-
இஸ்லாமிய இயக்கத்தின் முன்னுரிமைகள்..!
₹40இன்றையக் காலத்தில் இஸ்லாமிய இயக்கத்தைப் பற்றிய சரியான புரிதலை விவரிப்பதுதான் இந்நூல்.
பொலிட்டிகல் இஸ்லாம், சூஃபி இஸ்லாம் போன்ற கூப்பாடுகளின் பின்னால் இயங்குகின்ற நுண்ணரசியலை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
அழைப்புப் பணியில் அலட்சியத்தை முற்றாகத் துறந்தாக வேண்டிய அவசியத்தை அறிவுறுத்துகிறது இந்நூல்.
புதிய காலகட்டத்துடன் இயைந்து போகின்ற திட்டமிடலின் குறிப்புகள் ஒவ்வொரு கோடி வைரங்களுக்குச் சமம்.
Author: Dr. Qurshid Ahmed
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உமர் (ரலி)
₹1100உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“யாருமே கஷ்டப்பட்டு உழைக்காமல், யா அல்லாஹ்! எனக்கு வாழ்வாதாரத்தைக் கொடு என்று கேட்காதீர்கள். ஏனென்றால் தங்கமும் வெள்ளியும் விண்ணில் இருந்து
கொட்டாது. ஏதாவது உழைப்பில் ஈடுபடுபவருக்குத்தான் அல்லாஹ் வாழ்வாதாரம் வழங்குகிறான்.” இவ்வாறு கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை ஓதுவார்: “பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்” (திருக்குர்ஆன் 62:10)
(நிளாமுல் ஹுகூமதுல் இஸ்லாமிய்யா)Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உஸ்மான் (ரலி)
₹800உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், குடும்பம், வம்சம், இஸ்லாத்திற்கு முந்தைய காலம், இஸ்லாத்தை ஏற்ற பிறகு, திருமணம், சோதனை, அபிசீனியா ஹிஜ்ரத், குர்ஆனுடன் தொடர்பு, நபிகளாருடன் நெருக்கம், நற்பண்புகள், மதீனா வாழ்வு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள், நாட்டு நலனில் அவரின் பொருளாதாரப் பங்களிப்பு, இரண்டு கலீஃபாக்களுடன் அவருடைய நெருக்கம், அவருடைய ஆட்சியில் அடைந்த வெற்றிகள், கொலையில் முடிந்த பெரும் சோதனை போன்றவை குறித்து ஏராளமான வரலாற்றுச் செய்திகளை இந்நூல் பேசுகிறது.
Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஹஜ் – உம்ரா வழிகாட்டி கையேடு
₹150ஹஜ், உம்ராவை நிறைவேற்றும் வழிமுறைகளை விரிவாக விளக்கும் நூற்கள் பல உள்ளது. ஆனால், ஹஜ்ஜின் போது ஓத வேண்டியவற்றை நினைவில் வைப்பது ஹாஜிகள் பலருக்கு கடினமாக உள்ளது. உதாரணமாக, ஸயீயின் தொடக்கத்தில் என்ன துஆ, திக்ர் ஓத வேண்டும்? கூட்ட நெரிசலில், பையில் உள்ள நூலை எடுத்து ஓதுவதும் சிரமமே.
வாழ்வில் ஒரு முறை செய்யும் கடமை என்பதால், சரியாக நிறைவேற்றவில்லையோ என்ற கவலை ஹாஜிகள் பலருக்கு உள்ளது.
இதனை நீக்கும் விதமாக, ஹஜ் உம்ராவின் சுருக்க கையேட்டினை தயாரித்து உள்ளோம். இதில் முக்கியமான வழிபாட்டு முறைகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. இஹ்ராம் ஆடையில், கழுத்தில் தொங்கவிட்டவாறே இந்நூலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Review:
https://youtube.com/shorts/U3R3S47TC9s?feature=share
Author: Dr. J. Mohideen
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஹஜ்ஜின் நாயகர்
₹80* ஏன் மக்காவில் போய்தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டுமா?
* அங்கே உள்ள கறுப்புக் கல்லை ஏன் முத்தமிடுகிறீர்கள்? அவை மூடநம்பிக்கை இல்லையா?
* இறைவன் கருணை உள்ளவன் என்று சொல்கிறீர்கள். இறைவனை திருப்திப்படுத்த அநியாயமாக ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடலாமா?
* இதர மத நண்பர்களை ஏன் மக்காவில் உள்ள கஅபாவில் அனுமதிப்பதில்லை?
* ஏன் மேற்குத் திசையை நோக்கி முஸ்லிம்கள் வழிபடுகிறீர்கள்?இவ்வாறாக தங்கள் மனத்துக்குள் கேள்விகளை அடுக்கடுக்காக வைத்திருக்கும் சகோதர சமயத்தவர்களுக்கு விடை கூறும் வகையில் இந்த நூல் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது.
Author: V.S. Mohammed Ameen
Publisher: ISLAMIC FOUNDATION TRUST





