இந்நூல் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களுடைய பிறப்பு முதல் உயிர்த் தியாகம் வரை முழுமையாகப் பேசுகிறது.
அவருடைய முன்னோர்கள் தொடங்கி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை, நபிகளாருடன் நெருக்கம், கல்வியில் சிறப்புத் தகுதி பெற்றமை, கற்றுக்கொடுப்பதில் ஏற்பட்ட ஆர்வம், குடும்பம், ஆட்சிக் காலம், ஆட்சியில் ஏற்பட்ட சோதனைகள் என்று ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அலீ (ரலி) அவர்களைக் குறித்த உண்மைகளை மட்டுமே இந்த வரலாற்று நூல் பேசுகிறது.
ஒட்டகப் போர், ஸிஃப்பீன் போர் ஆகியவை தொடர்பான நபித்தோழர்களுடைய நிலைப்பாடுகள், இந்தப் போர்கள் குறித்த ஷிஆ பிரிவினரின் கட்டுக்கதைகள், அவர்களுடைய கற்பனை அறிவிப்புகள் ஆகியவற்றை இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த மார்க்கத்திற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. அவசரமான, விரைவான முடிவுகள் நமக்கு ஒருபோதும் மகிழ்ச்சியைத் தராது. கடுமையாக உழைத்து அதன் மூலம் அல்லாஹ்வின் உதவியை உணர்ந்துகொள்வதினூடாகவே உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.
அல்லாஹ்வின் பாதையில் இருந்து மனித குலம் வெகுதொலைவு விலகிச் சென்றுவிட்டதால் தற்போதைய சூழலில் அது கடினமான கால கட்டத்தை இருளில் கடக்க வேண்டியுள்ளது. அதற்கான மருந்து முஸ்லிம்களிடம் மட்டுமே உள்ளது. எனவே அவர்கள் நீதியுடன் நடந்து ஏனையோரைக் காப்பாற்றுவார்களா? இஸ்லாம் மீண்டும் இந்த மண்ணை ஆளுமா? பண்பாடுகளை நிலைநிறுத்துமா? மீண்டும் நாம் குர்ஆனுடன் இணைக்கப்படுவோமா? முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைச் சார்ந்தவன் நான் என்ற உணர்வைப் பெறுவோமா? நபிகளாரும் நேர்வழி பெற்ற கலீஃபாக்களும் செய்த அழைப்புப் பணியை நாமும் மேற்கொள்வோமா? இஸ்லாத்தின் செய்தியைச் சுமந்து மறுமை நாள் வரை தொடரவிருக்கும் சங்கிலியின் இணைப்பை நம்மால் உருவாக்க முடியுமா?
இறைவனே மிகவும் அறிந்தவன்…
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2025 |
ISBN-13 | 978-81-232-0533-5 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Hard Bound |
Number of Pages | 672 Pages |
Be the first to review “அலீ (ரலி)”