Showing all 3 results

  • அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு (மின்னூல் – E-Book)

    E-Book

    அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூயவாழ்வை எண்ணிலடங்காத எழுத்தாளர்கள் நூலாக வடித்துள்ளனர். இந்த நற்பேறு இறுதித் தீர்ப்பு நாள்வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதனைக் குறித்து எத்தனை பேர் எழுதினாலும் – எவ்வளவுதான் எழுதினாலும் பொருள் வறட்சி ஏற்பட முடியாது. அலுப்புத் தட்டுவதாக முறையிடவும் முடியாது. ஆம், இத்தகைய இனிய தித்திப்பான ஓர் அம்சம் இது. புனித நபியின் தூய வாழ்வில் எத்தனை அம்சங்களும் – அந்த அம்சங்களுக்கு எத்தனை தேட்டங்களும் உள்ளனவெனில், எவருமே ‘நான் நபிவாழ்வை முழுமை-யாக எடுத்துரைத்துவிட்டேன்’ என்று வாதிட முடியாது. அத்தனை பெரியதும் நிறைவுடையதும் செறிவுடையதுமாகும் இது.
    125250
  • அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்

    தம் பசிக்காக, தம் காயங்களுக்காகக் கண்ணீர் சிந்தாமல், தம் அன்புத் தோழர் களின் வலிகளைக் கண்டு பொங்கியெழுந்த பொழுதுகளை, அற்ப உலகின் தேவைகளுக் காகக் கலங்காமல் மறுமையில் மாபெரும் இறைவனின் திருமுன் நிற்கும் நேரத்தை நினைத்துக் குலுங்கியழுத கண்ணீர் கணங்களை கண் முன் கொண்டு வருகிறது இந்நூல்.

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    160
  • பேசத் தயங்கும் கருப்பொருள் காதல்

    முஸ்லிம்கள் பேசத் தயங்கும் கருப்பொருள்களில் ஒன்று – காதல்.

    காதல் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன?

    இஸ்லாம் காதலை வெறுக்கிறதா?

    காதலிப்பது என்ன அவ்வளவு பெரிய பாவமா?

    எது காதல்? எது காதல் இல்லை?

    காதலுக்குக் கண் இல்லை என்பது உண்மையா?

    கண் பேசும் காதல் மொழி எப்படி இருக்கும்?

    இறைத்தூதர்களின் வாழ்வில் காதல் இருந்ததா?

    நேசித்தத் துணையையே மணமுடிக்க என்ன வழி?

    வாருங்கள் வாசிப்போம்…

    Author: MOULAVI NOOH MAHLARI
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    185