கொடூரமான சில வன்முறைகள் அவர்கள் கண்முன் நடக்கும்போது, பாதிக்கப்பட்டவர் வேற்று மதத்தவராய் இருந்தால் அந்த வன்முறைகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று செய்தியைப் படிக்கும்போது அன்பு, கருணை, இரக்கம் ஆகியவை மனித உள்ளங்களில் வறண்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், இதற்கு மாறாகச் சிலவேளைகளில் அநீதிகளைக் கண்டிக்க மக்கள் வெள்ளமாய்த் திரண்டு எழுவதைப் பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சி கிட்டுகிறது. அண்மையில் நியூசிலாந்தில் உள்ள ஒரு பள்ளிவாயிலுக்குள் ஒருவர் நுழைந்து துப்பாக்கியினால் சரமாரியாகச் சுட்டு 51பேர் இறந்தபோது அந்நாடே கொதித்து எழுந்தது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தந்தது. அமெரிக்காவில் ஒரு கறுப்பரை வெள்ளைக்காரக் காவல்துறை அதிகாரி கழுத்தில் காலை வைத்து நசுக்கிக் கொன்ற போது கோவிட்-19 ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் மக்கள் அலை அலையாக ஆர்ப்பாட்டம் செய்தது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு. ஆனால், இவைபோன்ற எதிர்ப்பு அலைகள் அடிக்கடி நிகழ்வதில்லை.
மனித இனம் விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் உச்சத்தைக் தொட்டுக் கொண்டிருக்கிறது; ஆனால், மனித மாண்புகளைப் பேணுவதில் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. விஞ்ஞானத்தில் வேகமாகச் செல்லும் மனிதன் மனிதர்களின் உயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை ஆகியவற்றைக் காப்பதில் அலட்சியமாக நடந்து கொள்கிறான்.
எனவே, “அகிம்சை, அகிம்சை” என்று சொல்வதால் மட்டும் வன்முறை ஒழிந்துவிடாது. அன்பு பற்றி உரத்துப் பேசுவதாலும் அநீதிகள் அகன்று விடா. கொஞ்சம் விழிகளை அகலத் திறந்து பார்க்க வேண்டும். தம்மைச் சுற்றி என்னென்ன கொடுமைகள் நிகழ்கின்றன எனப் பார்த்து அவற்றைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Dec 2021 |
ISBN-13 | 978-81-232-413-0 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 96 Pages |
Be the first to review “அகிம்சை இஸ்லாமியக் கண்ணோட்டம்”