-
அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு (மின்னூல் – E-Book)
E-Book
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூயவாழ்வை எண்ணிலடங்காத எழுத்தாளர்கள் நூலாக வடித்துள்ளனர். இந்த நற்பேறு இறுதித் தீர்ப்பு நாள்வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதனைக் குறித்து எத்தனை பேர் எழுதினாலும் – எவ்வளவுதான் எழுதினாலும் பொருள் வறட்சி ஏற்பட முடியாது. அலுப்புத் தட்டுவதாக முறையிடவும் முடியாது. ஆம், இத்தகைய இனிய தித்திப்பான ஓர் அம்சம் இது. புனித நபியின் தூய வாழ்வில் எத்தனை அம்சங்களும் – அந்த அம்சங்களுக்கு எத்தனை தேட்டங்களும் உள்ளனவெனில், எவருமே ‘நான் நபிவாழ்வை முழுமை-யாக எடுத்துரைத்துவிட்டேன்’ என்று வாதிட முடியாது. அத்தனை பெரியதும் நிறைவுடையதும் செறிவுடையதுமாகும் இது.₹250 -
இஸ்லாமிய இயக்கம் ஏன்? எதற்கு? (மின்னூல் – E-Book)
E-Book
ஒவ்வொரு இயக்கத் தோழரும் தனிப்பட்ட முறையிலும் குழு ரீதியாகவும் பல முறை இந்நூலை ஆய்ந்து படித்து, இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை தம் நெஞ்சங்களில் பசுமையாக பதித்துக் கொள்ள வேண்டும். குறிக்கோளை சரியாகப் புரிந்து கொண்டு அதனைக் கடைப்பிடிக்கவும் இயக்கத்தை சரிவர நடத்தவும், இஸ்லாமிய அழைப்பை சுலபமாக எடுத்துரைப்பதற்கும் இது அவசியமாகிறது. ஆகவே ஒவ்வொரு தொண்டரும் இதனைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
இயக்கத் தொண்டர்களை நோக்கித்தான் இந்நூல் உரையாடு-கிறது; ஆயினும் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள பொதுமக்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும்
₹40 -
இஸ்லாமிய வாழ்வு – குத்பாப் பேருரைகள் (மின்னூல் – E-Book)
E-Book
மௌலானா மௌதூதி அவர்களின் குத்பாப் பேருரை நூல் சாதாரணப் புத்தகம் அல்ல!கல்வியறிவற்ற பாமர மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களின் அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட விஷயங்களைக் கொண்டே – அடிப்படையான உண்மைகளை எடுத்துரைக்கிறது.
₹290 -
சத்தியப் பாதையில் லட்சியப் பயணம் (மின்னூல் – E-Book)
E-Book
இஸ்லாம் எனும் சத்திய நெறியின் ஆழத்தையும் அகலத்தையும் நுணுகி ஆராய்ந்து, அதன் நுட்பத்தையும் – திட்பத்தையும் விஞ்ஞான ரீதியாக விளக்கும் நூல்!
₹60 -
சாந்திக்கு வழி (மின்னூல் – E-Book)
E-Book
ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத ஆழிய கருத்துகளுடன், சாந்திமயமான வாழ்வை நோக்கி அழைக்கும் உன்னத படைப்பு!
₹35 -
மனித இனத்தின் ஆக்கமும், அழிவும் (மின்னூல் – E-Book)
E-Book
தீய சக்திகள் நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில், சிந்திக்கும் திறன் அமைந்த மனதிற்கு மௌலானாவின் அறிவுப்பூர்வமான சொற்கள் சிறந்த உணவாக அமையும்.
₹50 -
மனிதனே உன் விலை என்ன? (மின்னூல் – E-Book)
E-Book
இறைத்தூதர்கள், இறையடியார்களின்வாழ்விலிருந்து நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் காட்டிமனிதனுடைய உண்மையான மதிப்பை அவனுக்கு உணர்த்தும் நூல்!
₹45 -
முஸ்லிமின் அடிப்படைக் கடமை (மின்னூல் – E-Book)
E-Book
சிந்தையைக் கிளறும் இந்நூலில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்னைகள், பொறுப்புகள், கடமைகள் ஆகிய அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இன்று முஸ்லிம்கள் பல்வேறுபட்ட ஆபத்துகள், துன்பங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டிருப்பதற்கான ஒரே காரணம், அவர்கள் தங்களின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியம் காண்பித்ததுதான் என்றும், தங்களின் இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழிநிலை ஒருபோதும் மாறாது என்றும் மனதில் பதியும்படி நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
₹50