-
இறை நினைவு (திக்ர்) – أذكار
இந்நூலில், அன்றாடம் காலை, மாலை வேளைகளில் நாம் செய்ய வேண்டிய திக்ர்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருக்குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தி உள்ள துஆக்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
இதனை நாம் தினசரி ஓதி வருவோம். இறை நினைவுடன் வாழ்வோம்.
Author: DR. J. MOHIDEEN (Ibnu Jamal)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைநம்பிக்கையின் அடிப்படை (முஸ்லிம் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கான நூல்)
நவீனக் கல்வி வளர்ச்சிக்கு இஸ்லாம் எப்போதும் தடையாக இருந்ததில்லை. புத்துலகம் படைக்க இஸ்லாம், கல்வி அறிவு மிக அவசியம் என்பதை வலியுறுத்துகிறது. மேலும் இப்புத்தகம் நவீன கல்வி வளர்ச்சிக்கு தேவையான இறைநம்பிக்கையை வார்த்தெடுக்க உந்து சக்தியாக திகழ்கிறது.
Author: Moulana Syed
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய இயக்கத்தின் முன்னுரிமைகள்..!
இன்றையக் காலத்தில் இஸ்லாமிய இயக்கத்தைப் பற்றிய சரியான புரிதலை விவரிப்பதுதான் இந்நூல்.
பொலிட்டிகல் இஸ்லாம், சூஃபி இஸ்லாம் போன்ற கூப்பாடுகளின் பின்னால் இயங்குகின்ற நுண்ணரசியலை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
அழைப்புப் பணியில் அலட்சியத்தை முற்றாகத் துறந்தாக வேண்டிய அவசியத்தை அறிவுறுத்துகிறது இந்நூல்.
புதிய காலகட்டத்துடன் இயைந்து போகின்ற திட்டமிடலின் குறிப்புகள் ஒவ்வொரு கோடி வைரங்களுக்குச் சமம்.
Author: Dr. Qurshid Ahmed
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உமர் (ரலி)
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“யாருமே கஷ்டப்பட்டு உழைக்காமல், யா அல்லாஹ்! எனக்கு வாழ்வாதாரத்தைக் கொடு என்று கேட்காதீர்கள். ஏனென்றால் தங்கமும் வெள்ளியும் விண்ணில் இருந்து
கொட்டாது. ஏதாவது உழைப்பில் ஈடுபடுபவருக்குத்தான் அல்லாஹ் வாழ்வாதாரம் வழங்குகிறான்.” இவ்வாறு கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை ஓதுவார்: “பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்” (திருக்குர்ஆன் 62:10)
(நிளாமுல் ஹுகூமதுல் இஸ்லாமிய்யா)Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹950 -
ஒழுக்கமே சுதந்திரம்
ஒழுக்கம் இல்லா சுதந்திரம்
நூல் இல்லா பட்டம் போன்றது.ஒழுக்கமே சுதந்திரம் என அனைவரும் உணர்ந்து
ஒழுக்கச் சீர்கேடுகளை ஒழித்து
ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்
வாருங்கள் ஓர் அணியில் திரள்வோம்!Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹40 -
ஃபாத்திமா (ரலி) – மின்னூல் (E-Book)
Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online
ஃபாத்திமா (ரலி)
அழகுற வடிவமைக்கப்பட்ட ஃபாத்திமா (ரலி) எனும் இந்நூல் இறைத்தூதரின் இறுதிப் புதல்வியின் வாழ்க்கையையும், காலகட்டங்களையும் ஆய்வு செய்கிறது. ஃபாத்திமா (ரலி) அவர்களின் பெற்றோர்களான, அண்ணலார், கதீஜா (ரலி) அவர்களைப் பற்றியும் பல அற்புதமான சம்பவங்களை விவரிக்கிறது. கஅபாவின் அண்மையில் அமைந்த ஃபாத்திமா (ரலி) அவர்களின் வாழ்க்கை பற்றியும், அவருடைய திருமணம், தாய்மை, இஸ்லாத்தின் செய்தியைப் பரப்புவதில் அவருடைய பங்கு ஆகியன பற்றியும் பல நிகழ்வுகளை சுவைபட எடுத்துரைக்கிறது. கதையுடன் கூடிய உயிரோட்டமுள்ள படங்கள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இந்நூலை படிக்க ஆர்வமூட்டுகிறது…
Author: Ashsheikh M.M.M. Asam
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹160 -
கடவுள் உண்டு! கடவுள் ஒன்று!
நாத்திகர்களின் மனம் புண்படாமல், அதே சமயம் நாத்திகத்திற்கு ஓர் ‘அறுவை சிகிச்சை’ நடத்தியிருக்கிறார் நாடறிந்த நல்லிணக்கப் பேச்சாளர்- எழுத்தாளர் டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மத் அவர்கள்.
நீங்கள் எந்த ஊர் நாத்திகர்? தமிழ்நாட்டு நாத்திகரா? இந்திய நாத்திகரா? சர்வதேச நாத்திகரா? நீங்கள் யாராக இருந்தாலும் சரி- உங்களுக்காகவே தன் அறிவுவாசல்களை அகலத் திறந்துவைத்து இரு கைகளையும் நீட்டி அழைக்கிறது இந்த நூல்.
நாத்திக நண்பர்கள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் அறிவார்ந்த முறையில் விடை அளிக்கிறது இந்த நூல்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சிறுபான்மை முஸ்லிம்களுக்கான சட்டம்
ஷரீஅத்தின் – இஸ்லாமிய சட்டங்கள் அடிப்படைகள், கோட்பாடுகள் எக்காலத்திற்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை, மாற்றத்திற்கு உள்ளாக்க முடியாதவை. அதே வேளை ஷரீஅத் ஒவ்வொரு மனிதனுடைய சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளும். மார்க்கத்தைப் பின்பற்றுவதில் அவனுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்காது. தாங்க இயலாத சுமையை அவன்மீது சுமத்தாது.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்
நாம் மறுமை நம்பிக்கை கொண்டவர்களாக, முஸ்லிம்களாக, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்.
நரகத்தைப்பற்றி அதிகம் எச்சரிக்கப்படுகிறது. எந்த அளவிற்கு நரகம் பற்றி மக்களிடம் எச்சரிக்கப்படுகிறதோ அதுபோல சொர்க்கம் பற்றியும் மக்கள் மத்தியில் அதிகம் நினைவுகூரப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக எழுதப்பட்டதே இந்நூல்.
Author: Jarina Jamal
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆனியக் கலைகள்
திருக்குர்ஆனின் இலக்குகள் என்ன? வசனங்களுக்கிடையேயான தொடர்புகள் என்ன? அத்தியாயங்களின் ஆய்வுப் பொருள் என்ன? என பல முக்கிய விதிகளை எளிய முறையில் இந்நூல் விளக்குவது இந்நூலின் சிறப்பம்சம்.
திருக்குர்ஆனை கற்க விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல் இது.
Author: DR. J. MOHIDEEN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நபிகள் நாயகத்தின் மனதில் நிறைந்தவர்
இஸ்லாமிய வரலாற்றில் பத்ர் போர் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். அந்த வெற்றியின் விளைவு போர் கைதிகள் இஸ்லாமியர்களுக்கு கிடைத்ததே. அச்சமயத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நினைவில் வந்தவர் இஸ்லாத்தை ஏற்காத ஒருவர் என்றால் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றாகும். அத்தோழர் அச்சமயத்தில் உயிருடன் இருந்து அக்கைதிகளை விடுதலை செய்யும்படி பரிந்துரைத்திருந்தால் அனைவரையும் விடுதலை செய்திருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதுதான் வியப்புக்குரியது. இதற்கு காரணமானவர், இந்த அளவு பெருமானார் (ஸல்) அவர்களின் மனதில் இடம் பிடித்தவர் யார் என்று பார்க்கும்பொழுது முத்இம் இப்னு அதி என்பவர் தான் அவர்.
Author: Dr. Yasir Qadhi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நபித்தோழர்களின் பள்ளிக்கூடம்
நபித்தோழர்களின் வரலாற்றையும் சமகால வரலாற்றையும் ஒப்பிடும்போதுதான் நபித்தோழர்கள் எவ்வளவு உன்னத நிலையில் வாழ்ந்துள்ளனர் என்பதை இந்த நூல் நமக்குக் காட்சிப்படுத்துகிறது.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பதவி மோகம் படுத்தும் பாடு
இன்று பதவி என்பது அதிகாரத்தின் அடையாளமாக, புகழாசையாக, பெருமைக்குரியதாக விளங்கி வருகிறது. உலகியல் இன்பங்களில் ஒன்றாக பதவி மோகம் மாறி விட்டது. இதனால் மனிதர்களுக்கிடையில் போட்டி மனப்பான்மை உருவாகி, பொறாமை எண்ணத்தை வளர்க்கிறது. இது மேலும் வெறுப்பு, சண்டை சச்சரவுகள் என்ற பின் விளைவுகளை அதிகரிக்கச் செய்கிறது. இன்று சமூகத்தில் தோன்றியுள்ள பல்வேறு குழப்பங்கள், நெருக்கடிகளுக்கு பதவி மோகம், பேராசை, பெருமை போன்ற தீய பண்புகளே காரணமாகத் திகழ்ந்து வருகின்றது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மக்கள் சேவை
முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தினர் என்றும், ஒருவர் மற்றவரது இன்ப – துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. எனினும் அது முழு மனிதகுல நன்மைக்கும் பயனுக்கும் பொறுப்பேற்கிறது.
Author: Moulana Syed Jalaludeen Umari
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹240 -
மாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்
குர்ஆன் வெறுமனே தத்துவார்த்தமான நூல் கிடையாது. வாழ்ந்து பார்க்க வேண்டிய நடைமுறை நூல் ஆகும். இதன்படி வாரம்தோறும் ஒரு வசனத்தின் அடிப்படையில் வாழ முயல்வது என்கிற திட்டத்தின்படிச் செயல்படத் தொடங்கினார்கள். இவ்வாறாக வகுப்புக்கு வருபவர்கள் தங்களின் சொந்தப் பிரச்னை ஒன்றைச் சொல்ல, அவர்களுக்கு சுமைய்யா ரமளான் அவர்கள் பொருத்தமான வசனத்தைப் பரிந்துரைப்பார்.
பணி சிறியதுதான். ஆனால் விளைவோ மிகச் சிறப்பாக வெளிப்பட்டது. பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. பல்வேறு இன்னல்கள் முடிவுக்கு வந்தன. மன அமைதி, நிம்மதி எனும் மிகப்பெரிய செல்வம் கிட்டியது. குடும்பச் சண்டைகள் குறைந்தன. பிரிந்த குடும்பங்கள் இணைந்தன. கோபதாபங்கள் நீங்கி மகிழ்ச்சி கிடைத்தது. கணவர்கள் தங்களது மனைவியரில் ஏற்பட்ட மாற்றங்களைப் பாராட்டியதுடன் அதனை மகிழ்ச்சிகரமான புரட்சி என்றும் வர்ணித்தனர்.
குர்ஆன்படி வாழ விரும்புகின்ற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய இனிய நூல்தான் “மாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்”.
Author: DR. SUMAIYA RAMALAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
முன்மாதிரி நபித்தோழியர்கள்
குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பயிற்சி அளிப்பதிலாகட்டும் மார்க்கத்தைப் பரப்புவதிலாகட்டும் நபித்தோழியர்கள் தங்களுக்குத் தாங்களே ஈடு இணையற்றவர்களாகத் திகழ்ந்தார்கள். அதேபோல் அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்மீதும் நேசம் கொள்வதன் வாயிலாக நாளை மறுமையில் நல்ல பலன் கிடைக்குமென்பதை உணர்ந்து அதன்படி வாழ்ந்து காட்டினார்கள்.
அன்று இஸ்லாத்திற்கு உயிரூட்டிய நபித்தோழியர்களின் வரலாறுகளை இன்று நாம் படிக்கும் பொழுது அவர்களைப் போன்று நாமும் நம் வாழ்வை மாற்ற வேண்டும் என்ற உணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்துகிறது.
Author: Maayil Kairabathi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
யாஸீன் (மூலம் • தமிழாக்கம் • விளக்கவுரை)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
வாருங்கள் ரமளானை அறிவோம் – மின்னூல் (E-Book)
Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online
வாருங்கள் ரமளானை அறிவோம்
‘நோன்பு என்றால் என்ன? ஆண்டுக்கொரு முறை ரமளான் மாதத்தில் காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட பருகாமல் உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்றெல்லாம் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் நம்மிடம் கேள்வி எழுப்புவது உண்டு. அவர்களுக்குச் சரியான முறையில் விளக்கம் தரும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹25 -
ஹஜ் – உம்ரா வழிகாட்டி கையேடு
ஹஜ், உம்ராவை நிறைவேற்றும் வழிமுறைகளை விரிவாக விளக்கும் நூற்கள் பல உள்ளது. ஆனால், ஹஜ்ஜின் போது ஓத வேண்டியவற்றை நினைவில் வைப்பது ஹாஜிகள் பலருக்கு கடினமாக உள்ளது. உதாரணமாக, ஸயீயின் தொடக்கத்தில் என்ன துஆ, திக்ர் ஓத வேண்டும்? கூட்ட நெரிசலில், பையில் உள்ள நூலை எடுத்து ஓதுவதும் சிரமமே.
வாழ்வில் ஒரு முறை செய்யும் கடமை என்பதால், சரியாக நிறைவேற்றவில்லையோ என்ற கவலை ஹாஜிகள் பலருக்கு உள்ளது.
இதனை நீக்கும் விதமாக, ஹஜ் உம்ராவின் சுருக்க கையேட்டினை தயாரித்து உள்ளோம். இதில் முக்கியமான வழிபாட்டு முறைகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. இஹ்ராம் ஆடையில், கழுத்தில் தொங்கவிட்டவாறே இந்நூலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Review:
https://youtube.com/shorts/U3R3S47TC9s?feature=share
Author: Dr. J. Mohideen
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஹஜ் – உம்றா வழிகாட்டிகள்
ஹஜ் – உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு ஓர் அருமையான வழிகாட்டி நூல்கள்! ஹஜ்ஜின் நோக்கங்கள், கிரியைகள், வழிமுறைகள், பிரார்த்தனைகள் என அனைத்தையும் விளக்கும் உன்னத நூல்கள்.
Author: Dr. V. Abdur Rahim + Moulana Syed Abul A’la Moududi (Rah)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹145