இஸ்லாத்தைப் பாதுகாப்பதில் ஆண்களுக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நபித்தோழியர்களின் வரலாறு நம் முன் சாட்சியாக திகழ்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட எண்ணற்ற சோதனைகளையும் பிரச்னைகளையும் தைரியமாக எதிர்க் கொண்டவர்கள் நபித்தோழியர்கள்.
குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பயிற்சி அளிப்பதிலாகட்டும் மார்க்கத்தைப் பரப்புவதிலாகட்டும் நபித்தோழியர்கள் தங்களுக்குத் தாங்களே ஈடு இணையற்றவர்களாகத் திகழ்ந்தார்கள். அதேபோல் அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்மீதும் நேசம் கொள்வதன் வாயிலாக நாளை மறுமையில் நல்ல பலன் கிடைக்குமென்பதை உணர்ந்து அதன்படி வாழ்ந்து காட்டினார்கள்.
அன்று இஸ்லாத்திற்கு உயிரூட்டிய நபித்தோழியர்களின் வரலாறுகளை இன்று நாம் படிக்கும் பொழுது அவர்களைப் போன்று நாமும் நம் வாழ்வை மாற்ற வேண்டும் என்ற உணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்துகிறது.
இஸ்லாமியக் கொள்கையில் சங்கமித்தவர்களாக, இஸ்லாமிய மலர்ச்சிக்குத் துணைநிற்பவர்களாக மாற வேண்டும் என்று இந்நூல் நம்மைத் தூண்டுகிறது.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | June 2024 |
ISBN-13 | 978-81-232-0520-5 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Perfect |
Number of Pages | 112 Pages |
Be the first to review “முன்மாதிரி நபித்தோழியர்கள்”