1933 – 34 காலகட்டத்தில் போபால், ஹைதராபாத் (தக்கன்) முதல் பிரிட்டிஷ் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறையில் இருந்து வந்த சட்டங்களின் (பலவீனங்கள்) குறைபாடுகளால் முஸ்லிம்களின் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளை நீக்குவதற்காக, இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காகப் பயனுள்ள வகையில் எதையாவது செய்தே ஆக வேண்டிய தேவை கடுமையானதொரு பிரச்சனையாக மேலெழும்பி வந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பாகங்களிலும் ஏராளமான முன் வரைவுச் சட்டங்கள் தயார் செய்யப்பட்டன. அவை குறித்த விவாதங்களின் சப்தங்கள் பல வருடங்களாக எதிரொலித்து வந்தன. ஆனாலும், பிரச்சனையின் எல்லாக் கோணங்களையும், ஏன், முக்கியமான கோணம்கூடப் போதுமான அளவுக்குக் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று எனக்குத் தோன்றியது. அதனால் 1935-ல் ‘தர்ஜுமானுல் குர்ஆனி’ல் ‘ஹுகூகுஸ் ஸவ்ஜைனி’ எனும் தலைப்பில் நீண்டதொரு கட்டுரைத் தொடரை நான் எழுதினேன்.
அதில் இஸ்லாமியத் திருமணச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அதன் உயிரோட்டங்களையும் விளக்கியதுடன், திருமண உறவுகளைச் சீர்படுத்துவதில் குர்ஆன், ஹதீஸின் போதனைகளையும் விளக்கினேன். அத்துடன், முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்ற சட்ட ரீதியான பிரச்சனைகளுக்குரிய சரியான தீர்வுகள் எனும் நிலையில் ஏராளமான வழிகாட்டுதல்களையும் நான் எடுத்து முன் வைத்தேன். குறிப்பிட்ட அத்தொடரை அறிஞர்களை முன்னிலைப்படுத்தியே எழுதியிருந்தேன். ஆனாலும், சாமான்ய வாசகர்களுக்கும் பயனளிக்கின்ற பல்வேறு விஷயங்களும் அதில் இருந்தன. குறிப்பாக, முன்னரே எனது ‘பர்தா’ எனும் நூலை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தவர்கள், இஸ்லாத்தின் முழுமையான சமூக ஒழுங்கைப் புரிந்து கொள்ள உதவுகின்ற இஸ்லாமியக் குடும்ப முறைகளை அறிந்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தனர். இதனை கவனத்தில் கொண்டு குறிப்பிட்ட அக்கட்டுரைத் தொடரில், இன்னும் தேவையான சில பகுதிகளை இணைத்து நூல் வடிவில் வெளியிட்டுள்ளேன்.
– அபுல் அஃலா
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Mar 2022 |
ISBN-13 | 978-81-232-0425-3 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 202 Pages |
Be the first to review “இஸ்லாமிய திருமணச் சட்டங்கள் (Islamic Marriage Law)”