-
இறைவழியில் செலவு அருள்வழியில் வரவு
₹75நாம் இந்த உலகில் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை; போகும்போதும் எடுத்துச் செல்லப் போவதில்லை. எடுத்துப் போகவும் முடியாது. இடையில் நாம் ஈட்டிய அனைத்தையும் முழுமையாக அனுபவிக்கவும் முடியாது. எனவே நம்மிடம் இருப்பதைப் பிறருக்கு வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். அவர்கள் அடையும் மகிழ்ச்சியில்தான் நம் மகிழ்ச்சியும் அடங்கி உள்ளது. மகிழ்ச்சி பெறுவதில் இல்லை, கொடுப்பதில்தான் உள்ளது என்பதை அப்போது உணர்வோம். இத்தனை காலம் அதனைச் செய்யாதிருந்துவிட்டோம் என்று கவலைப்படுவோம்.
கஞ்சத்தனத்தைக் கசக்கி எறியுங்கள், தாராளத் தன்மையைத் தனதாக்கிக் கொள்ளுங்கள்.
வறுமையைக் கொண்டு பயமுறுத்தும் ஷைத்தானை ஓடஓட விரட்டுங்கள். செல்வத்தை மேலும் வளரச் செய்யும் தான தர்மங்களை ஓடி ஓடிச் செய்யுங்கள்.
ஊரான் பிள்ளைகளுக்கு வாரி வழங்கினால் நம் பிள்ளைகளை இறைவன் ஊட்டி வளர்ப்பான் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.
வாரி வழங்கினால் இம்மையிலும் வெற்றி! மறுமையிலும் வெற்றி.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன?
₹175இஸ்லாம் வருவதற்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்தது, மனித குலம் எந்த மாதிரியான வாழ்வியல் கட்டமைப்பின் கீழ் வாழ்ந்தார்கள், அன்றைய மக்களிடம் எந்த மாதிரியான தீமைகள் புரையோடி போய் கிடந்தன, அன்றைய ஆட்சியாளர்கள், மன்னர்கள் மக்களை எந்த அளவு சுரண்டி அடக்கி ஒடுக்கி அடிமைத்தனமாக வைத்திருந்தார்கள், கடவுள் என்று எதையெல்லாம் மக்கள் வணங்கினார்கள்? மதத்தின் பெயரால், மன்னரின் பெயரால் எவ்வளவு பெரிய அடக்குமுறைகளும் தீண்டாமைகளும் தலைவிரித்து ஆடின. சாதியப் பெருமைகளும், பெண்களை மதிக்காத குணமும் எவ்வளவு வேரூன்றி இருந்தன என்று நீங்கள் பார்க்க வேண்டும்.
பிறகு இஸ்லாம் இந்த உலகிற்கு வந்தவுடன் மனித குலம் அடைந்த நன்மைகள், அருட்கொடைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே இஸ்லாம் மகத்தான அருட்கொடை களை இந்த உலகிற்கு வழங்கி மாபெரும் புரட்சியையே ஏற்படுத்தி இருக்கிறது என்ற உண்மை புரிய வரும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 38 (ஸாத்)
₹120{65} (நபியே! இவர்களிடம்) கூறும்: ‘நான் எச்சரிக்கை செய்பவன் ஆவேன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் ஏகன்; அடக்கியாள்பவன்; {66} மேலும் வானங்கள் மற்றும் பூமி இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்தின் அதிபதி; வலிமை மிக்கவன்; பெரிதும் பிழைபொறுப்பவன்.’ {67} இவர்களிடம் கூறும்: ‘இது ஒரு மாபெரும் செய்தி! {68} நீங்களோ இதனை(ச் செவியேற்றும்) புறக்கணிக்கின்றீர்களே!’ (திருக்குர்ஆன் 38 : 65-68)
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹140 -
பதவி மோகம் படுத்தும் பாடு
₹60இன்று பதவி என்பது அதிகாரத்தின் அடையாளமாக, புகழாசையாக, பெருமைக்குரியதாக விளங்கி வருகிறது. உலகியல் இன்பங்களில் ஒன்றாக பதவி மோகம் மாறி விட்டது. இதனால் மனிதர்களுக்கிடையில் போட்டி மனப்பான்மை உருவாகி, பொறாமை எண்ணத்தை வளர்க்கிறது. இது மேலும் வெறுப்பு, சண்டை சச்சரவுகள் என்ற பின் விளைவுகளை அதிகரிக்கச் செய்கிறது. இன்று சமூகத்தில் தோன்றியுள்ள பல்வேறு குழப்பங்கள், நெருக்கடிகளுக்கு பதவி மோகம், பேராசை, பெருமை போன்ற தீய பண்புகளே காரணமாகத் திகழ்ந்து வருகின்றது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST




