தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் யார் என்றுகூடத் தெரியாமல் வாழ்பவர்-களும் இந்தத் தகவல் புரட்சி உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். இலட்சியவாதிகள் இவ்வாறு இருக்க முடியாது. இலட்சியம் வெற்றி பெற உலகை வெல்லும் கொள்கை வலிமையோடு சகோதரத்துவம், அன்பு, கருணை, இரக்கம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை முதலிய அழகிய பண்புகளும் தேவை என்பதை இஸ்லாமிய வரலாறு எடுத்தியம்புகிறது.
அந்த அழகிய பண்புகள் என்ன என்பதை இந்த நூல் விரிவாக அலசி ஆராய்கிறது. சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரும் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களில் ஒருவராய்த் திகழ்ந்தவருமான மௌலானா குர்ரம் முராத் அவர்கள் திருக்குர்ஆனின் ஒளியிலும் இஸ்லாமிய வரலாற்று ஆதாரங்களின் ஒளியிலும் இந்த அற்புதமான நூலை யாத்துத் தந்துள்ளார்கள். இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் மனித வாழ்வு செம்மையாக அமைந்திட குழு ரீதியாகச் செயல்படுவோருக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி நூல் எனலாம்.
Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
Be the first to review “இயக்கமும் இனிய உறவுகளும் – மின்னூல் (E-Book)”