-
அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு (மின்னூல் – E-Book)
E-Book
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூயவாழ்வை எண்ணிலடங்காத எழுத்தாளர்கள் நூலாக வடித்துள்ளனர். இந்த நற்பேறு இறுதித் தீர்ப்பு நாள்வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதனைக் குறித்து எத்தனை பேர் எழுதினாலும் – எவ்வளவுதான் எழுதினாலும் பொருள் வறட்சி ஏற்பட முடியாது. அலுப்புத் தட்டுவதாக முறையிடவும் முடியாது. ஆம், இத்தகைய இனிய தித்திப்பான ஓர் அம்சம் இது. புனித நபியின் தூய வாழ்வில் எத்தனை அம்சங்களும் – அந்த அம்சங்களுக்கு எத்தனை தேட்டங்களும் உள்ளனவெனில், எவருமே ‘நான் நபிவாழ்வை முழுமை-யாக எடுத்துரைத்துவிட்டேன்’ என்று வாதிட முடியாது. அத்தனை பெரியதும் நிறைவுடையதும் செறிவுடையதுமாகும் இது.₹180