“இலகுவழி இஸ்லாம்” உயர்கல்வி மாணவர்களுக்கான பாடத்திட்டம் என்ற இந்த புத்தகத்தில் இஸ்லாமிய வாழ்வியலைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் எளிய தமிழ் நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அடிப்படைகளான ஏகத்துவம் தூதுத்துவம், மறுமைக் கோட்பாடு, இஸ்லாமிய வாழ்வியல் நடைமுறைகள், நபிகள் பெருமானாரின்(ஸல்) தியாக வாழ்வு குறித்த வரலாற்று செய்திகள் போன்ற விபரங்கள் யாவும் மொத்தம் நாற்பது தலைப்புகளுக்குள் தொகுக்கப்பட்டுள்ளது. நபிகள் பெருமான் (ஸல்) வாழ்க்கை வரலாறு எட்டு தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கமாகவும், தெளிவாகவும் வழங்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பாகும்.
இந்த நாற்பது தலைப்புகளும் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகமான இதில் “இறை உவப்பும் வாழ்க்கையும், முஸ்அப் இப்னு உமைர் (ரலி) வாழ்க்கை வரலாறு படிப்பினைக் கண்ணோட்டத்தில், திருக்குர்ஆன் விளக்கவுரைகள், நபிமொழி விளக்கவுரைகள், கலிமா தய்யிபாவும் அதன் உட்கருத்துகளும், நபித்துவ வாழ்க்கை, வரதட்சணை, வட்டி, இலஞ்சம், சூது போன்ற சமூகத் தீமைகளும் இஸ்லாமியத் தீர்வுகளும், இஸ்லாத்தில் பெண்களின் நிலையும் பொறுப்புகளும், நபி(ஸல்) மதீனத்து வாழ்க்கை” என்ற தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
Publisher | GOOD WORD ACADEMY OF INNOVATIVE STUDIES AND RESEARCH |
Publication Year | Sep 2023 |
ISBN-13 | |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 152 Pages |
Be the first to review “இலகுவழி இஸ்லாம் (உயர்கல்வி மாணவர்களுக்கான பாடத்திட்டம்) – 2”