ஆவேசமான மதவாதமும் பேருருவம் எடுக்கும் பொருளாதார நெருக்கடியும்தாம் இன்று நாடு எதிர்கொண்டிருக்கின்ற மிகப் பெரும் பிரச்னைகள் என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில் புள்ளிவிவரங் களையும் ஆய்வு முடிவுகளையும் தகவல்களையும் அடுக்கிக் கொண்டே போகின்றார் ஆசிரியர். கூடவே நிலைமைகள் பற்றிய தம்முடைய கூர்மையான பார்வையையும் தொலைநோக்குடன் கூடிய தீர்வையும் எடுத்துரைத்திருப்பது நூலின் வனப்பையும் கனத்தையும் கூட்டுகின்றது.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துகின்ற காரணிகளாய், உண்மை நிலையை மறைக்கின்ற திரைகளாய் இருப்பவற்றை பட்டியலிட்டிருப்பதும் பிரிவுச் சுவர்களை அகற்றுவ தற்காக ஆசிரியர் அருமையான தீர்வுகளையும் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்திட்டத்தையும் விவரித்திருப்பது இந்நூலின் சிறப்பு.
About The Author
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | JAN 2024 |
ISBN-13 | 978-81-232-0509-0 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 52 Pages |
Be the first to review “மாறி வரும் சமூகச் சூழலும் முஸ்லிம் இளைஞர்களும்”