குர்ஆன் கூறும் குடும்பவியலைக் குறைவின்றிச் செயல்படுத்திக் காட்டியவர்கள். குடும்பத்தில் அண்ணலார் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைக் குவலயத்திற்குச் சொன்னவர்கள்.
துணைவியர்களின் பெயர்கள் என்ன; எத்தனை ஆண்டுகள் அண்ணலாருடன் வாழ்ந்தார்கள்; அவர்களின் தூய வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்ன என்ற
பல விவரங்கள் நம்மில் பலருக்குத் தெரியாது.
அந்தக் குறையைப் போக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
பெண்ணியம் குறித்து அதிகம் பேசப்படும் இக்காலத்தில் இந்த நூல் இஸ்லாமியஅடிப்படையிலான பெண்ணியப் பார்வையை முன் வைக்கிறது. இந்த வகையில் தமிழில் இதனை முன்னோடி நூல் எனலாம்.
Be the first to review “இறுதி உயில் – ஒலி நூல்”