-
அலீ (ரலி)
இந்நூல் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களுடைய பிறப்பு முதல் உயிர்த் தியாகம் வரை முழுமையாகப் பேசுகிறது.
அவருடைய முன்னோர்கள் தொடங்கி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை, நபிகளாருடன் நெருக்கம், கல்வியில் சிறப்புத் தகுதி பெற்றமை, கற்றுக்கொடுப்பதில் ஏற்பட்ட ஆர்வம், குடும்பம், ஆட்சிக் காலம், ஆட்சியில் ஏற்பட்ட சோதனைகள் என்று ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அலீ (ரலி) அவர்களைக் குறித்த உண்மைகளை மட்டுமே இந்த வரலாற்று நூல் பேசுகிறது.
Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உமர் (ரலி)
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“யாருமே கஷ்டப்பட்டு உழைக்காமல், யா அல்லாஹ்! எனக்கு வாழ்வாதாரத்தைக் கொடு என்று கேட்காதீர்கள். ஏனென்றால் தங்கமும் வெள்ளியும் விண்ணில் இருந்து
கொட்டாது. ஏதாவது உழைப்பில் ஈடுபடுபவருக்குத்தான் அல்லாஹ் வாழ்வாதாரம் வழங்குகிறான்.” இவ்வாறு கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை ஓதுவார்: “பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்” (திருக்குர்ஆன் 62:10)
(நிளாமுல் ஹுகூமதுல் இஸ்லாமிய்யா)Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
உஸ்மான் (ரலி)
உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், குடும்பம், வம்சம், இஸ்லாத்திற்கு முந்தைய காலம், இஸ்லாத்தை ஏற்ற பிறகு, திருமணம், சோதனை, அபிசீனியா ஹிஜ்ரத், குர்ஆனுடன் தொடர்பு, நபிகளாருடன் நெருக்கம், நற்பண்புகள், மதீனா வாழ்வு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள், நாட்டு நலனில் அவரின் பொருளாதாரப் பங்களிப்பு, இரண்டு கலீஃபாக்களுடன் அவருடைய நெருக்கம், அவருடைய ஆட்சியில் அடைந்த வெற்றிகள், கொலையில் முடிந்த பெரும் சோதனை போன்றவை குறித்து ஏராளமான வரலாற்றுச் செய்திகளை இந்நூல் பேசுகிறது.
Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நான்கு கலீஃபாக்களின் வரலாறுகளும்…
அபூபக்கர் (ரலி)
உமர் (ரலி)
உஸ்மான் (ரலி)
அலீ (ரலி)நான்கு கலீஃபாக்களின் வரலாறுகளும் ரூ2727 மட்டுமே
Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹3300 -
மக்கள் சேவை
முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தினர் என்றும், ஒருவர் மற்றவரது இன்ப – துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. எனினும் அது முழு மனிதகுல நன்மைக்கும் பயனுக்கும் பொறுப்பேற்கிறது.
Author: Moulana Syed Jalaludeen Umari
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹240