தொழுகையைப் பலரும் பலவிதமாகப் பார்த்திருக்கிறார்கள்; ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆன்மிகக்கண்ணோட்டத்தில், சமத்துவப் பார்வையில், சமுதாயக் கூட்டமைப்பு நோக்கில் என தொழுகை மீதான பார்வைகள் விரியும்…! தொழுகை என்பது, மார்க்கத்தின் ஒருங்கிணைந்த நன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய உன்னத வழிபாடு ஆகும். தொழுகை யின் எல்லாப் பரிமாணங்களையும் மக்கள் மனங்களில் பதிக்கும் இது போன்ற ஒரு நூல் தமிழில் இல்லை…! அந்த வகையில் இதுவே முன்னோடி நூல்!
மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் : குர்ஆனை இந்தி, உர்தூ ஆகிய இரு மொழிகளிலும் மொழிபெயர்த்தவர்; தத்துவ அறிஞர்; முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்; அரபி , உர்தூ ஆகிய மொழிகளில் வெளியான முக்கியமான நூல்கள் சிலவற்றை இந்தியில் மொழி பெயர்த்தவர்; கவிஞரும்கூட. எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு, சமூகவியல், பொருளியல், அரசியல், ஒழுக்கவியல், அழைப்பியல் என பல்வேறு துறைகள் தொடர்பான நூற்றுக்கணக்கான நபிமொழிகளை கலாமே நுபுவ்வத் என்கிற பெயரில் ஆறு தொகுதிகளில் தொகுத்த அறிஞர்.
About The Author
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | 2005 |
ISBN-13 | 978-81-232-0171-9 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 5 |
Binding | PB |
Number of Pages | 48 Pages |
Be the first to review “தொழுகை இஸ்லாத்தின் முழுமையான வழிபாடு”