அரசியலுக்கும் மதத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என்று கூறுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், அரசியல் மனித வாழ்க்கையுடன் இணைந்த ஒரு துறையாகும்.
அதனை பிரித்து விட்டு வாழ இயலாத ஒன்றாக விளங்குகிறது.
சமுதாய வாழ்க்கையில் அமைதி நிலவ வேண்டும் என்றால் அங்கு அரசியல் இருக்க வேண்டும்.
அரசியல் ஒரு சாக்கடை என்று நினைத்து அதை விட்டு விலகுவது மிகப் பெரிய தவறாகும். படித்தவர்களும் சான்றோர்களும் பங்கேற்காமல் புறக்கணிக்கும் பொழுது நீதிமிக்க, அமைதியான சமூகம் உருவாகாது.
அப்படிப்பட்ட சமூகம் உருவாக வேண்டுமென்றால் ஓர் அரசு தேவை. அதற்கு அரசியல் தேவையாக இருக்கிறது.
இஸ்லாமிய ஆட்சி மக்களாட்சியைச் சார்ந்ததும் இல்லை, ஜனநாயக ஆட்சியைச் சேர்ந்ததும் இல்லை. அது ஒரு இஸ்லாத்தை பின்பற்றும் ஆட்சி/அரசு என்பதற்கான விளக்கத்தை குறிப்பிட்டு அதன் நோக்கத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
இஸ்லாத்தில் அரசியல் இல்லை என்கிற சிந்தனையுடன் இருப்பவர்களுக்கு தெளிவை உண்டாக்கும் விதமாக நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘இஸ்லாமும் அரசியலும்’ என்ற இந்நூல் மூலம் தக்க விளக்கங்களை அளித்துள்ளார்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Dec 2021 |
ISBN-13 | 978-81-232-412-3 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 76 Pages |
Be the first to review “இஸ்லாமும் அரசியலும்”