வட இந்திய முஸ்லிம்களின் வரலாறு எழுதப்பட்டுள்ளதுபோல் தென்னிந்திய முஸ்லிம்களின் வரலாறு & குறிப்பாக தமிழக முஸ்லிம்களின் வரலாறு முறையாக எழுதப்படவில்லை. அப்படியே எழுதப்பட்டிருப்பினும் அவை திப்புசுல்தான், மாலிக்காபூர், ஔரங்கசீப் ஆகியோர் பற்றிய தாறுமாறான செய்திகள், கட்டாய மதமாற்றம், இஸ்லாம் வாள் கொண்டு பரப்பப்பட்டது போன்ற செய்திகளே எழுதப்பட்டிருக்கும். தமிழக முஸ்லிம்களின் வரலாறு எழுத போதுமான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காத நிலையிலும், கிடைக்கும் சான்றுகளைச் சரியாக உற்றுநோக்கி ஆய்வு செய்யாமலும் தொன்றுதொட்டு வழங்கிவரும் நாட்டுவழக்காறு, வாய்மொழிக் கதைகள் உருவாக்கப்பட்ட சில வரலாற்று நாயகர்கள் என இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு தமிழக முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார, வரலாறு எழுதப்பட்டுவருகிறது.
தமிழகத்தில் இஸ்லாம் பரவிய வரலாறு குறித்தும் அது தொடர்பான சில செய்திகளையும் முன்னிலைப்படுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்கள் குறித்து எழுதப்பட்டுவரும் செய்திகள் ஆசிரியரின் முனைப்பில் சில கூடுதல் தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Sep 2023 |
ISBN-13 | 978-81-232-0504-5 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Perfect |
Number of Pages | 136 Pages |
Be the first to review “சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள்”