முஸ்லிம் தனியார் சட்டம்!
இஸ்லாமியச் சட்ட திட்டங்கள் இரகசியமானவையல்ல. அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு, அச்சிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. அரசு அந்தச் சட்டங்களை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். மார்க்கக் கல்விக் கூடங்களிலும் அவை அன்றாடம் கற்றுத் தரப்படுகின்றன. எனவே ஒரு விஷயத்தைக் குறித்து இஸ்லாமியச் சட்டப்படி முஸ்லிம்கள் நடக்கிறார்களா இல்லையா என்பதை அரசு பார்க்கட்டும். இஸ்லாமியச் சட்டப்படிதான் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என நிரூபணமாகிவிட்டால் பிறகு அரசுக்கு முன் இரு வழிகள்தான் இருக்க வேண்டும்.
1. முஸ்லிம்களின் மதக் கருத்தோட்டங்களில் அரசு தலையிடாமல் அவர்களின் மதக் கொள்கைக்கேற்ப செயல்பட முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.
2. “முஸ்லிம்களின் மதக் கருத்தோட்டங்கள் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. குடிமக்களின் மத உரிமைகளில் தலையிடமாட்டோம் எனும் கொள்கையை நாங்கள் இப்பொழுது கைவிட்டுவிட்டோம்” எனத் தெளிவாக – பகிரங்கமாக அரசு அறிவிக்க வேண்டும்.
குடிமக்களுக்கு மதச் சுதந்திரம் உண்டு அல்லது இல்லை என்பதை அரசு தெளிவாக அறிவித்துவிட்டால் முஸ்லிம்களுக்கும் பிரச்னை எளிதாகிவிடும். தமது உரிமைகளுக்காக அரசிடம் முறையிட்டுக் கொண்டிருப்பதில் தம் நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, தமக்குத் தேவை இந்த அரசா அல்லது இஸ்லாமிய வாழ்க்கையா என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்வார்கள்.
– மௌலானா அபுல் கலாம் ஆஸாத்
(1922இல் ஆற்றிய உரையிலிருந்து)
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Sep 1985 |
ISBN-13 | 978-81-232-0294-5 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 20 Pages |
Be the first to review “பொது சிவில் சட்டம் ஏன் கூடாது?”