குர்ஆன் கொண்டாடுகின்ற சாதனை மனிதர்களில் ஒருவர்தான் துல்கர்னைன்.
மீடியா(மேதியா) லிடியா (ஆசியா மைனர்) ஆகிய அரசுகளை வென்று வசப்படுத்திக் கொண்ட அவர் பாபிலோனிய அரசையே மண்டியிடச் செய்து வெற்றி வாகை சூடினார். தொடர்ந்து கிழக்கே சிந்து, துர்கிஸ்தான் வரையிலும், மேற்கே எகிப்து, லிபியா வரையிலும், தென்கிழக்கே மாஸிடோனியா, திரேஸ் வரையிலும், வடக்கே காகசஸ், குவாரிஸம் வரையிலுமாக வெற்றி மேல் வெற்றி கண்ட அவர் அந்தக் காலத்து ஒட்டுமொத்த நாகரிக உலகத்தையும் தம்முடைய ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்.
பெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்த சிறப்புக்காகவா குர்ஆன் அவரைக் கொண்டாடுகின்றது? இல்லை.
யஃஜூஜ்-மஃஜூஜ் கூட்டத்தாரின் அராஜகங்களிலிருந்து கருங்கடலுக்கும் (ஆடூச்ஞிடு குஞுச்) காஸ்பியன் கடலுக்கும் (இச்ண்ஞடிச்ண குஞுச்) இடையில் இருக்கின்ற காகஷியா பகுதி வாழ் மக்களை காப்பாற்றுவதற்காக மிகப்பெரும் தடுப்புச் சுவர் ஒன்றைக் கட்டிய சிறப்பும் துல்கர்னைனையே சாரும்.
மிகப் பெரும் தடுப்பரணைக் கட்டிய சிறப்புக்காகத்தான் குர்ஆன் அவரைக் கொண்டாடுகின்றதோ என்கிறீர்களா? நிச்சயமாக இல்லை.
அப்படியானால் துல்கர்னைனிடம் இருந்த சிறப்புகள்தாம் என்ன? காலத்தை வென்று நிற்கும் ஆளுமையாய் துல்கர்னைன் அவர்களை வார்த்தெடுத்த அந்த அழகு பரிமாணங்கள்தாம் என்ன? சாதனையாளராக அவரை மிளிரச் செய்த அந்த தனிப் பண்புகள்தாம் என்ன? அவற்றிலிருந்து நமக்குக் கிடைக்கின்ற பாடங்கள் தாம் என்ன ஆகியக் கேள்விகளுக்கான விடைதான் இந்த அழகிய நூல்.
About The Author
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | JAN 2024 |
ISBN-13 | 978-81-232-0515-1 |
SIZE | 4.75″ X 7″ |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 30 Pages |
Be the first to review “துல்கர்னைன் தரும் செய்தி..!”