த விவரங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.
    ஜமாஅத்தின் நோக்கம் – குறிக்கோள், செயல் திட்டங்கள், பணிகள் ஆகியவற்றைக் கூறி இச்சிறு நூல் நம்மை வியப்படையச் செய்கிறது.
    Author: K. JALALUDEEN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST
    6