-
அழைப்பாளனுக்கு விடுமுறை இல்லை…!
பட்டம், பதவி, பணம், அரசு, அதிகாரம் என அற்பமான ஆதாயங்களை மையப்படுத்தியே கட்சிகளும் கழகங்களும் மன்றங்களும் அமைப்புகளும் இயங்கிக் கொண்டிருந்த சூழலில், சாதி, மதம், குடும்பம், கோத்திரம் போன்றவற்றின் குறுகிய நலன்களுக்காகவே அரசியல், சமூகச் செயல்பாடுகள் சூடுபிடித்திருந்த விறுவிறுப்பான நாள்களில், அவை அனைத்தையும் முற்றாக ஒதுக்கித் தள்ளிவிட்டு இறைவனின் உவப்பையும் மறுமையில் மகத்தான வெற்றியையும் பெறுவதை மட்டுமே ஒற்றை உந்துசக்தியாகக் கொண்டு இயங்க வாருங்கள் என்கிற வித்தியாசமான, புரட்சிகரமான, அதிரடியான அழைப்புடன் களமிறங்கிய போராளிகளைப் படம் பிடித்துக் காட்டுகின்ற நூல்தான் “அழைப்பாளனுக்கு விடுமுறை இல்லை…!”
Author: Moulana Naeem Siddiqui
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாத்தின் தனித்தன்மைகள்
இஸ்லாம்….
· இது, முஸ்லிம்கள் பின்பற்றும் மதம்.
· அல்லாஹ் என்ற உருவமற்ற இறைவனை வணங்கும் மக்களின் மதம்.
· ஐவேளை இறைவனைத் தொழச் சொல்லும் மதம்..
· வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருக்கக் கட்டளையிடும் மதம்..
· மக்காவை நோக்கி, ஹஜ் என்ற புனிதப் பயணம் மேற்கொள்ளச் சொல்லும் மதம்.
இதைத் தாண்டி பொது மக்கள் மத்தியில் இஸ்லாத்தைப் பற்றிய புரிதலும் தெளிவும் குறைவாகவே உள்ளன. இறைவழிபாடும், விரதமும், புனிதப் பயணங்களும் அனைத்து சமயங்களுக்கும் பொதுவானவை. இந்நிலையில் இஸ்லாம் எவ்வகையில் தனித்துவமிக்கது என்பதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். இதன் மூலம், இஸ்லாம் குறித்த விரிவான பார்வையும் கிடைக்க வாய்ப்புள்ளது.Author: Dr. J. Mohideen
Publisher: Islamic Foundation Trust -
நாம் எங்கே சென்றுகொண்டிருக்கின்றோம்…?
புதியதோர் உலகத்தைப் படைக்க விரும்புகின்ற இஸ்லாமிய இயக்க இளவல்களும் இளம் பெண்களும் அவசியம் வாசித்தாக வேண்டிய நூல் இது.
Author: T. Azeez Luthfullah
Publisher: ISLAMIC FOUNDATION TRUST