குர்ஆனின் தொடக்கத்திலேயே அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை இடம்பெறச் செய்திருப்பதன் நோக்கம் இதுதான்: நீங்கள் உண்மையிலேயே இந்த வேதத்தின் மூலம் பயன்பெற விரும்புகிறீர்கள் எனில், முதலில் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று எடுத்துச் சொல்வதுதான் அந்த நோக்கம்.
இந்த (அல் பகறா) அத்தியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு, அருளப்பட்ட சூழ்நிலையையும் வரலாற்றுப் பின்னணியையும் தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
ஹிஜ்ரத்திற்கு முன்பு இஸ்லாத்தின் அழைப்பு மக்க மாநகரில் விடுக்கப்பட்டு வந்தது வரையில் பெரும்பாலும் (சிலைவணங்கிகளான) இணைவைப்பாளர்களை நோக்கியே செய்தி எடுத்துரைக்கப்பட்டு வந்தது. அவர்களைப் பொறுத்து இஸ்லாத்தின் இந்தக் குரல் புதிய – அந்நியமான குரலாக இருந்தது. ஆனால் ஹிஜ்ரத்திற்குப் பின்போ (இஸ்லாத்தின் செய்தியை) யூதர்களை நோக்கி எடுத்துரைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர்களின் குடியிருப்புகளும் கிராமங்களும் மதீனாவுக்கு மிக அருகிலேயே இருந்தன.
மதீனாவுக்கு வந்ததும் இஸ்லாமிய அழைப்புப் பணி முற்றிலும் புதிய கட்டத்தை அடைந்திருந்தது. மக்காவில் இருந்த வரையில் இறைமார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை – கோட்பாடுகளைப் பரப்புரை செய்தல், இறைமார்க்கத்தை ஏற்றுக்கொள்பவர்களுக்குப் பண்பாட்டுப் பயிற்சி அளித்தல் ஆகிய இரண்டு களங்கள் வரையில்தான் பணிகள் நடைபெற்றுவந்தன.
ஆனால் ஹிஜ்ரத்திற்குப் பிறகு அரபுலகில் இஸ்லாத்தை ஏற்றுக்-கொண்டிருந்த அனைத்து மக்களும் எல்லாத் திசைகளிலிருந்தும் கிளம்பி வந்து ஓரிடத்தில் ஒன்றுதிரளத் தொடங்கிய பொழுது – (மதீனத்து) அன்சாரிகளின் உதவியுடன் சிறியதொரு இஸ்லாமிய அரசுக்கான அடிக்கல் நாட்டப்பட்ட பொழுது – பண்பாடு, நாகரிகம், சமூகவியல், பொருளியல், சட்டம், அரசியல் ஆகிய துறைகள் தொடர்பான அடிப்படைக் கொள்கைகளை, வழிகாட்டல்களை இறைவனும் அளிக்கத் தொடங்கினான்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Dec 2016 |
ISBN-13 | 978-81-232-0244-0 |
Language | Tamil |
Edition | 1 |
Type | “E-Book” |
Number of Pages | 500 Pages |
Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன்_அத் 1 & 2 (மின்னூல் – E-Book)”