அல் அன்கபூத் அத்தியாயம், எவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு மற்ற பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்களின் ஏக இறைநிராகரிப்புக் கொள்கையென்பது சிலந்தி வலையைப் போல் மிக்க பலவீனமானது என்னும் கருத்தை உள்ளடக்கியுள்ளது. நிராகரிப்பாளர்களின் கொடுமைகளையும் துன்புறுத்-தல்-களையும் கண்டு அச்சம் கொள்ளத் தேவை இல்லை. நபி மூஸா (அலை) அவர்களைப் போல நீதிப்பாதையில் நிற்பவர்கள் நிலைத்திருப்பார்கள். அநீதியிழைக்கும் அக்கிரமக்காரர்கள் ஃபிர்அவ்னைப் போல மாய்ந்தொழிந்து போவார்கள் என்று பல எடுத்துக்காட்டுகளைக் கூறும் இவ்வத்தியாயம் மோசவலைகளில் மக்கள் விழுந்து விடாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் இறை-வனுக்கு மேலும் மேலும் நன்றி செலுத்தும் போது மேன்-மேலும் பல வெற்றிகள் கிட்டும் என்ற நற்செய்தியையும் வழங்குகிறது.
அல் அன்கபூத் அத்தியாயம் இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக விளங்குகிறது.
முதற் பிரிவு : பொறுமை, தியாகம், பெற்றோருக்குக் கீழ்ப்படிதல், அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல், உண்மை நம்பிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிப்போ-ருக்குக் கீழ்ப்படியாமல் அவர்களுடன் போராடுதல், நபிமார்களின் சரிதை ஆகியவை அத்தியாயத்தின் தொடக்க முதல் 41 வசனம் முடிய கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது பிரிவு : நிராகரிப்போருடனும் வேதம் வழங்கப்பட்டோருடனும் விவாதித்தல், நபித்துவத்தின் உண்மையை நிரூபித்தல் ஆகியவை வசனம் 42 முதல் அத்தியாயம் முடிவு வரை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2019 |
ISBN-13 | 978-81-232-0342-3 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 2 |
Binding | PB |
Number of Pages | 144 Pages |
Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 29 (அல் அன்கபூத்)”