-
இஸ்லாமியக் குடும்பம்
குடும்ப அமைப்புகள் மீது சிந்தனை ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் போர் தொடுக்கப்படுகிறது.
ஊடகம், தொலைக்காட்சி, வலைத்தளம், பத்திரிகை போன்றவை வாயிலாக தொடுக்கப்படும் இத்தகைய போர்களால் குடும்ப அமைப்பு கேள்விக்குறியாகிறது. சிலபோது முஸ்லிம்களும் இதற்குப் பலியாகின்றார்கள்.
ஓர் இஸ்லாமியக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து டாக்டர் யூஸுஃப் அல்கர்ளாவி எழுதியுள்ள இந்த நூல் இக்காலச் சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Author: DR. YUSUF AL QARDHAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஜகாதுல் ஃபித்ர்
சமூகத்தில் ஜகாத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசும் நூல்களில் அதி முக்கியத்துவமும் மிகப் பிரபலமும் வாய்ந்த ஒரு நூல்தான் டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களுடைய ‘ஃபிக்ஹுஸ் ஸகாத்’ எனும் நூல். அந்த நூலின் குறிப்பிட்ட ஒரு பகுதிதான் “ஜகாதுல் ஃபித்ர்” எனும் இந்நூல்.
ஜகாதுல் ஃபித்ர் என்றால் என்ன, அந்தப் பெயர் ஏன் வந்தது, அதன் இலக்கும் குறிக்கோளும் என்ன, ஜகாதுல் ஃபித்ரைப் பணமாகக் கொடுக்காலாமா, எப்போது கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்பன போன்ற ஐயங்களுக்கான விளக்கங்கள் மிகத் தெளிவாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
Author: DR. YUSUF AL QARDHAWI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST