அத்தியாயம் அல்ஹாக்காவின் ஆரம்ப 1 முதல் 37 வரையுள்ள வசனங்கள் மறுமையை மறுக்கும் போக்கு தீமைகளில் மூழ்குவதற்குதான் வழிவகுக்கும். அதன்
விளைவு பேரழிவையே உருவாக்கும் என்று மறுமையின் நிலைமையை விளக்குகின்றதாக அமைந்துள்ளன.
கியாமத், மறுமை, நரகம், சுவனம் பற்றிய செய்திகளை ஏளனம் செய்த இறைமறுப்பாளர்களுக்கு அல்மஆரிஜ் அத்தியாயத்தின் வாயிலாக எச்சரிக்கைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நூஹ் அத்தியாயத்தில் நபி நூஹ் (அலை) அவர்களின் வரலாறு வெறுமனே ஒரு கதையாகக் கூறப்படவில்லை. மாறாக இதன் நோக்கம், மக்கத்து இறைமறுப்பாளர்களை எச்சரிக்கை செய்வதாகும்.
ஜின்களின் ஒரு குழு, திருமறையைச் செவியுற்றவுடன் அதனால் அவற்றிடம் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன? அவை தமது சமூகத்திற்குத் திரும்பிச் சென்ற பின்னர், திருமறைச் செய்திகளை எவ்வாறு எடுத்துரைத்தன? என்ற நிகழ்வை அல்ஜின்னு அத்தியாயத்தின் 1 முதல் 15 வரை உள்ள வசனங்கள் பதிவு செய்துள்ளன.
அல்முஸ்ஸம்மில் அத்தியாயத்தின் முதல் ஏழு வசனங்களில் ‘மாபெரும் பணி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்தப் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தாங்கள் இரவு நேரங்களில் பாதி இரவு அல்லது அதைவிடக் கூடுதலாக அல்லது குறைவாக தொழுதுவர வேண்டும். இதுதான் செயல்ரீதியான சிறந்த பயிற்சியாகும்’ என்று நபியவர்களுக்கு அறிவுரைக் கூறப்பட்டுள்ளது.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Dec 2021 |
ISBN-13 | 978-81-232-0415-4 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 168 Pages |
Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 69-73 (அல்ஹாக்கா – அல்மஆரிஜ் – நூஹ் – அல்ஜின்னு – அல்முஸ்ஸம்மில்)”