நபித்தோழர்களின் வரலாற்றைப் படித்து நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கலாம்.
காரணம், நபித்தோழர்களின் வரலாற்றை முழுமையாகப் படித்திருக்க மாட்டோம். அப்படியே படித்திருந்தாலும் அவற்றுக்கும் நமது அன்றாட வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது என்ற எண்ணம்தான் எழும்.
நாம் கேட்கும் சொற்பொழிவுகளில் கூட நபித்தோழர்களின் வரலாற்று நிகழ்வுகளைப் பெரும்பாலும் கேட்க முடிவதில்லை. கட்டுக் கதைகளும், இறைநேசச் செல்வர்களின் பெயரால் கூறப்படும் நம்பவே முடியாத அற்புதங்களையும் தான் பல உரைகளில் கேட்க முடிகிறது. சமகால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு நபித்தோழர்களின் நிகழ்வுகள் உரைகளில் ஏன் கூறப்படுவதில்லை என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.
நபித்தோழர்களின் வரலாற்றையும் சமகால வரலாற்றையும் ஒப்பிடும்போதுதான் நபித்தோழர்கள் எவ்வளவு உன்னத நிலையில் வாழ்ந்துள்ளனர் என்பதை இந்த நூல் நமக்குக் காட்சிப்படுத்துகிறது.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Mar 2024 |
ISBN-13 | 978-81-232-0517-5 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 208 Pages |
Be the first to review “நபித்தோழர்களின் பள்ளிக்கூடம்”