Showing all 12 results

  • அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்

    தம் பசிக்காக, தம் காயங்களுக்காகக் கண்ணீர் சிந்தாமல், தம் அன்புத் தோழர் களின் வலிகளைக் கண்டு பொங்கியெழுந்த பொழுதுகளை, அற்ப உலகின் தேவைகளுக் காகக் கலங்காமல் மறுமையில் மாபெரும் இறைவனின் திருமுன் நிற்கும் நேரத்தை நினைத்துக் குலுங்கியழுத கண்ணீர் கணங்களை கண் முன் கொண்டு வருகிறது இந்நூல்.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    160
  • இயக்கமும் இனிய உறவுகளும் – மின்னூல் (E-Book)

    Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online

    for Physical Book:

    இயக்கமும் இனிய உறவுகளும்

    தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் யார் என்றுகூடத் தெரியாமல் வாழ்பவர்-களும் இந்தத் தகவல் புரட்சி உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். இலட்சியவாதிகள் இவ்வாறு இருக்க முடியாது. இலட்சியம் வெற்றி பெற உலகை வெல்லும் கொள்கை வலிமையோடு சகோதரத்துவம், அன்பு, கருணை, இரக்கம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை முதலிய அழகிய பண்புகளும் தேவை என்பதை இஸ்லாமிய வரலாறு எடுத்தியம்புகிறது.

    அந்த அழகிய பண்புகள் என்ன என்பதை இந்த நூல் விரிவாக அலசி ஆராய்கிறது. சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரும் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களில் ஒருவராய்த் திகழ்ந்தவருமான மௌலானா குர்ரம் முராத் அவர்கள் திருக்குர்ஆனின் ஒளியிலும் இஸ்லாமிய வரலாற்று ஆதாரங்களின் ஒளியிலும் இந்த அற்புதமான நூலை யாத்துத் தந்துள்ளார்கள். இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் மனித வாழ்வு செம்மையாக அமைந்திட குழு ரீதியாகச் செயல்படுவோருக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி நூல் எனலாம்.

    Author: KHURRAM MURAD
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    3060
  • இறை நினைவு (திக்ர்) – أذكار

    இந்நூலில், அன்றாடம் காலை, மாலை வேளைகளில் நாம் செய்ய வேண்டிய திக்ர்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் திருக்குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தி உள்ள துஆக்களும் தொகுக்கப்பட்டுள்ளது.

    இதனை நாம் தினசரி ஓதி வருவோம். இறை நினைவுடன் வாழ்வோம்.

    Author: DR. J. MOHIDEEN (Ibnu Jamal)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    50
  • திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 31 (லுக்மான்) (E-Book)

    Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online

    for Physical Book:

    திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 31 (லுக்மான்)

    இவ்வுலக வாழ்வில் ஏகத்துவக்கொள்கைதான் உண்மை-யானது, அறிவுப்பூர்வமானது என்பதை உணர்ந்து, முன்னோர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் தரப்பிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்கள் சமர்ப்பித்துச் சென்ற அறிவுரையைத் திறந்த மனத்துடன் சிந்தித்துப் பார்த்துச் செயல்பட திருக்குர்ஆனின் 31ஆவது அத்தியாயம் ‘லுக்மானும்’ அதன் விளக்கவுரையும் பயன்படும் என்று நம்புகிறோம்.

    Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    4070
  • திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 35 (ஃபாத்திர்) (E-Book)

    Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online

    for Physical Book:

    திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 35 (ஃபாத்திர்)

    ஃபாத்திர் அத்தியாயத்தில்…
    * இறைவனின் வல்லமை, அவன் வழங்கியிருக்கும் அருட்கொடைகள், மனிதர்கள் காட்ட வேண்டிய நன்றி

    * ஷைத்தானின் சூழ்ச்சி, அதனால் ஏற்படும் தீங்கு, அவனது மாயவலையில் சிக்கி மனிதன் வேதனைக்குள்ளாவது

    * நாம் எவ்வாறு அவனிடமிருந்து தப்பித்துக்கொள்வது

    * மனிதனின் சக்தி, திறமை ஆகியன ஒன்றுமில்லாதவை, அல்லாஹ் ஒருவனே எல்லா ஆற்றல்களையும் உடையவன்

    முதலான அரிய தகவல்களும் அதற்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

    Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    4080
  • நபித்தோழர்களின் பள்ளிக்கூடம்

    நபித்தோழர்களின் வரலாற்றையும் சமகால வரலாற்றையும் ஒப்பிடும்போதுதான் நபித்தோழர்கள் எவ்வளவு உன்னத நிலையில் வாழ்ந்துள்ளனர் என்பதை இந்த நூல் நமக்குக் காட்சிப்படுத்துகிறது.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    200
  • பேசத் தயங்கும் கருப்பொருள் காதல்

    முஸ்லிம்கள் பேசத் தயங்கும் கருப்பொருள்களில் ஒன்று – காதல்.

    காதல் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன?

    இஸ்லாம் காதலை வெறுக்கிறதா?

    காதலிப்பது என்ன அவ்வளவு பெரிய பாவமா?

    எது காதல்? எது காதல் இல்லை?

    காதலுக்குக் கண் இல்லை என்பது உண்மையா?

    கண் பேசும் காதல் மொழி எப்படி இருக்கும்?

    இறைத்தூதர்களின் வாழ்வில் காதல் இருந்ததா?

    நேசித்தத் துணையையே மணமுடிக்க என்ன வழி?

    வாருங்கள் வாசிப்போம்…

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    185
  • மாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்

    குர்ஆன் வெறுமனே தத்துவார்த்தமான நூல் கிடையாது. வாழ்ந்து பார்க்க வேண்டிய நடைமுறை நூல் ஆகும். இதன்படி வாரம்தோறும் ஒரு வசனத்தின் அடிப்படையில் வாழ முயல்வது என்கிற திட்டத்தின்படிச் செயல்படத் தொடங்கினார்கள். இவ்வாறாக வகுப்புக்கு வருபவர்கள் தங்களின் சொந்தப் பிரச்னை ஒன்றைச் சொல்ல, அவர்களுக்கு சுமைய்யா ரமளான் அவர்கள் பொருத்தமான வசனத்தைப் பரிந்துரைப்பார்.

    பணி சிறியதுதான். ஆனால் விளைவோ மிகச் சிறப்பாக வெளிப்பட்டது. பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. பல்வேறு இன்னல்கள் முடிவுக்கு வந்தன. மன அமைதி, நிம்மதி எனும் மிகப்பெரிய செல்வம் கிட்டியது. குடும்பச் சண்டைகள் குறைந்தன. பிரிந்த குடும்பங்கள் இணைந்தன. கோபதாபங்கள் நீங்கி மகிழ்ச்சி கிடைத்தது. கணவர்கள் தங்களது மனைவியரில் ஏற்பட்ட மாற்றங்களைப் பாராட்டியதுடன் அதனை மகிழ்ச்சிகரமான புரட்சி என்றும் வர்ணித்தனர்.

    குர்ஆன்படி வாழ விரும்புகின்ற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய இனிய நூல்தான் “மாறியது நெஞ்சம் மாற்றியது குர்ஆன்”.

    Author: DR. SUMAIYA RAMALAN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    175
  • வாருங்கள் ரமளானை அறிவோம் – மின்னூல் (E-Book)

    Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online

    வாருங்கள் ரமளானை அறிவோம்

    ‘நோன்பு என்றால் என்ன? ஆண்டுக்கொரு முறை ரமளான் மாதத்தில் காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட பருகாமல் உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்றெல்லாம் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் நம்மிடம் கேள்வி எழுப்புவது உண்டு. அவர்களுக்குச் சரியான முறையில் விளக்கம் தரும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

    Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    1525
  • ஜகாதுல் ஃபித்ர்

    சமூகத்தில் ஜகாத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசும் நூல்களில் அதி முக்கியத்துவமும் மிகப் பிரபலமும் வாய்ந்த ஒரு நூல்தான் டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களுடைய ‘ஃபிக்ஹுஸ் ஸகாத்’ எனும் நூல். அந்த நூலின் குறிப்பிட்ட ஒரு பகுதிதான் “ஜகாதுல் ஃபித்ர்” எனும் இந்நூல்.

    ஜகாதுல் ஃபித்ர் என்றால் என்ன, அந்தப் பெயர் ஏன் வந்தது, அதன் இலக்கும் குறிக்கோளும் என்ன, ஜகாதுல் ஃபித்ரைப் பணமாகக் கொடுக்காலாமா, எப்போது கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்பன போன்ற ஐயங்களுக்கான விளக்கங்கள் மிகத் தெளிவாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

    Author: DR. YUSUF AL QARDHAWI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    60
  • ஹஜ் – உம்றா வழிகாட்டிகள்

    ஹஜ் – உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு ஓர் அருமையான வழிகாட்டி நூல்கள்! ஹஜ்ஜின் நோக்கங்கள், கிரியைகள், வழிமுறைகள், பிரார்த்தனைகள் என அனைத்தையும் விளக்கும் உன்னத நூல்கள்.

    Author: Dr. V. Abdur Rahim + Moulana Syed Abul A’la Moududi (Rah)
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    125145
  • வாருங்கள் ரமளானை அறிவோம் – ஒலி நூல் (Audio Book)

    வாருங்கள் ரமளானை அறிவோம்

    – ஒலி நூல் (Audio Book)

     

    ‘நோன்பு என்றால் என்ன? ஆண்டுக்கொரு முறை ரமளான் மாதத்தில் காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட பருகாமல் உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்றெல்லாம் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் நம்மிடம் கேள்வி எழுப்புவது உண்டு. அவர்களுக்குச் சரியான முறையில் விளக்கம் தரும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

    Physical Book

    E-Book

     

    025