-
அலீ (ரலி)
₹700இந்நூல் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களுடைய பிறப்பு முதல் உயிர்த் தியாகம் வரை முழுமையாகப் பேசுகிறது.
அவருடைய முன்னோர்கள் தொடங்கி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை, நபிகளாருடன் நெருக்கம், கல்வியில் சிறப்புத் தகுதி பெற்றமை, கற்றுக்கொடுப்பதில் ஏற்பட்ட ஆர்வம், குடும்பம், ஆட்சிக் காலம், ஆட்சியில் ஏற்பட்ட சோதனைகள் என்று ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அலீ (ரலி) அவர்களைக் குறித்த உண்மைகளை மட்டுமே இந்த வரலாற்று நூல் பேசுகிறது.
Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாமிய இயக்கத்தின் முன்னுரிமைகள்..!
₹40இன்றையக் காலத்தில் இஸ்லாமிய இயக்கத்தைப் பற்றிய சரியான புரிதலை விவரிப்பதுதான் இந்நூல்.
பொலிட்டிகல் இஸ்லாம், சூஃபி இஸ்லாம் போன்ற கூப்பாடுகளின் பின்னால் இயங்குகின்ற நுண்ணரசியலை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
அழைப்புப் பணியில் அலட்சியத்தை முற்றாகத் துறந்தாக வேண்டிய அவசியத்தை அறிவுறுத்துகிறது இந்நூல்.
புதிய காலகட்டத்துடன் இயைந்து போகின்ற திட்டமிடலின் குறிப்புகள் ஒவ்வொரு கோடி வைரங்களுக்குச் சமம்.
Author: Dr. Qurshid Ahmed
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உமர் (ரலி)
₹1100உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“யாருமே கஷ்டப்பட்டு உழைக்காமல், யா அல்லாஹ்! எனக்கு வாழ்வாதாரத்தைக் கொடு என்று கேட்காதீர்கள். ஏனென்றால் தங்கமும் வெள்ளியும் விண்ணில் இருந்து
கொட்டாது. ஏதாவது உழைப்பில் ஈடுபடுபவருக்குத்தான் அல்லாஹ் வாழ்வாதாரம் வழங்குகிறான்.” இவ்வாறு கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை ஓதுவார்: “பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்” (திருக்குர்ஆன் 62:10)
(நிளாமுல் ஹுகூமதுல் இஸ்லாமிய்யா)Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உஸ்மான் (ரலி)
₹800உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், குடும்பம், வம்சம், இஸ்லாத்திற்கு முந்தைய காலம், இஸ்லாத்தை ஏற்ற பிறகு, திருமணம், சோதனை, அபிசீனியா ஹிஜ்ரத், குர்ஆனுடன் தொடர்பு, நபிகளாருடன் நெருக்கம், நற்பண்புகள், மதீனா வாழ்வு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள், நாட்டு நலனில் அவரின் பொருளாதாரப் பங்களிப்பு, இரண்டு கலீஃபாக்களுடன் அவருடைய நெருக்கம், அவருடைய ஆட்சியில் அடைந்த வெற்றிகள், கொலையில் முடிந்த பெரும் சோதனை போன்றவை குறித்து ஏராளமான வரலாற்றுச் செய்திகளை இந்நூல் பேசுகிறது.
Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திருக்குர்ஆன் கூறும் எடுத்துக்காட்டுகள்
₹225உலகில் உள்ள அனைத்தையும் படைத்தவன் இறைவன். அவனது படைப்பாற்றல் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளது. அவனது ஒவ்வொரு படைப்பிலும் அதற்கான சான்றுகள் நிறைந்து காணப்படுகின்றன. படைப்பின் ஒழுங்கமைப்பு, செயல்பாட்டில் துல்லியம், வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகள், வாழிடப் பாதுகாப்பு போன்றவை கனகச்சிதமாக, நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. நடுநிலை நின்று அறிவார்ந்த முறையில் சிந்தித்துப் பார்த்தால் இறைவனின் சான்றுகளும் அத்தாட்சிகளும் நன்கு புலப்படும். அற்பமாகக் கருதப்படும் கொசு, ஈ போன்ற படைப்புகளிலிருந்து பிரமாண்டமான சூரியன் வரை அவற்றின் சிறப்புகள், பயன்கள் பற்றியும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
Author: Nazeer Athaullah
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நான்கு கலீஃபாக்களின் வரலாறுகளும்…
₹2777அபூபக்கர் (ரலி)
உமர் (ரலி)
உஸ்மான் (ரலி)
அலீ (ரலி)நான்கு கலீஃபாக்களின் வரலாறுகளும் ரூ2666 மட்டுமே
Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹3350 -
மக்கள் சேவை
₹220முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தினர் என்றும், ஒருவர் மற்றவரது இன்ப – துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. எனினும் அது முழு மனிதகுல நன்மைக்கும் பயனுக்கும் பொறுப்பேற்கிறது.
Author: Moulana Syed Jalaludeen Umari
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹240 -
ஹஸன் (ரலி)
₹400ஹஸன் (ரலி) உயரிய நிலைப்பாடும், உலக இடிபாடுகளின் மீது எழுந்து நிற்கும் அவரது உயர்வான கருத்தும் வரலாறுகள் மூலம் காலம் காலமாக நமக்காகப் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது.“இருள் சூழ்ந்த இரவுகளால் அது புறக்கணிக்கப்படவில்லை. காலத்தின் தடைகளால், நூற்றாண்டுகளின் சுவர்களால் அது நம்மிடமிருந்து பிரிக்கப்படவும் இல்லை.”இதோ அவருடைய வரலாறு நம் கண்முன்னே…வாசிப்போம்… நேசிப்போம்…Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST








