துக்கமும் இருளும் சூழ்ந்த அந்தக் கொடிய மக்ரிப் வேளையில் கர்பலா மைதானத்தில் இமாம் ஹுஸைன் அவர்கள் தம்முடைய இன்னுயிரை ஈந்து பதினான்கு நூற்றாண்டுகள் உருண்டோடி விட்டன. என்றாலும் இன்று வரை அவருடைய உயிர்த்தியாகம் உலகமெங்கும் முஸ்லிம்களால் உருக்கமாக நினைவுகூரப்படுகின்றது. ஷியாக்களும் ஸன்னிகளும் தங்களின் வேதனைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.
இமாம் அவர்களின் வாழ்வும் உயிர்த்தியாகமும் நினைவு கூரப்படும் போதெல்லாம் இனம் புரியாத சோகத்துக்கும் வேதனைக்கும் ஆளாகாத முஸ்லிம்களே இல்லை. இன்றும் தங்களின் பிள்ளைகளுக்கு ஹுஸைனின் பெயரைச் சூட்டி மகிழ்கின்ற முஸ்லிம்களை உலகெங்கும் பார்க்க முடியும்.
என்றாலும் இமாம் ஹுஸைன் அவர்களின் மீது பேரன்பும் மாசற்ற பற்றும் கொண்டிருக்கின்ற பெரும்பாலோருக்கு அவர் எந்த நோக்கத்திற்காக தன்னுடைய இன்னுயிரைத் துறப்பதற்கும் தயாரானார்? தன்னுடைய அன்பு மகனார்களையும் இழந்து விடுவதற்கு ஏன் துணிந்தார் என்பது பற்றிய உண்மைநிலை தெரிந்திருப்பதில்லை.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Aug 2021 |
ISBN-13 | 978-81-232-0399-7 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 48 Pages |
Be the first to review “இமாம் ஹுஸைன் உயிரைக் கொடுத்தது எதற்காக?”