-
(Package – 1) 4 E-Books @ 299 (மின்னூல் – E-Book)
E-Book
4 E-Books @ 299 Only
1 அண்ணல் நபிகளார் வாழ்வினிலே 2 ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஓர் அறிமுகம் 3 குத்பாத் (இஸ்லாமி வாழ்வு) 4 இஸ்லாமிய இயக்கம் ₹606 -
(Package – 3) 20 E-Books @ 999 (மின்னூல் – E-Book)
E-Book
20 E-Books @ 999 Only
தஃப்ஹீமுல் குர்ஆன்:
https://iftchennai.in/product-category/books/tamil-books/%e0%ae%a4%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b9%e0%af%80%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d/₹2075 -
இதுதான் இஸ்லாம் பாகம் 1, 2 (மின்னூல் – E-Book)
E-Book
இஸ்லாத்தைக் குறித்து தெளிவான, முழுமையான கருத்துகளை எடுத்துக் கூறுகிறது.
இளைஞர்களுக்காக எழுதப்பட்டது. இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை பலரின் உள்ளங்களிலிருந்து களைந்தது; களைந்து வருகிறது.
ஒவ்வொருவரும் – படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய, பிறருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய, சிந்தனைக்குரிய -சிந்தைக்கினிய நூல் இது!
பிரெஞ்சு, ஆங்கிலம், அரபி உள்ளிட்ட நாற்பத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
₹160 -
இயக்கத் தோழர்களுக்கு இனிய வழிகாட்டி (மின்னூல் – E-Book)
E-Book
ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வோர் இயக்கத் தோழரும் கட்டாயம் படிக்க வேண்டியவழிகாட்டி நூல்…!
ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் உளத்தூய்மைக்கான உன்னதக் குறிப்புகள்…! அத்தனையும் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில்! இந்த வழி காட்டி நூல் உங்கள் வாழ்வையே புரட்டிப் போட்டு விடும்…!
₹120 -
இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர் (மின்னூல் – E-Book)
E-Book
குர்ஆன் கூறும் குடும்பவியலைக் குறைவின்றிச் செயல்படுத்திக் காட்டியவர்கள். குடும்பத்தில் அண்ணலார் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைக் குவலயத்திற்குச் சொன்னவர்கள்.
துணைவியர்களின் பெயர்கள் என்ன; எத்தனை ஆண்டுகள் அண்ணலாருடன் வாழ்ந்தார்கள்; அவர்களின் தூய வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்ன என்ற
பல விவரங்கள் நம்மில் பலருக்குத் தெரியாது.அந்தக் குறையைப் போக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.₹55 -
இஸ்லாத்தின் அரசியல் கொள்கை (மின்னூல் – E-Book)
E-Book
அரசியல் பாடம் கற்கும் மாணவர்களுக்கும், மனித வாழ்வின் மிக முக்கியத் துறையான அரசியலில் இஸ்லாம் வழங்கும் வழிகாட்டுதல் என்ன எனத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கும் இந்தச் சிறுநூல் பெரிதும் பயன்தரும்.
₹60 -
இஸ்லாமிய மறுமலர்ச்சி (மின்னூல் – E-Book)
E-Book
இஸ்லாமிய மறுலர்ச்சி என்றால் என்ன?இஸ்லாமிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பவர்களின் – அதாவது முஜத்தித்களின் வரைவிலக்கணம் என்ன?ஒருவரை ‘முழுமையான மறுமலர்ச்சியாளர்’ என்று எப்படி மதிப்பிடுவது?இஸ்லாமிய வரலாற்றில் இதுவரை தோன்றிய முஜத்தித்கள் யார் யார்? அவர்களுடைய சாதனைகள் என்ன?இமாம் மஹ்தி அவர்களின் தகுதிநிலையும் முன்னறிவிப்புகளும் வருகையும் எத்தன்மை வாய்ந்தவை?– இன்னும் இது போன்ற பல வினாக்களுக்கும் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் இந்த நூலின் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.₹150 -
உலக சிந்தனையாளர்களின் பார்வையில் முஹம்மத் (ஸல்) (மின்னூல் – E-Book)
E-Book
தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்டநிபுணர், மாபெரும் போர்வீரர், கருத்துகளை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப்பூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரிகத்தை உருவாக்கியளித்த மாமேதை, ஒரே ஆன்மிகத் தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
– Lamartine, Histoire de la Turquie, Paris 1854, Vol. II, PP, 276-77. -
ஒழுக்க மாளிகை (மின்னூல் – E-Book)
E-Book
படைப்பாளனின் அதிகாரத்தை ஏற்று அவனது ஆணை களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால் மட்டுமே ஒழுக்கரீதியான சமுதாயத்தை அமைக்க முடியும் என்பதை விளக்கும் நூல்!
₹30 -
சமூகக் கட்டமைப்பில் பெண்களின் பங்கு (மின்னூல் – E-Book)
E-Book
பெண்ணியம் குறித்து அதிகம் பேசப்படும் இக்காலத்தில் இந்த நூல் இஸ்லாமியஅடிப்படையிலான பெண்ணியப் பார்வையை முன் வைக்கிறது. இந்த வகையில் தமிழில் இதனை முன்னோடி நூல் எனலாம்.
₹90 -
தீனை நிலைநாட்டுங்கள் (மின்னூல் – E-Book)
E-Book
முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முக்கியமான பொறுப்பை உணர்த்துகின்ற ஆற்றல்மிக்க வரிகளையும் விளக்கங்களையும் கொண்ட நூல்.
₹110 -
பொருளாதார பிடியில் மனிதன் (மின்னூல் – E-Book)
E-Book
21-ஆம் நூற்றாண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காண்பது? முழுமையான ஒரு வாழ்க்கை நெறியான இஸ்லாம் இந்தப் பிரச்னை குறித்து என்ன கூறுகிறது? மனித வாழ்வில் பொருளாதாரத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டு, எந்த அளவுக்கு இல்லை? இந்தப் பிரச்னையில் இதர கருத்தோட்டங்களுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன வேறுபாடு? இக்கேள்விகளுக்கான விடையைத்தான் இந்நூல் தருகிறது.
₹55 -
மாலை அமர்வுகளிலே (மின்னூல் – E-Book)
E-Book
பூமியின் சுழற்சி பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது? இன்றைய கல்வி அமைப்பு எப்படி இருக்கிறது? ஓர் இமாமைத்தான் பின்பற்ற வேண்டுமா? போன்ற கேள்விகளுக்கும் இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கும் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் விடையளிக்கிறார்கள்
₹50 -
ஜமாஅத் கடந்து வந்த பாதை – 1 (மின்னூல் – E-Book)
E-Book
ஜமாஅத்தே இஸ்லாமி எப்பொழுது தொடங்கப்பட்டது?இயக்கத்தின் துவக்கக் கட்டத்தில் எத்தகையப் பிரச்னைகள் ஏற்பட்டன?அவை எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன?துவக்கக் கால கூட்டங்களில் கலந்து கொண்ட புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் யார்? யார்?இந்தியத் துணைக் கண்டத்தின் மாபெரும் இஸ்லாமிய இயக்கமான ஜமாஅத்தே இஸ்லாமியின் வரலாறு கூறும் முதல் தொகுதி…!₹40 -
ஜமாஅத் கடந்து வந்த பாதை – 2 (மின்னூல் – E-Book)
E-Book
ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை, அனைத்து மக்களும் ஒரே தாய் தந்தையின் வழித்தோன்றல்கள் எனும் உண்மைகளை மனிதன் மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும்.இந்தக் கொள்கைகளை ஏற்றுச் செயல்படுத்தும்படி மக்கள் அனைவரையும் அழைக்கவே ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் ஏற்படுத்தப்பட்டது.அதன் வரலாற்றின் இரண்டாம் தொகுதியே இந்நூல்₹95 -
ஜமாஅத் கடந்து வந்த பாதை – 3 (மின்னூல் – E-Book)
E-Book
முஸ்லிம் என்றால் யார் என்றதும் நம்முடைய மன-துக்-குள் இரட்டைப் பரிமாணங்களைக் கொண்ட, வெளிப்படையான புறத் தோற்ற அடையாளங்களோடு மட்டுமே தொடர்புடைய வரைவிலக்கணம்தான் நிழலாடும். அதற்கு முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தை வரைவிலக்கணத்தின் மூன்றாவது பரிமாணத்தை (Third dimension) மாநாட்டின்போது தாம் ஆற்றிய ஜும்ஆ உரையில் முன்வைக்கின்றார், மௌலானா அபுல் அஃலா மௌதூதி!
அந்த மூன்றாவது பரிமாணம் ஏற்படுத்துகின்ற அதிர்வும் தெளிவும் இனிமையானவை! மனத்தை லேசாக்கிவிடுபவை! சுவனத்திற்குச் செல்கின்ற பாதையில் மண்டிக் கிடக்கின்ற பனிமூட்டத்தை விரட்டியடிப்பவை! மனத்தை ஒருமுகப்படுத்துபவை!
₹160 -
ஜமாஅத் கடந்து வந்த பாதை – 4 (மின்னூல் – E-Book)
E-Book
விடுதலை வேட்கையும் மக்கள் போராட்டங்களும் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டிருக்க, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கான நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த கொந்தளிப்பான நாள்களில் அலஹாபாதில் நடந்த ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டின் நிகழ்ச்சித் தொகுப்பை விவரிக்கின்ற நூல்தான் இந்த நூல்.
₹170 -
ஜமாஅத் கடந்து வந்த பாதை – 5 (மின்னூல் – E-Book)
E-Book
இயக்கத் தலைவர்களின் எழுச்சியுரைகள், இயக்க ஊழியர்களின் பரிந்துரைகள், அன்றையக் காலத்துச் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்ற தகவல்கள், செயல் அறிக்கைகள் மீதான கருத்துரைகள் என இந்த மாநாடுகள் பற்றிய விவரங்களை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது இந்த நூல்.
₹275 -
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதாரங்களில் ஒளியில்! (மின்னூல் – E-Book)
E-Book
ஜமாஅத் ஒரு கொள்கை வாய்ந்த குறிப்பிட்ட எந்த ஒரு வகுப்பையும் சாராத அமைப்பாகும். மதம், சமுதாயம், வர்ணம், இனம், மொழி போன்ற அனைத்து பாகுபாடுகளை விட்டும் மேலோங்கி நாட்டு மக்கள் அனைவரையும் அது சத்தியத்தின்பால் அழைக்கிறது. மனிதர்களுக்காக இறைவன் வழிகாட்டுதலின்பால் தொடக்கத்திலிருந்து அடிப்படையாகவும் அருளிய அழைப்பு விடுக்கிறது. இதுவே ஜமாஅத்துடைய அழைப்பின் மையக் கருத்தாகவும் இருக்கிறது. அதனுடைய நடவடிக்கைகள், ஈடுபாடுகள் அனைத்தும் அந்த அடிப்படைக் கருத்தை மையமாகக் கொண்டே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.
https://iftchennai.in/product-category/books/tamil-books/%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
₹70