அதாகப்பட்டது…
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அமைப்பு விதிச் சட்டம், அது வெளியிட்டிருக்கும் நூல்கள், இலக்கியங்கள், பத்திரிகைகள் மேலும் அதனுடைய முழு வரலாறும் பின்வரும் பேருண்மைக்கு சான்று பகர்கின்றன:
ஜமாஅத் ஒரு கொள்கை வாய்ந்த குறிப்பிட்ட எந்த ஒரு வகுப்பையும் சாராத அமைப்பாகும். மதம், சமுதாயம், வர்ணம், இனம், மொழி போன்ற அனைத்து பாகுபாடுகளை விட்டும் மேலோங்கி நாட்டு மக்கள் அனைவரையும் அது சத்தியத்தின்பால் அழைக்கிறது. மனிதர்களுக்காக இறைவன் வழிகாட்டுதலின்பால் தொடக்கத்திலிருந்து அடிப்படையாகவும் அருளிய அழைப்பு விடுக்கிறது. இதுவே ஜமாஅத்துடைய அழைப்பின் மையக் கருத்தாகவும் இருக்கிறது. அதனுடைய நடவடிக்கைகள், ஈடுபாடுகள் அனைத்தும் அந்த அடிப்படைக் கருத்தை மையமாகக் கொண்டே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.
ஜமாஅத்தின் 50 ஆண்டுகால வரலாற்றிலிருந்து மேற்சொன்ன கருத்துக்கு மாறாக அது செயல்பட்டதாக ஒரு சான்றையும் எடுத்துக்காட்ட முடியாது.
ஜமாஅத் தன்னுடைய அமைப்பு விதிச் சட்டத்திற்கும் அமைதியான ஜனநாயக முறைகளுக்கும் கட்டுப்பட்ட ஓர் அமைப்பாகும் என்பது மட்டுமல்ல, தன்னுடைய நீண்ட வரலாற்றின் நடைமுறையிலும் மேற்சொன்ன வழிமுறைகளையே அது கடைப்பிடித்து வந்திருக்கிறது. இராணுவ ரீதியிலான வகுப்புவாத அமைப்புகளின் வழிமுறைகளை அது எப்போதும் கடைப்பிடித்ததில்லை.
Publisher | Jamaat-e-Islami Hind |
Publication Year | Mar 1995 |
ISBN-13 | |
Language | Tamil |
Edition | 6 |
Type | “E-Book” |
Number of Pages | 72 Pages |
Be the first to review “ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதாரங்களில் ஒளியில்! (மின்னூல் – E-Book)”