19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் முடிவில், மேற்கத்திய நாடுகள் ஏற்கெனவே மதத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. அவர்களின் கருத்துப்படி, தெய்வீக வழிகாட்டுதலுக்கான தேவையிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக இம்மத நீக்கத்தைச் செய்துகொண்டனர். இப்போது அவர்களுக்கு அறிவின் முக்கிய ஆதாரம் “இயந்திர பொருள்முதல்வாதம்” மட்டுமே ஆகும்.
இது டார்வின், மார்க்ஸ், ஃபிரைடு போன்றோரின் தத்துவங்களின் வெற்றியின் சகாப்தம். மனிதன் அஷ்ரஃப் உல் மக்லூகத் (படைப்புகளில் சிறந்தவன்) ஆக்கப் பட்டுள்ளான் என்பதையும், அவனது இருப்புக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதையும் மக்கள் மனங்களில் இல்லாமல் ஆக்குவதையே இம்மூவரும் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில்தான், மௌலானா மௌதூதி இத்தகைய மேற்கத்திய தத்துவவாதிகளுக்கு தர்க்கரீதியாகத் தமது ஆய்வுகளின் வழியே அறைகூவல் விடுத்ததோடு, அவர்களின் கருத்துகளிலுள்ள ஆழமற்ற தன்மையையும் நிரூபித்தார்.
ஆனால் மேற்கிலிருந்து வருவது எதையும் கண்மூடித் தனமாகப் பின்பற்றும் முஸ்லிம் சிந்தனையாளர்கள் (என்று அழைக்கப்படும்) நபர்களையும் நோக்கி கேள்வி எழுப்பினார். அவர் தமது பகுத்தறிவின் உயர்சக்தியின் மூலம், அக்காலத்தின் பரவலான தத்துவங்களின் பல்வேறு குறைபாடுகளைத் தெளிவுற விளக்கிக் காட்டினார். கூடவே, இஸ்லாத்தின் மேன்மையை ஒரு முழுமையான வாழ்க்கை நெறிமுறையாகவும் நிரூபித்தார். தற்போதைய இந்த நூலும்கூட, இத்தகைய அவரது சேவைகளுக்கான சான்றுகளில் ஒன்றாகும். இதில், மௌலானா அவர்கள் ‘சமூக நீதி’ எனும் மையக்கருத்தை விரிவாகவும், பிற சித்தாந்தங்களுடன் இஸ்லாத்தின் சமூக நீதிக் கண்ணோட்டத்தை ஒப்பிட்டும் பார்த்து அதன் மேன்மையை மிக அழகாக விளக்கியுள்ளார்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Nov 2024 |
ISBN-13 | 978-81-232-0525-0 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 56 Pages |
Be the first to review “இஸ்லாமும் சமூக நீதியும்”