‘வானங்களையும், பூமியையும் படைத்து இருள்களையும், ஒளியையும் உருவாக்கியவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!’ என்ற வசனத்தில் இருந்து தொடங்கும் விளக்கவுரைகள் ஏகத்துவத்தை எடுத்தியம்புவதாக இருக்கின்றன.
32-வது வசனமான ‘உலக வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையும் அன்றி வேறில்லை’ என்ற வசனத்திற்கு நீண்ட விளக்கத்தின் மூலம் மனிதனிடம் இருக்கும் தவறான கருத்துக்களைக் களைவதாக அமைந்துள்ளன.
33, 34 வசனங்களில் அல்லாஹ்வின் தூதர்களைப் பொய்யர்கள் என்று தூற்றியதுடன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களை அவர்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டதைப் போல் அன்பு நபிகளார் (ஸல்)
அவர்களும் பொறுமை காத்திட வேண்டுமெனும் வசனங்களுக்கு அளிக் கும் விளக்கங்கள் சத்தியப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு அடியாரும் வாழ்க்கையில் செயல்படுத்த பயனுள்ளவையாக இருக்கின்றன.
74 முதல் 82 வரையுள்ள வசனங்களில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏகத்துவத் தேடலின் விளக்கவுரைகளைப் படிக்கும் பொழுது சத்தியத்தைப் புரிந்து வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக உள்ளது.
இந்த அத்தியாயம் 165 வசனங்களைக் கொண்டதாயினும் ஏகத்துவத்தின் முக்கியத்துவத்தையும் சிறப்புகளையும் உலக மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதியும் வண்ணம் தெளிவுபடுத்தப்படுகிறது.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | May 2018 |
ISBN-13 | 978-81-232-0329-4 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 2 |
Binding | PB |
Number of Pages | 200 Pages |
Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 6 (அல்அன்ஆம்)”