-
அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு (மின்னூல் – E-Book)
E-Book
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூயவாழ்வை எண்ணிலடங்காத எழுத்தாளர்கள் நூலாக வடித்துள்ளனர். இந்த நற்பேறு இறுதித் தீர்ப்பு நாள்வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதனைக் குறித்து எத்தனை பேர் எழுதினாலும் – எவ்வளவுதான் எழுதினாலும் பொருள் வறட்சி ஏற்பட முடியாது. அலுப்புத் தட்டுவதாக முறையிடவும் முடியாது. ஆம், இத்தகைய இனிய தித்திப்பான ஓர் அம்சம் இது. புனித நபியின் தூய வாழ்வில் எத்தனை அம்சங்களும் – அந்த அம்சங்களுக்கு எத்தனை தேட்டங்களும் உள்ளனவெனில், எவருமே ‘நான் நபிவாழ்வை முழுமை-யாக எடுத்துரைத்துவிட்டேன்’ என்று வாதிட முடியாது. அத்தனை பெரியதும் நிறைவுடையதும் செறிவுடையதுமாகும் இது.₹180 -
அண்ணல் நபிகளாரின் அருமைத் தோழர்கள் (மின்னூல் – E-Book)
E-Book
ஜுலைபிப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி), தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஹுஸாஃபா (ரலி), அபூதர்தா (ரலி), அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரலி), ஸயீத் பின் ஜைத் (ரலி) ஆகிய நபித்தோழர்களைக் குறித்து இந்நூல்.₹120 -
அண்ணல் நபிகளார் வாழ்வினிலே (மின்னூல் – E-Book)
E-Book
அண்ணலார் (ஸல்) அவர்களின் நானூறுக்கும் மேற்பட்ட அருள்மொழிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன்!
₹250 -
இதுதான் இஸ்லாம் பாகம் 1, 2 (மின்னூல் – E-Book)
E-Book
இஸ்லாத்தைக் குறித்து தெளிவான, முழுமையான கருத்துகளை எடுத்துக் கூறுகிறது.
இளைஞர்களுக்காக எழுதப்பட்டது. இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை பலரின் உள்ளங்களிலிருந்து களைந்தது; களைந்து வருகிறது.
ஒவ்வொருவரும் – படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய, பிறருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய, சிந்தனைக்குரிய -சிந்தைக்கினிய நூல் இது!
பிரெஞ்சு, ஆங்கிலம், அரபி உள்ளிட்ட நாற்பத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
₹160 -
இயக்கத் தோழர்களுக்கு இனிய வழிகாட்டி (மின்னூல் – E-Book)
E-Book
ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வோர் இயக்கத் தோழரும் கட்டாயம் படிக்க வேண்டியவழிகாட்டி நூல்…!
ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் உளத்தூய்மைக்கான உன்னதக் குறிப்புகள்…! அத்தனையும் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில்! இந்த வழி காட்டி நூல் உங்கள் வாழ்வையே புரட்டிப் போட்டு விடும்…!
₹120 -
இஸ்லாத்தின் அரசியல் கொள்கை (மின்னூல் – E-Book)
E-Book
அரசியல் பாடம் கற்கும் மாணவர்களுக்கும், மனித வாழ்வின் மிக முக்கியத் துறையான அரசியலில் இஸ்லாம் வழங்கும் வழிகாட்டுதல் என்ன எனத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கும் இந்தச் சிறுநூல் பெரிதும் பயன்தரும்.
₹60 -
இஸ்லாமிய இயக்கம் (மின்னூல் – E-Book)
E-Book
சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்ன, நாம் எத்தகைய வாழ்வு வாழவேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. முஸ்லிம்களின் முக்கியப் பொறுப்புகள் யாவை, தீனை – மார்க்கத்தை நிலைநாட்டுவதன் கருத்து என்ன, தேவை என்ன போன்ற அடிப்படை செய்திகள் தக்க ஆதாரங்களுடன் அழுகுற எடுத்துரைக்கிறது.
₹60 -
இஸ்லாமிய இயக்கம் ஏன்? எதற்கு? (மின்னூல் – E-Book)
E-Book
ஒவ்வொரு இயக்கத் தோழரும் தனிப்பட்ட முறையிலும் குழு ரீதியாகவும் பல முறை இந்நூலை ஆய்ந்து படித்து, இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை தம் நெஞ்சங்களில் பசுமையாக பதித்துக் கொள்ள வேண்டும். குறிக்கோளை சரியாகப் புரிந்து கொண்டு அதனைக் கடைப்பிடிக்கவும் இயக்கத்தை சரிவர நடத்தவும், இஸ்லாமிய அழைப்பை சுலபமாக எடுத்துரைப்பதற்கும் இது அவசியமாகிறது. ஆகவே ஒவ்வொரு தொண்டரும் இதனைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
இயக்கத் தொண்டர்களை நோக்கித்தான் இந்நூல் உரையாடு-கிறது; ஆயினும் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள பொதுமக்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும்
₹40 -
இஸ்லாமிய வாழ்வு – குத்பாப் பேருரைகள் (மின்னூல் – E-Book)
E-Book
மௌலானா மௌதூதி அவர்களின் குத்பாப் பேருரை நூல் சாதாரணப் புத்தகம் அல்ல!கல்வியறிவற்ற பாமர மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களின் அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட விஷயங்களைக் கொண்டே – அடிப்படையான உண்மைகளை எடுத்துரைக்கிறது.
₹290 -
உறவுகளும் உரிமைகளும் (மின்னூல் – E-Book)
E-Book
உறவுகளைச் செப்பனிடுவதிலும் அழகுபடுத்துவதிலும் “உறவுகளும் உரிமைகளும்” எனும் இந்த இனிய நூல் பெரிதும் துணை புரியும்.
₹170 -
ஒழுக்கம் பேண ஒரே வழி (மின்னூல் – E-Book)
E-Book
மார்க்கப் பேரறிஞர் சையித் அபுல் அஃலா மௌதூதி அவர்கள், இச்சிறு நூலில் ஒழுக்கச் சிதைவுக்குரிய காரணங்களைத் தத்துவரீதியாக முழுவதும் அலசி ஆராய்ந்து “ஒழுக்கம் பேண வழி எது?” என்பதைத் தமக்கே உரிய சிறந்த முறையில் விளக்குகிறார்கள்.
₹55 -
சத்தியப் பாதையில் லட்சியப் பயணம் (மின்னூல் – E-Book)
E-Book
இஸ்லாம் எனும் சத்திய நெறியின் ஆழத்தையும் அகலத்தையும் நுணுகி ஆராய்ந்து, அதன் நுட்பத்தையும் – திட்பத்தையும் விஞ்ஞான ரீதியாக விளக்கும் நூல்!
₹40 -
சமூகக் கட்டமைப்பில் பெண்களின் பங்கு (மின்னூல் – E-Book)
E-Book
பெண்ணியம் குறித்து அதிகம் பேசப்படும் இக்காலத்தில் இந்த நூல் இஸ்லாமியஅடிப்படையிலான பெண்ணியப் பார்வையை முன் வைக்கிறது. இந்த வகையில் தமிழில் இதனை முன்னோடி நூல் எனலாம்.
₹90 -
சாந்திக்கு வழி (மின்னூல் – E-Book)
E-Book
ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத ஆழிய கருத்துகளுடன், சாந்திமயமான வாழ்வை நோக்கி அழைக்கும் உன்னத படைப்பு!
₹35 -
தஃப்ஹீமுல் குர்ஆன்_அத் 1 & 2 (மின்னூல் – E-Book)
E-Book
குர்ஆனின் தொடக்கத்திலேயே அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை இடம்பெறச் செய்திருப்பதன் நோக்கம் இதுதான்: நீங்கள் உண்மையிலேயே இந்த வேதத்தின் மூலம் பயன்பெற விரும்புகிறீர்கள் எனில், முதலில் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று எடுத்துச் சொல்வதுதான் அந்த நோக்கம்.
இந்த (அல் பகறா) அத்தியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு, அருளப்பட்ட சூழ்நிலையையும் வரலாற்றுப் பின்னணியையும் தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
₹440 -
தஃப்ஹீமுல் குர்ஆன்_அத் 36_யாஸீன் (மின்னூல் – E-Book)
E-Book
“யாஸீன் திருக்குர்ஆனின் இதயம்” ஆகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த அத்தியாயம் திருக்குர்ஆனின் செய்தியையும் அழைப்பையும் இதயங்கள் சிலிர்க்கும் வகையிலும், தேக்க நிலையை உடைத்தெறியும் விதத்திலும் உணர்வுபூர்வமாக எடுத்துரைப்பதால் உயிர்த்துடிப்புமிக்க இதயமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
₹75 -
திருக்குர்ஆன் விளக்கவுரை – (அத்தியாயம் 21 – அல் அன்பியா) (மின்னூல் – E-Book)
E-Book
எச்சரிக்கையூட்டும் வசனங்களுடன் ஆரம்பமாகின்றது அத்தியாயம் அல்அன்பியா. தொடர்ந்து பெருமானார் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துகின்ற, நபிகளார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்து வந்த தூதுத்துவம் மற்றும் மறுமை வாதங்களை விளக்குகின்ற வசனங்கள் அமைந்துள்ளன. இவைகளின் விரிவுரைகளையும் இதில் காணலாம்.
₹140 -
தீமைகள் புயலாய் வீசும் போது (மின்னூல் – E-Book)
E-Book
சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் தீமைகள் புயலாய் வீசும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் நூல்!
₹45 -
தீனை நிலைநாட்டுங்கள் (மின்னூல் – E-Book)
E-Book
முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முக்கியமான பொறுப்பை உணர்த்துகின்ற ஆற்றல்மிக்க வரிகளையும் விளக்கங்களையும் கொண்ட நூல்.
₹110 -
நபித்தோழர்கள் சீரிய வரலாறு (மின்னூல் – E-Book)
E-Book
அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த தோழர்களில் பன்னிருவரின் தியாக வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக விளக்கும் நூல்!
₹160