அத்தியாயம் அத்தஹ்ரீமில் நபிகளாரின் மனைவியரோடு தொடர்புடைய சில நிகழ்வுகளின் செய்திகளும், ஹலால், ஹராம் இரண்டும் அல்லாஹ்வின் கைகளில் உள்ளது என்றும், சமூகத்தில் நபியவர்களின் தகுதியைப் பற்றியும், நபிகளாரின் வாழ்வு ஆவணப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பதையும், இஸ்லாம் என்றுமே ஒருதலைப்பட்சமாகச் செயல்படாது என்பதையும் விளக்குகின்ற அத்தியாயமாகத் திகழ்கிறது.
அத்தியாயம் அல்முல்க்கில் மிகவும் சுருக்கமாக இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், அவை தெரிவிக்கும் போதனைகள் மக்கள் மனங்களில் தெளிவாக இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக. மறுபுறம், அறியாமையில் வீழ்ந்து, வழிகேட்டில் மதியிழந்து காணப்படும் மக்களை மிகவும் ஆழமான முறையில், பாதிக்கும் வகையில், தாக்கம் ஏற்படுத்தும் முறையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் அறியாமை நீங்க வேண்டும், அவர்களை சிந்திக்கத் தூண்ட வேண்டும், அவர்களின் மனசாட்சியை விழிப்படையச் செய்ய வேண்டும் என்ற ரீதியில் இந்த அத்தியாயம் விளங்குகிறது.
அல்கலம் அத்தியாயத்தில் இஸ்லாத்தின் பகைவர்கள் எழுப்புகின்ற விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் கூறப்படுகின்றது. நபிகளாரை நிலைகுலையாமையுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டுமென்று அறிவுரை கூறுகிறது.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | July 2021 |
ISBN-13 | 978-81-232-0396-6 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 164 Pages |
Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 66-68 (அத்தஹ்ரீம் – அல்முல்க் – அல்கலம்)”