திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய தூதரைப் பார்த்துக் கூறுகின்றான்: நீங்கள் வேதம் அருளப்பட்டவர்களிடம் சொல்லி விடுங்கள்: “எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்.” (திருக்குர்ஆன் 3 : 64)
யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நோக்கி இவ்வாறு கூறப்படுகிறதென்றால், இது முஸ்லிம்களுக்குப் பொருந்தாதா? ஒருமித்த கருத்துள்ள விஷயங்களில் முஸ்லிம் அல்லாதாரிடம் சமரசம் செய்துகொள்ள நம்மால் முடியுமென்றால் நமக்கிடையேயுள்ள பிரச்னைகளில் ஒரு தீர்வு கண்டு நாம் ஏன் ஒன்று படக் கூடாது?
அல்லாமா இக்பால் (ரஹ்) கூறுகிறார்: நலமும் ஒன்று, இச்சமுதாயத்தின் நஷ்டமும் ஒன்று. ஒருவரே எல்லாருக்கும் நபி, தீனும், ஈமானும் ஒன்றே. தூய ஹரமும், அல்லாஹ்வும், அருள்மறையும் ஒன்றே. இவற்றில் முஸ்லிமும் ஒன்றுபட்டிருந்தால் அது பெரிய விஷயமாயிருந்திருக்குமோ?
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | July 2008 |
ISBN-13 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | E-Book |
Number of Pages | 32 Pages |
Be the first to review “மத்ஹபுகள் சர்ச்சைகள் தேவையா? (மின்னூல் – E-Book)”