உலகத்தில் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் மார்க்கம் இஸ்லாம். அது மனிதர்களுக்கு அளித்துள்ள பல்வேறு கட்டளைகளில் ஒன்றே ஹிஜாப். பெண்களின் மரியாதையையும் தன்மானத்தையும் உயர்த்துகின்ற ஒரு உன்னதமான நற்செயல் ஆகும். சமுதாய ஒழுக்கத்தை சீர்தூக்கி விடுவதில் மிக முக்கியமான பங்கை ஹிஜாப் செய்கிறது. ஹிஜாப் அணிவது பொது ஒழுங்கிற்கு எந்தவிதமான பாதிப்பையும் அளிப்பதாக இல்லை. ஹிஜாப் முஸ்லிம் பெண்களுக்கான உடை மட்டுமல்ல. அனைத்து பெண்களும் அணிந்து கொண்டாலும் அவர்களுக்கும் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் கொடுக்கும். ஆனால், இன்று இந்த விஷயத்தை ஒரு பிரச்சினையாக்கி மக்களுக்கிடையில் ஒரு பதற்றத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையைப் பார்க்க முடிகிறது. இது மிக வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. மக்கள் மத்தியில் இன்று சமாதானமும் நிம்மதியுமே தேவைப்படுகிறது. இதற்கான வழிமுறைகளை நாம் தேடவேண்டும்.
ஹிஜாப் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாட்டை தாண்டி ஒரு தேசப் பிரச்சினையாக உருவாவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஹிஜாப் பற்றிய விளக்கங்களையும் தெளிவுகளையும் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தவறான கருத்துக்களை அழித்து ஹிஜாப் பற்றிய உண்மை நிலையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதத்தில் “அறிவோம் ஹிஜாப்” என்ற இச்சிறு நூலை டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Mar 2022 |
ISBN-13 | 978-81-232-426-0 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 24 Pages |
Be the first to review “அறிவோம் ஹிஜாப்”