-
அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு (மின்னூல் – E-Book)
E-Book
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூயவாழ்வை எண்ணிலடங்காத எழுத்தாளர்கள் நூலாக வடித்துள்ளனர். இந்த நற்பேறு இறுதித் தீர்ப்பு நாள்வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதனைக் குறித்து எத்தனை பேர் எழுதினாலும் – எவ்வளவுதான் எழுதினாலும் பொருள் வறட்சி ஏற்பட முடியாது. அலுப்புத் தட்டுவதாக முறையிடவும் முடியாது. ஆம், இத்தகைய இனிய தித்திப்பான ஓர் அம்சம் இது. புனித நபியின் தூய வாழ்வில் எத்தனை அம்சங்களும் – அந்த அம்சங்களுக்கு எத்தனை தேட்டங்களும் உள்ளனவெனில், எவருமே ‘நான் நபிவாழ்வை முழுமை-யாக எடுத்துரைத்துவிட்டேன்’ என்று வாதிட முடியாது. அத்தனை பெரியதும் நிறைவுடையதும் செறிவுடையதுமாகும் இது.₹250 -
அண்ணல் நபிகளாரின் அருமைத் தோழர்கள் (மின்னூல் – E-Book)
E-Book
ஜுலைபிப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி), தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஹுஸாஃபா (ரலி), அபூதர்தா (ரலி), அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரலி), ஸயீத் பின் ஜைத் (ரலி) ஆகிய நபித்தோழர்களைக் குறித்து இந்நூல்.₹120 -
இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர் (மின்னூல் – E-Book)
E-Book
குர்ஆன் கூறும் குடும்பவியலைக் குறைவின்றிச் செயல்படுத்திக் காட்டியவர்கள். குடும்பத்தில் அண்ணலார் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைக் குவலயத்திற்குச் சொன்னவர்கள்.
துணைவியர்களின் பெயர்கள் என்ன; எத்தனை ஆண்டுகள் அண்ணலாருடன் வாழ்ந்தார்கள்; அவர்களின் தூய வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்ன என்ற
பல விவரங்கள் நம்மில் பலருக்குத் தெரியாது.அந்தக் குறையைப் போக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.₹55 -
இஸ்லாமிய இயக்கம் ஏன்? எதற்கு? (மின்னூல் – E-Book)
E-Book
ஒவ்வொரு இயக்கத் தோழரும் தனிப்பட்ட முறையிலும் குழு ரீதியாகவும் பல முறை இந்நூலை ஆய்ந்து படித்து, இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை தம் நெஞ்சங்களில் பசுமையாக பதித்துக் கொள்ள வேண்டும். குறிக்கோளை சரியாகப் புரிந்து கொண்டு அதனைக் கடைப்பிடிக்கவும் இயக்கத்தை சரிவர நடத்தவும், இஸ்லாமிய அழைப்பை சுலபமாக எடுத்துரைப்பதற்கும் இது அவசியமாகிறது. ஆகவே ஒவ்வொரு தொண்டரும் இதனைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
இயக்கத் தொண்டர்களை நோக்கித்தான் இந்நூல் உரையாடு-கிறது; ஆயினும் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள பொதுமக்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும்
₹40 -
ஒழுக்கம் பேண ஒரே வழி (மின்னூல் – E-Book)
E-Book
மார்க்கப் பேரறிஞர் சையித் அபுல் அஃலா மௌதூதி அவர்கள், இச்சிறு நூலில் ஒழுக்கச் சிதைவுக்குரிய காரணங்களைத் தத்துவரீதியாக முழுவதும் அலசி ஆராய்ந்து “ஒழுக்கம் பேண வழி எது?” என்பதைத் தமக்கே உரிய சிறந்த முறையில் விளக்குகிறார்கள்.
₹55 -
சத்தியப் பாதையில் லட்சியப் பயணம் (மின்னூல் – E-Book)
E-Book
இஸ்லாம் எனும் சத்திய நெறியின் ஆழத்தையும் அகலத்தையும் நுணுகி ஆராய்ந்து, அதன் நுட்பத்தையும் – திட்பத்தையும் விஞ்ஞான ரீதியாக விளக்கும் நூல்!
₹60 -
நபித்தோழர்கள் சீரிய வரலாறு (மின்னூல் – E-Book)
E-Book
அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த தோழர்களில் பன்னிருவரின் தியாக வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக விளக்கும் நூல்!
₹180 -
நபித்தோழியர் வரலாறு (மின்னூல் – E-Book)
E-Book
நபத்தோழியரின் சீரிய வரலாறு, அவர்தம் தியாகங்கள், மனிதகுலத்துக்கு வழிகாட்டக் கூடிய அவர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து விளக்குகிறது!
₹140 -
ஜ.இ.ஹி. அமைப்புச் சட்டம் (மின்னூல் – E-Book)
E-Book
மனிதர்களிடம் பரந்து கிடக்கும் பலதரப்பட்ட ஆற்றல்களும், திறமைகளும் ஒன்று குவிக்கப்பட்டு கூட்டு முயற்சியின் அடிப்படையில் – கட்டுக்கோப்பான முறையில் பலமுனைத் திட்டங்களுடன் அவர்கள் ஒரே தலைமையின் கீழ் செயலாற்றுகின்ற போது ‘‘ஜமாஅத் அமைப்பின்” பலன்கள் அவர்கள் முன் குவிவதைக் காணலாம்.
₹45 -
இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர் – ஒலி நூல் (Audio Book)
இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்
– ஒலி நூல் (Audio Book)
குர்ஆன் கூறும் குடும்பவியலைக் குறைவின்றிச் செயல்படுத்திக் காட்டியவர்கள். குடும்பத்தில் அண்ணலார் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைக் குவலயத்திற்குச் சொன்னவர்கள்.
துணைவியர்களின் பெயர்கள் என்ன; எத்தனை ஆண்டுகள் அண்ணலாருடன் வாழ்ந்தார்கள்; அவர்களின் தூய வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்ன என்ற
பல விவரங்கள் நம்மில் பலருக்குத் தெரியாது.அந்தக் குறையைப் போக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.Physical Book
E-Book
₹55