‘அல்மாயிதா’ அத்தியாயத்தில் இறைத்தூதர்கள் அனைவரும் குறிப்பாக நபி ஈஸா (அலை) அவர்களும் ஏகத்துவத்தையே போதித்தார்கள் என்பது வெகுதெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நபி ஈஸா (அலை) அவர்கள் தமது வாழ்நாளில் போதித்ததையும், நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லவிருப்பதையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான்.
வசனம் 17இல் ‘திண்ணமாக மர்யத்தின் குமாரர் மஸீஹ்தான் அல்லாஹ் என்று கூறியவர்கள், நிச்சயமாக நிராகரித்தவர்களாவார்கள்’ என்பதற்கு மௌலானா அவர்கள் கிறிஸ்தவர்களின் தவறு எவ்வாறாக இருந்தது என்பதை விளக்கும் பொழுது மனிதப் பண்புகளும் இறைமைப் பண்புகளும் இரண்டறக் கலந்த ஆளுமைதான் மஸீஹ் (அலை) அவர்கள் என்கிற தவறான புரிதல்தான் அவர்கள் தொடக்கத்தில் செய்த தவறு என்பதை விளக்கியுள்ளார்கள்.
இந்த அத்தியாயத்தில் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் விவரங்கள், வேட்டையாடுதல், சுத்தமாக இருத்தல், நீதி, நேர்மை, இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடைகள் என்பவை விளக்கப்படுகின்றன. மேலும், உலகில் நடந்த முதல் கொலை, இறந்த மனிதனைப் புதைக்கும் முறை, கொள்ளை, திருடு, உறுப்புகளைத் துண்டித்தல் ஆகிய தீயசெயல்களுக்கான தண்டனைகள், குடி, சூதாட்டம் மூலம் ஏற்படும் தீங்குகள் என்பன போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களைக் காணலாம்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | May 2018 |
ISBN-13 | 978-81-232-0326-3 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 3 |
Binding | PB |
Number of Pages | 204 Pages |
Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 5 (அல்மாயிதா)”