நபிகளாரைப் பின்பற்றி நடக்கும்படி மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புதான் இந்த அத்தியாயத்தின் மையக் கருத்தாகும். ஒட்டுமொத்த உரையும் இதனை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது.
எவர்களெல்லாம் நபிகளாரின் அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களோ, மேலும் எவர்களிடம் இன்னின்ன பண்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றனவோ அவர்கள்தாம் திண்ணமாக இம்மையிலும் மறுமையிலும் வெற்றிக்கு உரியவர்கள் என்கிற கூற்றோடு உரை தொடங்குகிறது.
அதனைத் தொடர்ந்து நபிகளார் (ஸல்) அழைப்பு விடுத்து வந்த ஏகத்துவம், மறுமை ஆகிய கோட்பாடுகள் சத்தியமானவைதாம் என்பதற்கு உங்களுடைய இருப்பும் இந்த ஒட்டுமொத்த பேரண்டமுமே சான்று என்பதே உணர்த்துகின்ற வகையில் மனிதனின் பிறப்பு, வானங்கள், பூமி, தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் படைப்பு குறித்தும் இந்தப் பேரண்டம் முழுவதிலும் பரவியிருக்கின்ற எண்ணற்ற சான்றுகளின் பக்கம் மக்களின் கவனம் ஈரக்கப்படுகின்றது.
அடுத்து பல்வேறு இறைத்தூதர்களின் வரலாறுகளும் அவர்களின் சமூகங்கள் பற்றிய குறிப்புகளும் தொடங்கிவிடுகின்றன. மேம்போக்காகப் பார்த்தால் இவை வெறுமனே வரலாறுகளாகத்தாம் தென்படுகின்றன. ஆனால் இவற்றின் ஊடே நான்கு செய்திகளை வாசகர்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளன.
1. நபிகளாருக்கு எதிராகக் கிளப்பியிருக்கின்ற ஆட்சேபங்களும் ஐயங்களும் புதியவை அல்ல.
2. ஏகத்துவம், மறுமை ஆகியவை குறித்து தான் அனைத்து நபிமார்களும் எடுத்துரைத்தனர்.
3. இறைத்தூதர்களின் இந்த அழைப்பை ஏற்க மறுத்து, அவர்களை எதிர்ப்பதில் நிலைத்துநின்ற சமூகங்கள் இறுதியில் அழிந்தொழிந்து போயின.
4. இறைவனிடமிருந்து ஒரே மார்க்கம்தான் எல்லாக் காலங்களிலும் அருளப்பட்டு வந்துள்ளது.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Mar 2018 |
ISBN-13 | 978-81-232-0327-0 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 144 Pages |
Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 23 (அல் முஃமினூன்)”