நோன்பு மட்டுமல்லாது பாவமன்னிப்பு, பள்ளிவாசல், மறுமை நம்பிக்கை, இறைத்த்தூதர்கள் என இஸ்லாத்தின் பிற கோட்பாடுகளையும் இந்நூல் எடுத்தியம்புகிறது. அடிப்படையில் இது நோன்பைப் பற்றிச் சொல்லும் நூலாக இருப்பினும் இஸ்லாத்தைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் நூலாகவும் உள்ளது. இஸ்லாம் ஒரு மதமல்ல மார்க்கமே என்பதை எடுத்துச் சொல்கிறது. மறை வாசனை கலந்து இலக்கிய நயத்தோடு எழுதப்பட்ட நூல்.
– டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
மார்க்க நெறிகள் அர்த்தம் உள்ளவை. இவை பின்பற்றப்படுவதன் காரணம் என்ன, இதன் உட்பொருள் என்ன, இதனால் விளையும் நன்மைகள் ஆகியவற்றை இதுவரை பலரும் சொல்லியிருக்கலாம். ஆனால், இதை நன்கு அர்த்தப்படுத்தி எவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தந்திருப்பதில் ஒரு புதிய மைல்கல்லைத் தொட்டிருக்கிறார் இந்நூலாசிரியர்.
– லேனா தமிழ்வாணன்
ரமளான் மாதம் முழுவதும் நாள் விடாமல் ‘பிறைநிலாக் காலம்‘ என்ற தலைப்பின் கீழ், ‘தின இதழ்‘ நாளிதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. நோன்பின் அருமை, பெருமைகளை ஆச்சரியமான தகவல்களோடு சொல்கிறது இந்நூல். இஸ்லாம் மார்க்கத்தவர்களைக் கடந்து, மற்ற மார்க்கங்களைச் சேர்ந்தவர் களும் எளிதாக விவரங்களை அறிந்து கொள்ளும் அளவுக்கு மிக மிக எளிமையாக இந்நூல் விளங்குகிறது.
– விகேஷ்
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Apr 2021 |
ISBN-13 | 978-81-232-0389-8 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 96 Pages |
Be the first to review “பிறைநிலாக் காலம்”