தந்தை பெரியாரில் தொடங்கி பன்னாட்டளவிலான நாத்திகச் சிந்தனையாளர்கள் இறைவன் குறித்தும், மதம் குறித்தும், பேரண்டத்தின் படைப்பு குறித்தும் சொன்னது என்ன என்பதை அழகாக ஆராய்ந்து, நாத்திகத்தின் இயலாமையை, போதாமையைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.
‘இந்திய நாத்திகம்’, ‘தமிழகமும் நாத்திகமும்’ ஆகிய தலைப்புகளில் இறைமறுப்புக் கொள்கை கடந்துவந்த பாதையை அழுத்தமாக விளக்குகிறது நூல்.
நாத்திகவாதம் பேசியவர்கள் பலரும் உண்மையில் நாத்திக வாதத்தை விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள் அல்லர், நாத்திகத்தை நோக்கித் தள்ளப்பட்டவர்கள் என்பதை நாத்திக அறிஞர்களின் நூல்களையும் மேற்கோள்களையுமே சான்றுகளாய்ச் சமர்ப்பித்து அறிவுச் சமர் புரிந்துள்ளார் நூலாசிரியர் அவர்கள்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2024 |
ISBN-13 | 978-81-232-0507-6 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 132 Pages |
Be the first to review “கடவுள் உண்டு! கடவுள் ஒன்று!”